பிரதமரை தேர்ந்தெடுக்கும் கூட்டணியில் அ.ம.மு.க இடம்பெறும்-டி.டி.வி. தினகரன்

காவிரி விவகாரத்தில் கர்நாடகாவிடம் இருந்து தண்ணீரை பெற்று தர முடியவில்லை.வருகின்ற ஜனவரியில் எங்களது முழு நிலைப்பாட்டை தெரிவித்து விடுவோம்.
டி.டி.வி. தினகரன்.
டி.டி.வி. தினகரன்.
Published on

தஞ்சாவூர்:

தஞ்சையில் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி இல்லை என்று அ.தி.மு.க பிரிந்துள்ளது.

ஜெயலலிதா பற்றி பேசும்போது அமைதியாக இருந்தவர்கள். இப்போது டெல்லி சென்று ஏமாற்றத்துடன் திரும்பி உள்ளனர்.

அதுதான் கூட்டணி விரிசலுக்கு காரணமாக உள்ளதா அல்லது அதையும் தாண்டி வேறு காரணம் உள்ளதா என தெரியவில்லை.

ஜெயலலிதா தலைமையில் இருந்த கட்சி தான் உண்மையான அ.தி.மு.க.

மக்கள் மத்தியில் தி.மு.க. கடும் அதிருப்திக்கு ஆளாகி உள்ளது.

2019 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் கூட்டணி பலத்தால் வென்றனர்.

தி.மு.க- காங்கிரஸ் கூட்டணி வென்றால் தமிழகத்திற்கு அனைத்து கிடைக்கும் என்கிறார்கள்.

காவிரி விவகாரத்தில் கர்நாடகாவிடம் இருந்து தண்ணீரை பெற்று தர முடியவில்லை. இவர்கள் கூட்டணி அமைத்து மக்களை ஏமாற்ற முடியாது.

அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ஆயிரம் தருவோம் என்றார்கள்.

தற்போது உரிமைத்தொகை கிடைக்காத ஒவ்வொரு குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டு உள்ளது.

இந்த ஆட்சி விடியல் தரும் ஆட்சி அல்ல. சசிகலாவிடமிருந்து பன்னீர்செல்வம் பிரிந்து சென்றதால் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார்.

மத்தியில் தேசிய கட்சிகள் ஆட்சி அமைந்தாலும் மாநிலத்தின் உரிமைகளுக்கு மாநில கட்சிகள் தான் போராட முடியும்.

அதேபோல் பாராளுமன்றத் தேர்தலிலும் மாநில கட்சிகளுக்கு ஆதரவளிக்கும் போது தான் தட்டிக் கேட்க முடியும்.

இரட்டை இலை மட்டும் இல்லையென்றால் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க மூட்டையிலிருந்து நெல்லிக்காய் போல சிதறும். ஜாதி வாரி கணக்கெடுப்பு அவசியம். அப் போது தான் உள் ஒதுக்கீடு செய்ய முடியும்.

2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க, தி.மு.க.வுக்கு மாற்றாக அ.ம.மு.க.வுக்கு மக்கள் அமோக ஆதாரவு அளிப்பார்கள்.

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் கட்சியுடன் கூட்டணி அமைப்போம்.

அப்படி வாய்ப்பு இல்லை என்றால் தனித்து போட்டியிட முடிவு செய்வோம். வருகின்ற டிசம்பர் , ஜனவரியில் எங்களது முழு நிலைப்பாட்டை தெரிவித்து விடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் ரெங்கசாமி, தஞ்சை மாநகர் மாவட்ட செயலாளர் ராஜேஸ்வரன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com