என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி போராட்டம் நடத்து வது தொடர்பாக தி.மு.க. கூட்டும் அனைத்து கட்சி கூட்டத்தில் தினகரன் ஆதரவாளர்கள் பங்கேற்பார்கள் என சசிகலாவின் சகோதரர் திவாகரன் கூறியுள்ளார்.

    புதுக்கோட்டை:

    நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி போராட்டம் நடத்து வது தொடர்பாக தி.மு.க. கூட்டும் அனைத்து கட்சி கூட்டத்தில் தினகரன் ஆதரவாளர்கள் பங்கேற்பார்கள் என சசிகலாவின் சகோதரர் திவாகரன் கூறியுள்ளார்.

    புதுக்கோட்டையில் இன்று நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட அரியலூர் மாணவி அனிதாவின் தற்கொலை யாராலும் ஏற்று கொள்ள முடியாதது. இந்த விவகாரத்தில் மாணவர்களை நம்ப வைத்து ஏமாற்றிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் பதவி விலக வேண்டும்.

    நீட் விவகாரம் தொடர்பாக தி.மு.க. கூட்டும் அனைத்து கட்சி கூட்டத்தில் எங்கள் அணி (தினகரன் அணி) சார்பில் எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் பங்கேற்பார்கள். எங்களுக்கு 60 எம்.எல்.ஏ.க்கள், 8 அமைச்சர்கள் ஆதரவு உள்ளது. 8 அமைச்சர்களும் இரு அணிகளும் இணைவதற்கான பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றனர்.

    அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், சசிகலா தான் பொதுச் செயலாளர் ஆகவேண்டும் என்று முதலில் கூறினார். இப்போது குழப்பி வருகிறார். இவரைப்போல் அ.தி.மு.க.வில் பல நிர்வாகிகள் உள்ளனர். அவர்கள் இன்னும் 3 மாத காலத்திற்குள் அரசியல் அனாதையாக ஆக்கப்படுவார்கள்.

    ஜெயலலிதா இருந்த போது அரசியல் நிகழ்வு என்பது வேறு. தற்போது இருக்க கூடிய அரசியல் சூழ்நிலை என்பது வேறு. தற்போதைய சூழ்நிலையில் பண்ணையார் முறையில் கட்சியையும் ஆட்சியையும் நடத்த முடியாது. அனைவரையும் அரவணைத்து சென்றால் மட்டுமே கட்சியையும் ஆட்சியையும் நடத்த முடியும்.

    எடப்பாடி பழனிசாமி உடனடியாக ராஜினாமா செய்தால் ஆட்சி காப்பாற்றப்படும். சபாநாயகர் தனபால் தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை புலியூர் நல்லாண்டவர் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை புலியூர் நல்லாண்டவர் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    விழாவில் விராலிமலை முன்னாள் ஒன்றிய தலைவர் மு.பி.மணி, குன்றாண்டார் கோவில் முன்னாள் ஒன்றிய தலைவர் சேட்டு ஆகியோர் கலந்து கொண்டனர். விழா விற்கான ஏற்பாட்டினை புலியூர் நாகராஜ், மாமுண்டி பாலண்டார் ஆகியோர் செய்திருந்தனர்.விழாவில் திரளான கலந்து கொண்டனர்.
    புதுக்கோட்டையில் அ.தி.மு.க. இரு அணிகளும் ஒரே நேரத்தில் சிலைகளுக்கு மாலை அணிவிக்க உள்ளதையடுத்து புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் இன்று 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி எம்.எல்.ஏ. ரத்தின சபாபதியின் தம்பி கார்த்திகேயனை புதுக்கோட்டை மாவட்ட செயலாளராக நியமித்து அ.தி.மு.க. அம்மா அணியின் துணைப் பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து கார்த்திகேயன் தனது ஆதரவாளர்களுடன் புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு இன்று மாலை அணிவித்து விட்டு கட்சி அலு வலகத்திற்கு செல்வதாக அறிவித்திருந்தார்.

    இது குறித்து போலீசாரிடம் தினகரன் அணியினர் அனுமதி கேட்டனர். ஆனால் அவர்களுக்கு புதுக்கோட்டையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிக்க போலீசார் அனுமதி அளிக்கவில்லை.

    இதைத்தொடர்ந்து மாலை அணிவிக்க அனுமதி கேட்டு கார்த்திகேயன் சார்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி, அனுமதி அளிக்க வேண்டும் என புதுக்கோட்டை எஸ். பி.க்கு உத்தரவிட்டார்.

    இந்த நிலையில் புதுக்கோட்டை மண்டல தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் கிளையின் அண்ணா தொழிற் சங்கம் சார்பில் அடுத்த மாதம் (அக்டோபர்) 14-ந்தேதி எம்.ஜி. ஆர். நூற்றாண்டு விழா புதுக்கோட்டையில் நடைபெற உள்ளது.

    இதை முன்னிட்டு இன்று காலை 11 மணியளவில் பழைய பஸ் நிலையத்தில் இருந்து சுமார் 10 ஆயிரம் பேர் ஊர்வலமாக சென்று எம்.ஜி.ஆர். மற்றும் அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவிக்க இருந்தனர்.

    இது தொடர்பாக முதல்- அமைச்சர் எடப்பாடிபழ னிசாமி தரப்பை சேர்ந்த கட்சியின் மாவட்ட செயலாளரும், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய தலைவருமான பி.கே.வைரமுத்து அனுமதி கோரி எஸ்.பி.யிடம் மனு அளித்தார். இருதரப்புக்கும் மாலை அணிவிக்க அனுமதி அளிக்கப்படும் என எஸ்.பி. உறுதி அளித்தார்.

    இதனிடையே ஒரே நாளில் இரு அணிகளும் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிக்க இருந்ததால் சட்டம்-ஒழுங்கு பாதிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் இன்று 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக புதுக்கோட்டை, அறந்தாங்கி, இலுப்பூர் கோட்டாட்சியர்கள் தனித்தனியாக பிறப்பித்துள்ள உத்தரவில், புதுக்கோட்டையில் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதால் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

    இந்த உத்தரவு நாளை மாலை 6 மணி வரை அமலில் இருக்கும் என்று தெரிவித்துள்ளனர். 144 தடை உத்தரவால் அ.தி.மு.க. இரு அணிகளும் இன்று மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியை ரத்து செய்துள்ளனர்.

    கீரனூர் பகுதியில் பரவும் டெங்கு காய்ச்சலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    கீரனூர்:

    கீரனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக குழந்தைகள், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டு கீரனூர் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதனால் இப்பகுதியில் கொசுகளை அழிக்க கீரனூர் தேர்வுநிலை பேரூராட்சிகளில், பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன் மற்றும் மேற்பார்வையாளர்கள், துப்புரவு தொழிலாளர்கள் வீடு, வீடாக சென்று கொசு மருந்துகளை அடித்து டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்களை அழித்து வருகின்றனர். உப்பிலியக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து மினிவேன் மூலம் வீதி வீதி கொசு மருந்துகளை அடித்து சென்றனர்.

    மேலும் பொதுமக்கள் குடிக்க பயன்படுத்ததும் குடிநீரை மூடி வைக்கவும், நீரை காய்ச்சி குடிக்கவும் அறிவுறுத்தப்பட்டன. மேலும் டெங்கு காய்ச்சல் வராமல் இருக்க அரசு சித்த வைத்திய பிரிவில் தினமும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டு வருகிறது. இதனை பொதுமக்கள் குடித்து பயன் அடையுமாறு பேரூராட்சி செயல் அலுவர் கணேசன் அறிவுறுத்தி உள்ளனர்.
    கீரனூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
    கீரனூர்:

    கீரனூர் அருகே உள்ள கொத்தமங்கலப்பட்டியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 65), ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர்.

    இவர் நேற்று இரவு கொத்தமங்கலப்பட்டி பஸ் நிறுத்தத்தில் இருந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது கீரனூரில் அடகு கடை நடத்தி வரும் ராஜேஷ் (28) என்பவர் தனது மோட்டார் சைக்கிளில் கீரனூரில் இருந்து புதுக்கோட்டை நோக்கி சென்ற போது எதிர்பாராதவிதமாக நடந்து சென்ற மாரிமுத்து மீது மோட்டார் சைக்கிள் மோதியது.

    இதில் மாரிமுத்து சம்பவ இடத்திலேயே பலியானார். ராஜேஷ் படுகாயம் அடைந்தார். தகவல் அறிந்ததும் கீரனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாரிமுத்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
    பொன்பேத்தியில் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூடக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதுகுறித்து அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டது.
    ஆவுடையார்கோவில்:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே பொன்பேத்தியில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டு உள்ளது. இந்த டாஸ்மாக் கடையால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் அந்த வழியாக செல்லும் மாணவ, மாணவிகள் பாதிக்கப்படுவதாகவும், எனவே, இந்த டாஸ்மாக் கடையை உடனடியாக மூடக்கோரி நேற்று அந்த கடையின் அருகே பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    முன்னாள் ஒன்றிய தலைவர் பொன்பேத்தி துரைமாணிக்கம், புதுக்கோட்டை தெற்கு மாவட்ட தி.மு.க. அவைத்தலைவர் பொன்துரை, மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சுந்தரபாண்டியன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பொன்பேத்தி கார்த்திகேயன், மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்த அறந்தாங்கி கலால் கோட்ட அதிகாரி பரணி, ஆவுடையார்கோவில் தாசில்தார் பவானி, அறந்தாங்கி துணை போலீஸ் சூப்பிரண்டு தட்சிணாமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் உடன்பாடு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
    ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக நெடுவாசல் பொதுமக்கள் 138-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    வடகாடு:

    வடகாடு அருகே உள்ள நெடுவாசல் உள்பட நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதைக்கண்டித்து, நெடுவாசல் பொதுமக்கள் 2–வது கட்டமாக போராட்டத்தை நடத்தி வருகின்றனர். நேற்றும் 138–வது நாளாக நெடுவாசல் நாடியம்மன் கோவில் அருகே போராட்டம் நடைபெற்றது.

    அதில், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திக்கொண்டும், திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், மத்திய - மாநில அரசுகளை கண்டித்தும் பல்வேறு கோ‌ஷங்களை எழுப்பினர்.
    இலுப்பூர் பேரூராட்சி அலுவலகத்தில் அனைவருக்கும் வீடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டுவதற்கான பணி ஆணையை அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார்.
    இலுப்பூர்:

    இலுப்பூர் பேரூராட்சி அலுவலகத்தில், அனைவருக்கும் வீடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டுவதற்கான பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கினார். அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு, 40 பயனாளிகளுக்கு ரூ.84 லட்சம் மதிப்பீட்டில் வீடுகள் கட்டுவதற்கான பணியாணைகளை வழங்கினார்.

    தொடர்ந்து இலுப்பூர் பேரூராட்சியை சேர்ந்த 36 துப்புரவு பணியாளர்களுக்கு நவீன காலணிகள், முகக்கவசம், கையுறை, தொப்பி, சீருடைகள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமசாமி, திட்ட இயக்குனர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) சந்தோஷ்குமார், வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு)செல்வராஜ், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
    எடப்பாடி அணிக்கு ஆதரவு அளித்த வந்த ரத்தினசபாபதி எம்.எல்.ஏ. தினகரன் அணிக்கு தாவப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து பெரம்பலூர் எம்.எல்.ஏ. விளக்கம் அளித்துள்ளார்.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதி சட்ட மன்ற உறுப்பினராக இருந்து வருபவர் ரத்தினசபாபதி.

    அ.தி.மு.க.வில் மாவட்ட அவைத்தலைவர் பதவி வகித்து வரும் அவர் கடந்த மாதம் அ.தி.மு.க. (அம்மா) அணி துணைப்பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனை சந்தித்து ஆதரவு அளித்தவர்களில் ஒருவர் ஆவார்.

    ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அணிகள் பிரிந்திருந்த போதிலும் எடப்பாடி அணியிலேயே நீடித்தார். இரு அணிகளும் ஒன்றாக இணைந்த பிறகு தொகுதியின் வளர்ச்சி பணிகள் மற்றும் ஒன்றுபட்ட அ.தி.மு.க.வில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அளித்து வந்தார்.

    இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக இருந்த பி.கே. வைரமுத்துவை பதவியில் இருந்து டி.டி.வி.தினகரன் நேற்று விடுவித்து அறிவிப்பு வெளியிட்டார். அவருக்கு பதிலாக புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் பதவி மணல்மேல்குடி முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் பரணி கார்த்திகேயனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    இவர் அறந்தாங்கி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரத்தின சபாபதியின் உடன் பிறந்த சகோதரர் ஆவார். இந்த நிலையில் எடப்பாடி அணிக்கு ஆதரவு அளித்த வந்த ரத்தினசபாபதி எம். எல்.ஏ. தினகரன் அணிக்கு தாவப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இன்று பிற்பகலில் அது குறித்த தனது நிலைப்பாட்டை ரத்தினசபாபதி வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.

    அரியலூரில் நேற்று நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள வந்திருந்த தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் பெரம்பலூரில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கியிருந்தார். அவருடன் நாடாளுமன்ற துணை சபா நாயகர் தம்பித்துரை, தமிழக அமைச்சர்கள் நிலோபர் கபில், பாலகிருஷ்ண ரெட்டி, வளர்மதி உள்ளிட்டோர் தங்கியிருந்தனர். அவர்களை பெரம்பலூர் தொகுதி எம்.பி. மருதராஜா வரவேற்றனர். இவர் ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்தவர்.

    ஆனால் எடப்பாடி பழனிசாமி அணி ஆதரவாளராக இருந்த பெரம்பலூர் எம்.எல். ஏ. தமிழ்செல்வன் பெரம்பலூரில் முக்கிய பிரமுகர்கள் தங்கியிருந்த ஓட்டலுக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது. மேலும் அவர் தினகரன் அணிக்கு மாறக்கூடும் என பெரம்பலூர் மாவட்டத்தில் பரவலாக பேச்சு உலவுகிறது.

    இது தொடர்பாக எம்.எல். ஏ. தமிழ்செல்வனை நேற்று நிருபர்கள் தொடர்பு கொள்ள முயன்ற போது அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இன்று காலை அவரை நிருபர்கள் தொடர்பு கொண்ட போது பேசினார். அப்போது அவர் நான் எடப்பாடி பழனிசாமி அணியில் தான் இருக்கிறேன்.

    நேற்று அரியலூர் வந்த முதல்வருக்கு எனது ஆதரவாளர்களுடன் சென்று பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தேன். மேலும் நான் நிகழ்ச்சியில் பங்கேற்காமல் குடும்பத்துடன் வெளியூர் சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது முற்றிலும் தவறானது. நான் பெரம்பலூரில் எனது வீட்டில் தான் இருக்கிறேன். பொதுமக்களிடம் வீட்டில் வைத்து குறைகளை கேட்டு வருகிறேன் என்றார்.

    கூவத்தூரில் எம்.எல்.ஏ.க்கள் தங்க வைக்கப்பட்டிருந்த போது சசிகலாவுக்கு ஆதரவாகவும், ஓ.பன்னீர் செல்வத்திற்கு எதிராகவும் தமிழ்செல்வன் எம்.எல்.ஏ. கருத்துக்களை கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
    புதுக்கோட்டையில் இண்டியன் ஒவர்சீஸ் வங்கி கிராமிய சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையம் மற்றும் மாவட்ட சமூக நலத்துறை சார்பில் மூன்றாம் பாலினத்தினர்க்கான தொழிற் பயிற்சி வகுப்பினை மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை நகராட்சி திலகர்த்திடல் அருகில் உள்ள இண்டியன் ஒவர்சீஸ் வங்கி கிராமிய சுயவேலைவாய்ப்பு பயிற்சிமையம் மற்றும் மாவட்ட சமூக நலத்துறை சார்பில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மூன்றாம் பாலினத்தினர்க்கான தொழிற் பயிற்சி வகுப்பினை மாவட்டகலெக்டர் தொடங்கி வைத்து பயிற்சி கையேட்டினை வழங்கி பேசியதாவது:

    தமிழக அரசு ஏழை, எளிய மக்கள் மா ற்றுத் திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் முன்னேற்றம் அடையும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மூன்றாம் பாலினத்தவரும் சமுதாயத்தில் உயர்ந்த இடத்திற்கு வரும் வகையில் தொழிற்பயிற்சி வகுப்புகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சி வகுப்புகள் 21.8.2017 முதல் 31.8.2017 வரை 10 நாட்களுக்கு தொடர்ந்து நடைபெற உள்ளது. இப்பயிற்சி வகுப்புகள் தினமும் காலை 10.30 மணி முதல் மாலை 5.15 மணி வரை நடைபெறும். பயிற்சி பெறும் நபர்களுக்கு மதிய உணவுடன் இலவச பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

    இப்பயிற்சி வகுப்பில் மூன்றாம் பாலினத்தவர்க்கு வீட்டு உபயோகப்பொருட்கள் தயாரித்தல் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதில் உடனடி குழம்பு வகைகள், ஊருகாய் வகைகள், ஜீஸ் வகைகள், அப்பளம் வகைகள், மசாள பொடி வகைகள், சோப்பு ஆயில் தயாரித்தல், சோப்பு தூள் தயாரித்தல், ஓம குடிநீர் தயாரித்தல், பினாயில் தயாரித்தல் உள்ளிட்ட 70 வகையான தயாரிப்பு பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது.

    மேலும் மானியத்துடன்கூடிய கடன் உதவிகள் வழங்கப்பட உள்ளது. மூன்றாம் பாலினத்தவர்க்கு மகளிர் திட்டம் சார்பில் ஒரு சுயஉதவி குழு ஏற்படுத்தப்பட்டு ரூ.2 லட்சம் முழு மானியத்தில் கடன் உதவி வழங்கப்பட்டு வருகிறது. இதே போன்று தையல் பயிற்சி, எம்ராய்டு, ஆட்டோ ஓட்டுதல் உள்ளிட்ட பல்வேறு தொழில் தொடங்க தமிழக அரசு மானியத்துடன் கூடிய கடன் உதவி வழங்கி வருகிறது.

    எனவே தமிழக அரசின் இத்தகைய தொழிற் பயிற்சி வகுப்புகளை சிறப்பாக கற்று சுயதொழில் புரிந்து சமுதாயத்தில் மற்றவர்களை போல உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்றும் மாவட்ட கலெக்டர் கணேஷ் தெரிவித்தார்.
    புதுக்கோட்டை மாவட்டத்தில் கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் நேற்று 5-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    கோட்டைப்பட்டினம்:

    கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு 8 மணி நேரம் வேலை வழங்கி இலாகா ஊழியராக்க வேண்டும். ஓய்வூதியம் வழங்க வேண்டும். கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு இலக்கு நிர்ணயம் செய்து அதிகாரிகள் மிரட்டுவதை கைவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 16-ந் தேதி முதல் அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த போராட்டம் நேற்று 5-வது நாளாக நீடித்தது. இந்த போராட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதிலும் இருந்து சுமார் 750 கிராமிய அஞ்சல் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த வேலை நிறுத்தம் காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 354 கிராமிய தபால் நிலையங்கள் திறக்கப்படவில்லை. இதனால் தபால் சேவை பாதிக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் நேற்று மீமிசலில் உள்ள தபால் நிலையம் முன்பு அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் புதுக்கோட்டை கோட்ட தலைவர் அடைக்கலம் தலைமை தாங்கினார். இதில் வீரையா, மாரிமுத்து உள்பட கிராமிய அஞ்சல் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
    புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டரங்க வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் கிணறு பணியினை மாவட்ட கலெக்டர் கணேஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டரங்க வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் கிணறு பணியினை மாவட்ட கலெக்டர் கணேஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் பிற்படுத்தப்பட்டோர் நல அரசு மகளிர் மாணவிகள் விடுதியில் சமையல் அறை, சமைக்கப்படும் உணவுகள், தங்கும் அறைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை அலுவலர்களிடம் கேட்டறிந்து ஆய்வு செய்தார்.

    மேலும் நகராட்சி பகுதியில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் ஒருங்கிணைந்த தேர்வு கூடம் புதிதாக கட்டப்படவுள்ள இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின் போது கிணறு அமைக்கும் பணியினை விரைவாக முடிக்கவும், மாணவிகள் தங்கும் விடுதிகளை தூய்மையாக பராமரிக்கவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட உத்தரவிட்டார்.
    ×