search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டுக்கல் மாவட்டத்தில் 11671 பயனாளிகளுக்கு ரூ.1.97 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் அமைச்சர்கள் வழங்கினர்
    X

    நிகழ்ச்சியில் அமைச்சர்கள் அர.சக்கரபாணி, கணேசன் மற்றும் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவர் பொன்குமார் ஆகியோர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். அருகில் கலெக்டர் விசாகன் உள்பட பலர் உள்ளனர்.


    திண்டுக்கல் மாவட்டத்தில் 11671 பயனாளிகளுக்கு ரூ.1.97 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் அமைச்சர்கள் வழங்கினர்

    • தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட கலெக்டர் விசாகன், தலைமையில் நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் மொத்தமாக 11,671 பயனாளிகளுக்கு ரூ.1.97 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புச்சாரா தொழிலாளர்கள் நலவாரியங்கள் சார்பில் பதிவு பெற்ற கட்டுமானம் மற்றும் ஆட்டோ தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட கலெக்டர் விசாகன், தலைமையில் நடைபெற்றது.

    உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன், மற்றும் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரிய தலைவர் பொன்குமார் ஆகியோர் பதிவு பெற்ற கட்டுமான மற்றும் ஆட்டோ தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள், கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா நலவாரிய தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் என மொத்தம் 11,671 பயனாளிகளுக்கு ரூ.1.97 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.

    வேலுச்சாமி எம்.பி., திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி, ஜோதிபிரகாஷ், காந்திராஜன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சித் தலைவர் பாஸ்கரன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கட்டுமான நலவாரியம், உடலுழைப்பு மற்றும் இதர 15 நலவாரியங்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் நலவாரியம் ஆகியவற்றில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் 2,431 பயனாளிகளுக்கு ரூ.48.71 லட்சம் மதிப்பிலும், திருமணம் உதவித்தொகை திட்டத்தின் கீழ் 8 பயனாளிகளுக்கு ரூ.26,000 மதிப்பிலும், ஓய்வூதியம் திட்டத்தின் கீழ் 651 பயனாளிகளுக்கு ரூ.6.51 லட்சம் மதிப்பிலும், இயற்கை மரணம் நிவாரணம் திட்டத்தின் கீழ் 25 பயனாளிகளுக்கு ரூ.6.55 லட்சம் மதிப்பிலும், விபத்து மரணம் நிவாரணமாக ஒரு பயனாளிக்கு ரூ.1.05 லட்சம் மதிப்பிலும் என மொத்தம் 3,116 பயனாளிகளுக்கு ரூ.63.08 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மேலும்,

    பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்களின் பாதுகாப்பு உபகரணங்கள் 4,053 பயனாளிகளுக்கு ரூ.67.64 லட்சம் மதிப்பிலும், பதிவு பெற்ற ஆட்டோ தொழிலாளர்களின் பாதுகாப்பு உபகரணங்கள் 4,502 பயனாளிகளுக்கு ரூ.66.69 லட்சம் மதிப்பிலும் என மொத்தம் 8,555 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.1.34 கோடி மதிப்பிலான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் மொத்தமாக 11,671 பயனாளிகளுக்கு ரூ.1.97 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    விழாவில், அமைச்சர் அர.சக்கரபாணி பேசியதாவது:-

    தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அமைப்புசாரா நலவாரிய உறுப்பினர்கள் அனைவருக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நலவாரிய உறுப்பினர்களுக்கு மேலும் பல நலத்திட்ட உதவிகளை அறிவித்து வழங்கி வருகின்றார்கள். கடந்த 10 ஆண்டுகளில் நலவாரிய உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் அதிகமாக வழங்கப்படவில்லை, அதிக நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

    திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் அனைத்து மக்கள் நல பணிகளும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அமைப்புசாரா நல வாரிய உறுப்பினர்கள் 11,671 நபர்களுக்கு ரூபாய் 1 கோடியே 97 லட்சத்து 42 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை மேயர் ராஜப்பா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த 306 கிராம ஊராட்சிகளிலும் நம்ம ஊரு சூப்பர் திட்டத்தின் கீழ் தூய்மை பணிகள் நடைபெற்றது. இதனை கலெக்டர் விசாகன் ஆய்வு செய்து பணிகளை சிறப்பாக செய்ய அறிவுறுத்தினர்.

    Next Story
    ×