என் மலர்

  செய்திகள்

  பொன்பேத்தியில் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
  X

  பொன்பேத்தியில் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பொன்பேத்தியில் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூடக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதுகுறித்து அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டது.
  ஆவுடையார்கோவில்:

  புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே பொன்பேத்தியில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டு உள்ளது. இந்த டாஸ்மாக் கடையால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் அந்த வழியாக செல்லும் மாணவ, மாணவிகள் பாதிக்கப்படுவதாகவும், எனவே, இந்த டாஸ்மாக் கடையை உடனடியாக மூடக்கோரி நேற்று அந்த கடையின் அருகே பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

  முன்னாள் ஒன்றிய தலைவர் பொன்பேத்தி துரைமாணிக்கம், புதுக்கோட்டை தெற்கு மாவட்ட தி.மு.க. அவைத்தலைவர் பொன்துரை, மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சுந்தரபாண்டியன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பொன்பேத்தி கார்த்திகேயன், மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  இது குறித்து தகவல் அறிந்த அறந்தாங்கி கலால் கோட்ட அதிகாரி பரணி, ஆவுடையார்கோவில் தாசில்தார் பவானி, அறந்தாங்கி துணை போலீஸ் சூப்பிரண்டு தட்சிணாமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் உடன்பாடு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
  Next Story
  ×