search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Peoples struggle"

    • மாவட்ட கலெக்டர் தலைமையில் மீண்டும் மீனவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த திட்டமிட்டு உள்ளனர்.
    • எண்ணெய் கழிவால் பாதிக்கப்பட்ட எங்களுக்கு அரசு நிவாரணம் மற்றும் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்.

    பொன்னேரி:

    மிச்சாங் புயல்காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளத்தின் போது எண்ணூர் கடல்பகுதியில் எண்ணெய் கழிவு கலந்தது. இதனால் மீனவர்கள் கடும்பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

    இந்த எண்ணெய் படலம் கடலில் பழவேற்காடு வரை படர்ந்தது. இதனால் பழவேற்காடை சுற்றி உள்ள மீனவ கிராமமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.ஏற்கனவே புயல் காரணமாக கடந்த ஒரு மாதமாக மீனவர்கள் கடலுக்கு செல்லாத நிலையில் எண்ணெய் படலத்தால் சுமார் 40 கிராம மீனவர்கள் மீன்பி டிக்க கடலுக்கு செல்லாமல் வாழ்வா தாரம் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    இதனால் பழவேற்காடு பகுதி மீனவ கிராமமக்கள் தங்களுக்கும் அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்நிலையில் 40 மீனவ கிராமமக்கள் நிவாரணம் கேட்டு நாளை சென்னை கோட்டை நோக்கி பேரணி நடத்த முடிவு செய்து போராட்டம் அறிவித்து உள்ளனர்.இதற்கான ஆயத்த பணியில் மீனவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இது தொடர்பாக திருப்பாலைவனம் போலீஸ் நிலையத்திலும் மனு அளித்துள்ளனர்.

    இதைத்தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு சுதாகர், திருவள்ளூர் மாவட்ட உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹரிகுமார், பொன்னேரி வட்டாட்சியர் மதிவாணன், மாவட்ட மீன் வளத்துறை இணை இயக்குனர் சந்திரா, உதவி இயக்குனர் கங்காதரன் ஆகியோர் மீனவ கிராம மக்களை அழைத்து பழவேற்காட்டில் உள்ள தனியார் மண்ட பத்தில் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. மாவட்ட கலெக்டர் தலைைமயில் மீண்டும் மீனவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த திட்டமிட்டு உள்ளனர்.

    நாளை நடைபெறும் போராட்டத்தில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் குடும்பத்துடன் பங்கேற்க திட்டும் உள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து மீனவர் ஒருவர் கூறும்போது, 40 கிராமமீனவர்கள் கடந்த ஒரு மாத காலமாக மீன் பிடிக்க செல்லவில்லை. எண்ணை கழிவால் ஆயிர த்திற்கும் மேற்பட்டமீன்பிடி வலைகள் படகுகள் சேதமடைந்துள்ளன. எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே எண்ணெய் கழிவால் பாதிக்கப்பட்ட எங்களுக்கு அரசு நிவாரணம் மற்றும் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கை இல்லை. எனவே மீனவ கிராம மக்கள் முடிவெடுத்து பேரணியில் குடும்பமாக பழவேற்காடு, பொன்னேரி ,மீஞ்சூர், திருவெற்றியூர் சாலை வழியாக சென்னை கோட்டை வரை நடந்தே சென்று கோரிக்கை மனு வழங்க உள்ளோம் என்றார்.

    • அதிகாரிகளிடம் பலமுறை கூறியும் நடவடிக்கை இல்லை
    • 2 மாதத்திற்குள் பணியை முழுமை படுத்த நடவடிக்கை

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், ஒடுக்கத்தூர் அடுத்த பீஞ்சமந்தை ஊராட்சிக்கு உட்பட்டது முள்ளுவாடி மலை கிராமம். இங்கு 500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்கள் சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒடுகத்தூருக்கு சென்று தான் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்கின்றனர்.

    கடந்த சில வருடங்களுக்கு முன்பு இந்த பகுதி மக்கள் சென்று வர மேல்அரசம்பட்டு பங்களாமேடு கிராமத்தில் இருந்து, முள்ளுவாடி மலை கிராமம் செல்லும் வழியில் பாதி தொலைவு வனத்துறை சார்பில் தார் சாலை அமைக்கப்பட்டது.

    சரியான பராமரிப்பு இல்லாததால் இந்த தார் சாலை நாளடைவில் குண்டும் குழியுமாக மாறிப்போனது. இதனால் அந்த பகுதி மக்கள் போக்குவரத்து முற்றிலுமாக பாதித்தது. இதனை சீரமைத்து தரக் கோரி அதிகாரிகளிடம் பலமுறை கூறியும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த முள்ளுவாடி கிராம மக்கள் 150-க்கும் மேற்பட்டோர் இன்று பங்களாமேடு அருகே ஒன்று திரண்டு வந்தனர். அங்கு சாலையை சீரமைப்பதோடு, விடுபட்ட தூரத்தில் சாலை அமைக்க வேண்டும். கிராமத்திற்கு செல்லும் வழியில் ஆபத்தான நிலையில் உள்ள கிணற்றை சுற்றி தடுப்பு சுவர் எழுப்ப வேண்டும் எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்த மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு, ஒன்றிய கவுன்சிலர் பிரேமலதா ஆகியோர் விரைந்து வந்து சமரசம் பேசினார். மேலும் 2 மாதத்திற்குள் பழுதடைந்த தார் சாலை புதுப்பிப்பதோடு, பாதியில் தடைபட்டு நிற்கும் சாலை பணியை முழுமை படுத்தவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

    இதனை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மழுவங்கரணை கிராமம் வழியாக சென்ற அரசு பஸ் வழிமடக்கி சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • மாணவிகளிடம் சில்மிஷம் செய்த டிரைவர் அல்லாபக்கஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர்.

    திருவண்ணாமலை:

    வந்தவாசியில் இருந்து ஓரத்தி கிராமத்திற்கு அரசு பஸ் இயங்கி வருகிறது. இந்த பஸ் டிரைவராக அல்லாபக்கஷ் என்பவர் பணிபுரிந்து வருகிறார்.

    பஸ்சில் மழுவங்கரனை கிராமத்திலிருந்து நாள்தோறும் ஏராளமான பள்ளி மாணவிகள் வந்தவாசி அரசு பள்ளிக்கு வந்து செல்கின்றனர்.

    டிரைவர் அல்லாபக்கஷ் பஸ்சில் பயணம் செய்யும் மாணவிகளிடம் சில்மிஷம் செய்து வந்துள்ளார். இதனை மாணவிகள் அழுது கொண்டு வீட்டில் பெற்றோர்களிடம் கூறியுள்ளனர்.

    இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மழுவங்கரணை கிராமம் வழியாக சென்ற அரசு பஸ் வழிமடக்கி சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    அப்போது மாணவிகளிடம் சில்மிஷம் செய்த டிரைவர் அல்லாபக்கஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர்.

    தகவல் அறிந்த அரசு போக்குவரத்து பணிமனை அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி டிரைவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.

    இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • பஸ்சில் ஏற்ற மறுத்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் தனியார் பஸ்சை சிறைபிடித்தனர்
    • பொது மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டைைய சேர்ந்த சிலர் நேற்று மாலை மதுரையில் சில தனியார் பஸ்கள் மூலம் நிலக்கோட்டைக்கு வந்தனர். இதற்காக மதுரையிலிருந்து பெரியகுளம் செல்லும் தனியார் பஸ்சில் ஏறினர்.

    ஆனால் அவர்களை ஏற்ற கண்டக்டர் மறுத்து விட்டார். இதில் உடல்நலம் பாதிக்கப்பட்ட ஒரு கல்லூரி மாணவியும் இருந்துள்ளார். அதன்பிறகு அவர்கள் அனைவரும் மற்றொரு பஸ்சில் ஏறி நிலக்கோட்டைக்கு வந்தனர்.

    பஸ் புறப்பட்ட உடன் தங்களை ஏற்ற மறுத்த தனியார் பஸ் குறித்து நிலக்கோட்ைடயில் உள்ள உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர்.

    இதனைத் தொடர்ந்து பெரியகுளத்தில் இருந்து மதுரைக்கு திரும்பிய அந்த தனியார் பஸ்சை நிலக்கோட்டையில் பொதுமக்கள் சிறைபிடித்து முற்றுகையிட்டனர்.

    இதனையடுத்து சம்பவ இடத்துக்கு நிலக்கோட்டை போலீசார் வந்து சமரசம் செய்தனர். இனி வரும் காலங்களில் நிலக்கோட்ைட பயணிகளை ஏற்றுவதாக கண்டக்டர் தெரிவித்ததை அடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.

    • போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
    • ஆத்திரம் அடைந்த மக்கள் பூட்டு போட்டு பூட்டினர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை கொசமட தெருவில் குயவர் மடம் செயல்பட்டு வருகின்றது. இந்த மடத்தில் கடந்த 1994 முதல் 2022 வரையில் பல கோடி ரூபாய் ஊழல் நடைபெற்று உள்ளதாகவும், கடந்த 28 ஆண்களாக தேர்தல் நடத்தாமல் தன்னிச்சையாக தற்போதைய நிர்வாகிகள் செயல்படுவதாகவும் குலாலர் சமுதாய மக்கள் நேற்று குயவர் மடத்தின் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர்.

    போராட்டத்திற்கு தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளி குலாலர் சங்க முன்னாள் மாவட்டத் தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். இதில் சுமார் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் மடத்தின் அருகில் உள்ள பிள்ளையார் கோவில் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கிருந்து வந்து குயவர் மடத்தினை முற்றுகையிட்டனர்.

    அப்போது மடத்தில் தற்போது உள்ள தலைமை 28 ஆண்டுகளாக தேர்தல் நடத்தாமல் தன்னிச்சையாக செயல்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சமுதாய மக்களுக்கு மடத்தில் முன்னுரிமை மற்றும் தங்குவதற்கு அனுமதி மறுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

    போராட்டத்தின் போது அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மடத்தின் முன்பக்கம் இரும்பு கேட் பூட்டு போட்டு பூட்டப்பட்டு இருந்தது. மேலும் திருவண்ணாமலை டவுன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் பூட்டு மற்றும் சங்கிலி வாங்கி வந்து பூட்டு போட்டு பூட்டினர்.

    தொடர்ந்து அவர்களிடம் திருவண்ணாமலை டவுன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இது அவர்கள் திருவண்ணாமலை தாலுகா நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சிக்கு கோரிக்கை மனு அளிக்க சென்றனர்.

    பின்னர் அவர்கள் கலெக்டர் முருகேஷிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதனால் திருவண்ணாமலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    மாலத்தீவு தேர்தல் வெற்றியை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் முன்னாள் அதிபர் மனு செய்துள்ளதை அடுத்து அவருக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். #AbdullaYameen
    மாலே:

    மாலத்தீவில் சமீபத்தில் அதிபர் தேர்தல் நடந்தது. அதில் போட்டியிட்ட அதிபர் அப்துல்லா யாமீன் தோல்வி அடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் இப்ராகிம் முகமது சாலிக் வெற்றி பெற்றார்.

    அதை யாமீன் ஏற்றுக் கொள்ளவில்லை. தேர்தலில் முறைகேடு நடத்தி வெற்றி பெற்றுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை மாலத்தீவு தேர்தல் கமி‌ஷன் மறுத்துள்ளது.

    தேர்தல் சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடைபெற்றது. அதனால் 89.2 சதவீதம் ஓட்டுகள் பதிவானது என தெரிவித்துள்ளது. தேர்தலில் தோல்வி அடைந்ததன் மூலம் யாமீன் அதிபர் பதவியில் இருந்து விலக வேண்டும். புதிய அதிபர் இப்ராகிம் முகமது சாலிக் வருகிற நவம்பர் 17-ந்தேதி பதவி ஏற்க வழிவிட வேண்டும்.

    அதற்கு மாறாக தேர்தல் வெற்றியை எதிர்த்து மாலத்தீவு சுப்ரீம் கோர்ட்டில் அவர் மனு செய்துள்ளார். அந்த மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது.



    அதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாலே நகரில் நேற்று நடந்த போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மக்கள் விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட அதிபர் அப்துல்லா யாமீனை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். #AbdullaYameen
    புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் மாணவிக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை குப்பையன்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகள் திவ்யபாரதி (வயது 17), பிளஸ்-2 முடித்துள்ளார்.

    இந்தநிலையில் திவ்யபாரதிக்கு நெஞ்சில் அடிக்கடி வலி ஏற்பட்டு வந்தது. இதையடுத்து அவரை அவரது பெற்றோர் புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்ததில் திவ்ய பாரதியின் நெஞ்சில் கட்டி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அறுவை சிகிச்சை மூலம் கட்டியை அகற்ற டாக்டர்கள் முடிவு செய்தனர்.

    இதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு திவ்யபாரதிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இருப்பினும் அவருக்கு வலி குணமாகவில்லை. இதையடுத்து திவ்யபாரதியை அவரது பெற்றோர் மீண்டும் புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று பரிசோதனை செய்தனர். அப்போது அறுவை சிகிச்சை செய்த டாக்டர்கள் கட்டி இருக்கும் நெஞ்சு பகுதியில் அறுவை சிகிச்சை செய்யாமல் வயிற்று பகுதியில் அறுவை சிகிச்சை செய்தது பரிசோதனையில் தெரியவந்தது.

    எனவே இதற்கு காரணமான டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திவ்யபாரதியின் உறவினர்கள் மற்றும் பொது மக்கள் புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் இன்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். #Tamilnews
    ×