என் மலர்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் மாணவிக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை குப்பையன்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகள் திவ்யபாரதி (வயது 17), பிளஸ்-2 முடித்துள்ளார்.
இந்தநிலையில் திவ்யபாரதிக்கு நெஞ்சில் அடிக்கடி வலி ஏற்பட்டு வந்தது. இதையடுத்து அவரை அவரது பெற்றோர் புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்ததில் திவ்ய பாரதியின் நெஞ்சில் கட்டி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அறுவை சிகிச்சை மூலம் கட்டியை அகற்ற டாக்டர்கள் முடிவு செய்தனர்.
இதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு திவ்யபாரதிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இருப்பினும் அவருக்கு வலி குணமாகவில்லை. இதையடுத்து திவ்யபாரதியை அவரது பெற்றோர் மீண்டும் புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று பரிசோதனை செய்தனர். அப்போது அறுவை சிகிச்சை செய்த டாக்டர்கள் கட்டி இருக்கும் நெஞ்சு பகுதியில் அறுவை சிகிச்சை செய்யாமல் வயிற்று பகுதியில் அறுவை சிகிச்சை செய்தது பரிசோதனையில் தெரியவந்தது.
எனவே இதற்கு காரணமான டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திவ்யபாரதியின் உறவினர்கள் மற்றும் பொது மக்கள் புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் இன்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். #Tamilnews

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த ஆசிரியர்கள் பாடுபட வேண்டும் என்று மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி வனஜா பேசினார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கி என 2 கல்வி மாவட்டங்கள் செயல்பட்டு வந்தன. இந்நிலையில் அன்னவாசல், விராலிமலை, பொன்னமராவதி, குன்னண்டார்கோவில் ஆகிய 4 ஊராட்சி ஒன்றியங்களை இணைத்து இலுப்பூரை தலைமை இடமாக கொண்டு 3-வது கல்வி மாவட்டமாக இலுப்பூர் கல்வி மாவட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது.
இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை, அறந்தாங்கி, இலுப்பூர் ஆகிய 3 கல்வி மாவட்டங்களை சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் புதுக்கோட்டை அரசு கல்வியியல் கல்லூரியில் நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி வனஜா பேசியதாவது:-
அரசு அறிவித்துள்ளபடி அறந்தாங்கி, திருவரங்குளம், மணமேல்குடி, ஆவுடையார்கோவில் ஆகிய ஒன்றியங்கள் அறந்தாங்கி கல்வி மாவட்டத்திலும், புதுக்கோட்டை, அரிமளம், திருமயம், கந்தர்வக்கோட்டை கறம்பக்குடி ஆகிய ஒன்றியங்கள் புதுக்கோட்டை கல்வி மாவட்டத்திலும், அன்னவாசல், விராலிமலை, பொன்னமராவதி, குன்னண்டார்கோவில் ஒன்றியங்கள் இலுப்பூர் கல்வி மாவட்டத்திலும் இயங்கும்.
இந்த முறையில் மழலையர் பள்ளிகள், அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள், சுயநிதி மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து வகை பள்ளிகளும் இனி ஒருங்கிணைக்கப்பட்ட அமைப்பின் கீழ் இயங்கும். இனி உதவி மற்றும் கூடுதல் தொடக்கக்கல்வி அதிகாரிகள், வட்டார கல்வி அதிகாரிகள் என அழைக்கப்படுவார்கள்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்த தலைமை ஆசிரியர்களும், ஆசிரியர்களும் இணைந்து பாடுபட வேண்டும். வருகிற கல்வி ஆண்டில் அரசு பொதுத்தேர்வுகளில் புதுக்கோட்டை மாவட்டம் 100 சதவீதம் தேர்ச்சி பெற அனைவரும் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து நேற்று மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கான ஆலோசனை கூட்டம் அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட கல்வி அதிகாரிகள் சாமி, சத்தியமூர்த்தி, அறந்தாங்கி திராவிடச்செல்வம், குணசேகரன், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்ட மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் பழனிவேலு, அனைவருக்கும் கல்வி இயக்க உதவி திட்ட அலுவலர் ரவிச்சந்திரன், மாவட்ட முதன்மைகல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் சின்னப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை 31-ந் தேதி காலை 10.00 மணி யளவில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை 31-ந் தேதி காலை 10.00 மணி யளவில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளின் விவசாயம் சம்பந்தப்பட்ட கோரிக்கைகளுக்கு பதில் அளிக்க உள்ளார்கள்.
எனவே, புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை மட்டும் தெரிவித்து பயனடையலாம்.
இத் தகவலை மாவட்ட கலெக்டர் கணேஷ் தெரிவித்துள்ளார்.
நெடுவாசலில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர். #Tasmac
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். கூட்டத்தில் நெடுவாசல் பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நெடுவாசல் கிராமத்தில் உள்ள அய்யனார் கோவில், ஆதிதிராவிடர் பள்ளி அருகே ஒரு டாஸ்மாக்கடை இயங்கி வருகிறது. இதனால் அந்த பகுதியில் மது குடிப்பவர்கள் சுற்றித் திரிவதால் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல முடியவில்லை. ஆதிதிராவிடர் பள்ளிக்கு மாணவ, மாணவிகள் செல்ல சிரமப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆதிதிராவிடர் காலனியில் இருந்து இறுதி சடங்கு செய்ய சுடுகாட்டிற்கு போக முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டு வருகிறது. மேலும் விவசாய வேலைக்காக செல்லும் பெண்கள் அச்சத்துடன் அந்த வழியை கடந்து செல்கின்றனர்.
குடிப்பழக்கத்தால் தினசரி வீடுகளில் தொடர்ந்து பிரச்சினை ஏற்படுகிறது. எனவே இந்த டாஸ்மாக் கடையை அகற்ற தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல ஜெகதாப்பட்டினம் அருகே உள்ள சித்தநேந்தல் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:- சித்தநேந்தல் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்தில் அரசு சார்பில் டாஸ்மாக்கடை இயங்கி வருகிறது. இதனால் அந்த வழியாக பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் டாஸ்மாக் கடை அருகே கோவில்கள் உள்ளன.
இந்த கோவிலுக்கு பக்தர்கள் நிம்மதியாக சென்று வர முடியவில்லை. டாஸ்மாக் கடையில் மதுவை வாங்கும் குடிமகன்கள் நடுரோட்டில் வைத்து குடிக்கின்றனர். பின்னர் அங்கேயே பாட்டிலை உடைத்து போடுகின்றனர். இதனால் அந்த பகுதியில் பெண்கள் உள்பட பலரும் அந்த வழியாக செல்ல முடியவில்லை. இதனால் இந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற தகுந்த நட வடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Tasmac
கந்தர்வக்கோட்டை அருகே உள்ள கல்லாக்கோட்டை பகுதியில் குடிநீர் சரியாக விநியோகம் செய்யப்படாததால் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கந்தர்வக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள கல்லாக்கோட்டை பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் சரியாக விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட அப்பகுதி பொதுமக்கள் அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனை கண்டித்து இன்று காலை அப்பகுதி பொதுமக்கள் கல்லாக்கோட்டை பேருந்து நிலையம் அருகே திடீரென காலிகுடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்த தகவல் அறிந்ததும் கந்தர்வக் கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மன்னர் மன்னன் மற்றும் போலீசார், அதிகாரிகள் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குடிநீர் சீராக விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
கீரனூர் அருகே தேர்வு தோல்வி பயத்தால் 10-ம் வகுப்பு மாணவி மாயமானார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கீரனூர்:
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரை அடுத்த கோட்ரப்பட்டியை சேர்ந்தவர் மதியழகன். இவரது மகள் லாவண்யா (வயது 17). இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு தேர்வு எழுதியிருந்தார்.
இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி இரவு குடும்பத்தினருடன் தூங்கி கொண்டிருந்த லாவண்யா திடீரென மாயமானார். அதிகாலையில் எழுந்த அவரது பெற்றோர்கள் மகள் காணாததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தும் லாவண்யா குறித்த எந்த தகவல்களும் கிடைக்கவில்லை. இது குறித்து கீரனூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
இதற்கிடையே 10-ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு கடந்த 23-ந் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகின. எனவே தேர்வில் தோல்வியுற்றால் பெற்றோர்கள் திட்டிவிடுவார்கள் என்ற அச்சத்தில் மாணவி லாவண்யா வீட்டை விட்டு சென்றிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.
மேலும் மாணவியை யாரும் கடத்தி சென்றனரா? என்றும் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொன்னமராவதி தலைமை போஸ்ட் ஆபீஸ் முன்பு கிராமபுற அஞ்சல் ஊழியர்களின் 7வது ஊதியக்குழுவை அமுல்படுத்தக்கோரி கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
பொன்னமராவதி:
பொன்னமராவதி தலைமை போஸ்ட் ஆபீஸ் முன்பு கிராமபுற அஞ்சல் ஊழியர்களின் 7வது ஊதியக்குழுவை அமுல்படுத்தக்கோரி கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கிராமபுற அஞ்சல் ஊழியர்களின் 7வது ஊதியக்குழுவை அமுல் படுத்தக்கோரி கடந்த 22ம்தேதி முதல் நாடு முழுவதும் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடைபெற்று வருகின்றது.
4வது நாளாக பொன்னமராவதி போஸ்ட் ஆபீஸ் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கோட்டத்தலைவர் அடைக்கலம் தலைமை வகித்தார். மாநிலத்தலைவர் ஹரிராமகிருஷ்ணன், கோட்டச்செயலாளர்கள் ராமச்சந்திரன், பாண்டித்துரை ஆகியோர் போராட்டத்தை விளக்கிப்பேசினர்.
இதில் அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம், தேசிய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து மாவட்ட முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் மற்றும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
புதுக்கோட்டை:
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து, தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதையொட்டி புதுக்கோட்டை நகரில் உள்ள பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் நகரின் முக்கிய வீதிகளாக கீழராஜவீதி, மேலராஜவீதி போன்றவை வெறிச்சோடி காணப்பட்டது.

இந்நிலையில் காலையில் தி.மு.க. எம்.எல்.ஏ. பெரியண்ணன்அரசு தலைமையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் ஒவ்வொரு வீதிகள் வழியாக மோட்டார் சைக்கிளில் சென்று மூடி இருந்த கடைகளை பார்வையிட்டனர். மேலும் அறந்தாங்கி மற்றும் ஆலங்குடி சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. இருப்பினும் மாவட்டத்தில் பிறபகுதிகளில் உள்ள ஒரு சில கடைகள் மட்டும் அடைக்கப்பட்டு இருந்தது.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க. சார்பில் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இ தற்கு ரகுபதி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் வாசுதேவன் தலைமையிலான போலீசார் தி.மு.க.வினர் 35 பேரை கைது செய்து, புதுக்கோட்டையில் உள்ள ஒரு மண்டபத்தில் தங்க வைத்தனர்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் முகமதுகனி தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர் முகமதுசுல்தான் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் சார்பில் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் முன்பு மூர்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கந்தர்வகோட்டை பஸ் நிலையம் முன்பு தி.மு.க. ஒன்றிய செயலாளர் தமிழ் அய்யா தலைமையில் சாலைமறியலில் ஈடுபட்ட 25 பேரையும், ஆலங்குடி வடகாடு முக்கம் பகுதியில் எம்.எல்.ஏ. மெய்யநாதன் தலைமையில் சாலைமறியலில் ஈடுபட்ட 28 பேரையும், கீரனூர் கடைவீதியில் தி.மு.க. வடக்கு மாவட்ட பொறுப் பாளர் செல்லபாண்டியன் தலைமையில் சாலைமறியலில் ஈடுபட்ட 150 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
விராலிமலை செக்போஸ்ட் பகுதியில் விராலிமலை மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் இளங்குமரன் தலைமையில் சாலைமறியலில் ஈடுபட்ட 22 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து விராலிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே இரு சக்கர வாகனத்தை பழுது நீக்குவோர் நல சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு சங்க தலைவர் பழனியப்பன் தலைமை தாங்கினார். இதில் கலந்து கொண்டவர்கள் கருப்புக்கொடியை கையில் ஏந்திவாறு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மேலும் ஆவுடையார்கோவிலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் முருகேசன் தலைமையில் அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அறந்தாங்கியில் தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. உதயம்சண்முகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இப்பகுதியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டதில் முகஸ்டாலின் கைது செய்யப்பட்டார். இதை கண்டித்து கந்தர்வக்கோட்டையில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கந்தர்வக்கோட்டை:
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டதில் துப்பாக்கி சூட்டை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தின் போது தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் கைதைக் கண்டித்து கந்தர்வக்கோட்டை பேருந்து நிலையம் எதிரே சாலை மறியல் போராட்டம் தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் தமிழ்அய்யா தலைமையில் நடைபெற்றது.
போராட்டத்தில் நகர செயலாளர் ராஜா, சுந்தை ராமசாமி, ரங்கராஜன், அண்டனூர் முருகையா, மாரிமுத்து,சவுந்தர்ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
பொன்னமராவதி அருகே மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதிய விபத்தில் பலத்த காயம் அடைந்த ஆசிரியர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
பொன்னமராவதி:
திருச்சி மாவட்டம் பாலக்குறிச்சியைச் சேர்ந்தவர் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இவர் புதுக்கோட்டையில் இருந்து தனது ஊருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது அவர் பணியாற்றும் சடையம்பட்டி அரசு மேல் நிலைப்பள்ளி அருகில் சென்ற போது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். இது குறித்து காரையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுக்கோட்டை அருகே கார் கவிழ்ந்த விபத்தில் காரின் இடிபாடுகளில் சிக்கிய ஆசிரியை ஷீலாவதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
புதுக்கோட்டை:
நாமக்கல் மாவட்டம் அரூரை அடுத்த நத்தம்மேடு பகுதியை சேர்ந்தவர் மகேஷ்(வயது 36). இவர் நாமக்கல் மாவட்டத்தில் அரசுப் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஷீலாவதி(31). இவர் தஞ்சை மாவட்டம், பேராவூரணி பகுதியில் அரசுப்பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு இனேஷ்(4), என்ற மகனும், விஷ்மிதா என்ற 10 மாத பெண் குழந்தையும் உள்ளனர்.
ஆசிரியை ஷீலாவதி பணி புரியும் வகையில் பேராவூரணியில் வீடு ஒன்று பார்த்து ஏற்பாடு செய்து விட்டு அனைவரும் காரில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். காரை மகேஷ் ஓட்டி வந்துள்ளார். புதுக்கோட்டை கட்டியாவயல் பகுதியில் வந்தபோது காரின் முன்பக்க டயர் வெடித்தது. இதனால் தாறுமாறாக ஓடிய கார் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் காரின் இடிபாடுகளில் சிக்கிய ஆசிரியை ஷீலாவதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
காரை ஓட்டிவந்த மகேஷ் மற்றும் 2 குழந்தைகளும் காயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த திருக்கோகர்ணம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் காயமடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் ஷீலா வதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலில் பலத்த காற்று வீசியதால் நாட்டுப்படகு கவிழ்ந்தது. இதனால் 4 மீனவர்கள் தத்தளித்தனர். இதையடுத்து அவர்களை சக மீனவர்கள் பத்திரமாக மீட்டனர்.
மணமேல்குடி:
புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே உள்ள பொன்னகரம் கிராமத்தை சேர்ந்தவர் மாதவன். இவர் சொந்தமாக நாட்டுப்படகு வைத்துள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு மாதவன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த சத்தியராஜ், பிரதீப், பால்ராஜ் ஆகிய 4 பேரும் நாட்டுப்படகில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் கடலில் இருந்து 17 நாட்டிகல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது கடலில் திடீரென பலத்த காற்று வீசியது. இதில் எதிர்பாராதவிதமாக படகு தலைகுப்புற கவிழ்ந்தது.
இதனால் படகில் இருந்த மாதவன் உள்பட 4 பேரும் கடலில் விழுந்து தத்தளித்தனர். பின்னர் காப்பற்றுங்கள்.... காப்பற்றுங்கள்.... என கூச்சலிட்டனர். இதைக்கண்ட அருகில் மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் 4 பேரையும் மீட்டு தங்களது நாட்டுப்படகில் ஏற்றினர். பின்னர் இதுகுறித்து மீனவர்களின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் கரையில் ஆம்புலன்சுடன் தயார் நிலையில் இருந்தனர். பின்னர் 4 பேரும் கரைக்கு கொண்டு வரப்பட்டு சிகிச்சைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு 4 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து மணமேல்குடி கடலோர பாதுகாப்பு குழும போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாட்டுப்படகு கடலில் கவிழ்ந்ததால் அதில் இருந்த வலை, மீன்பிடி உபகரணங்கள் மூழ்கி சேதமடைந்தது. இதனால் தமிழக அரசு சேதமடைந்த பொருட்களுக்கு நிவாரணம் வழங்கவேண்டும் என அப்பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.