search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கம்பம் அருகே காந்தி கோவிலில் சிறப்பு வழிபாடு
    X

    காந்திஜெயந்தியையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    கம்பம் அருகே காந்தி கோவிலில் சிறப்பு வழிபாடு

    • காமயகவுண்டன்பட்டி கிராம மக்கள் காந்திக்கு 1985-ம் ஆண்டு வெண்கலத்திலான முழு உருவ சிலையை அமைத்து அதற்கு கோவில் கட்டியுள்ளனர்.
    • மகாத்மா காந்தியின் கோட்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் எனவும் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.

    கம்பம்:

    தேனிமாவட்டம் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன் பட்டி கிராம மக்கள் சுதந்திர போரட்டம் நடைபெற்ற காலகட்டத்தில் பல்வேறு போராட்டங்களில் தங்களை அதிகளவில் ஈடுபடுத்தி கொண்டு காந்தியின் கொள்கைகளை பிரசாரம் செய்துள்ளனர்.

    காந்தியின் கொள்கைகளையும், நடைமுறைகளையும் அடுத்து வரும் சந்ததியினரும் கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக, இக்கிராமத்தில் காந்திக்கு 1985-ம் ஆண்டு வெண்கலத்திலான முழு உருவ சிலையை அமைத்து அதற்கு கோவில் கட்டியுள்ளனர். இக்கோவிலை அப்போதைய துணை ஜனாதிபதியான வெங்கட்ராமன் திறந்து வைத்தார்.

    கோவில் கட்டுமான பணிக்காக மக்கள் போட்டி போட்டு கொண்டு நன்கொடைகளை வாரி வழங்கி உள்ளனர். கோவிலில் காந்தி ஜெயந்தி, நாட்டின் முக்கிய தேசிய விழாக்கள், தேசிய தலைவர்களின் பிறந்த நாட்கள் மற்றும் செவ்வாய், வெள்ளி கிழமைகளில் காந்திசிலைக்கு மாலை அணிவித்து மற்றும் சிறப்பு பூஜைகள் செய்து தேச பிதா காந்தியை கடவுளாக வழிபட்டு வருகின்றனர் கிராமமக்கள்.

    இந்நிலையில் இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இக்கோவிலில் காலை முதலே காந்தி சிலைக்கு மாலை அனிவித்து சிறப்பு பூஜைகள் செய்து ஏராளமான மக்கள் வழிபட்டு வருகின்றனர். மகாத்மா காந்தியின் கோட்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் எனவும் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.

    Next Story
    ×