என் மலர்tooltip icon

    செய்திகள்

    கீரனூர் பகுதியில் டெங்கு காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்
    X

    கீரனூர் பகுதியில் டெங்கு காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்

    கீரனூர் பகுதியில் பரவும் டெங்கு காய்ச்சலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    கீரனூர்:

    கீரனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக குழந்தைகள், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டு கீரனூர் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதனால் இப்பகுதியில் கொசுகளை அழிக்க கீரனூர் தேர்வுநிலை பேரூராட்சிகளில், பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன் மற்றும் மேற்பார்வையாளர்கள், துப்புரவு தொழிலாளர்கள் வீடு, வீடாக சென்று கொசு மருந்துகளை அடித்து டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்களை அழித்து வருகின்றனர். உப்பிலியக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து மினிவேன் மூலம் வீதி வீதி கொசு மருந்துகளை அடித்து சென்றனர்.

    மேலும் பொதுமக்கள் குடிக்க பயன்படுத்ததும் குடிநீரை மூடி வைக்கவும், நீரை காய்ச்சி குடிக்கவும் அறிவுறுத்தப்பட்டன. மேலும் டெங்கு காய்ச்சல் வராமல் இருக்க அரசு சித்த வைத்திய பிரிவில் தினமும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டு வருகிறது. இதனை பொதுமக்கள் குடித்து பயன் அடையுமாறு பேரூராட்சி செயல் அலுவர் கணேசன் அறிவுறுத்தி உள்ளனர்.
    Next Story
    ×