நிலக்கோட்டையில் தனியார் பஸ்சை சிறைபிடித்து மக்கள் போராட்டம்

பஸ்சில் ஏற்ற மறுத்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் தனியார் பஸ்சை சிறைபிடித்தனர்பொது மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தனியார் பஸ்சை சிறைபிடித்து போராட்டம் நடத்திய பொதுமக்கள்.
தனியார் பஸ்சை சிறைபிடித்து போராட்டம் நடத்திய பொதுமக்கள்.
Published on

நிலக்கோட்டை:

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டைைய சேர்ந்த சிலர் நேற்று மாலை மதுரையில் சில தனியார் பஸ்கள் மூலம் நிலக்கோட்டைக்கு வந்தனர். இதற்காக மதுரையிலிருந்து பெரியகுளம் செல்லும் தனியார் பஸ்சில் ஏறினர்.

ஆனால் அவர்களை ஏற்ற கண்டக்டர் மறுத்து விட்டார். இதில் உடல்நலம் பாதிக்கப்பட்ட ஒரு கல்லூரி மாணவியும் இருந்துள்ளார். அதன்பிறகு அவர்கள் அனைவரும் மற்றொரு பஸ்சில் ஏறி நிலக்கோட்டைக்கு வந்தனர்.

பஸ் புறப்பட்ட உடன் தங்களை ஏற்ற மறுத்த தனியார் பஸ் குறித்து நிலக்கோட்ைடயில் உள்ள உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து பெரியகுளத்தில் இருந்து மதுரைக்கு திரும்பிய அந்த தனியார் பஸ்சை நிலக்கோட்டையில் பொதுமக்கள் சிறைபிடித்து முற்றுகையிட்டனர்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு நிலக்கோட்டை போலீசார் வந்து சமரசம் செய்தனர். இனி வரும் காலங்களில் நிலக்கோட்ைட பயணிகளை ஏற்றுவதாக கண்டக்டர் தெரிவித்ததை அடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com