என் மலர்
செய்திகள்

புதுக்கோட்டையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடக்கிறது: கலெக்டர் தகவல்
புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை 31-ந் தேதி காலை 10.00 மணி யளவில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை 31-ந் தேதி காலை 10.00 மணி யளவில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளின் விவசாயம் சம்பந்தப்பட்ட கோரிக்கைகளுக்கு பதில் அளிக்க உள்ளார்கள்.
எனவே, புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை மட்டும் தெரிவித்து பயனடையலாம்.
இத் தகவலை மாவட்ட கலெக்டர் கணேஷ் தெரிவித்துள்ளார்.
Next Story