search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலை வசதி கேட்டு மலைவாழ் மக்கள் போராட்டம்
    X

    மலைவாழ் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

    சாலை வசதி கேட்டு மலைவாழ் மக்கள் போராட்டம்

    • அதிகாரிகளிடம் பலமுறை கூறியும் நடவடிக்கை இல்லை
    • 2 மாதத்திற்குள் பணியை முழுமை படுத்த நடவடிக்கை

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், ஒடுக்கத்தூர் அடுத்த பீஞ்சமந்தை ஊராட்சிக்கு உட்பட்டது முள்ளுவாடி மலை கிராமம். இங்கு 500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்கள் சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒடுகத்தூருக்கு சென்று தான் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்கின்றனர்.

    கடந்த சில வருடங்களுக்கு முன்பு இந்த பகுதி மக்கள் சென்று வர மேல்அரசம்பட்டு பங்களாமேடு கிராமத்தில் இருந்து, முள்ளுவாடி மலை கிராமம் செல்லும் வழியில் பாதி தொலைவு வனத்துறை சார்பில் தார் சாலை அமைக்கப்பட்டது.

    சரியான பராமரிப்பு இல்லாததால் இந்த தார் சாலை நாளடைவில் குண்டும் குழியுமாக மாறிப்போனது. இதனால் அந்த பகுதி மக்கள் போக்குவரத்து முற்றிலுமாக பாதித்தது. இதனை சீரமைத்து தரக் கோரி அதிகாரிகளிடம் பலமுறை கூறியும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த முள்ளுவாடி கிராம மக்கள் 150-க்கும் மேற்பட்டோர் இன்று பங்களாமேடு அருகே ஒன்று திரண்டு வந்தனர். அங்கு சாலையை சீரமைப்பதோடு, விடுபட்ட தூரத்தில் சாலை அமைக்க வேண்டும். கிராமத்திற்கு செல்லும் வழியில் ஆபத்தான நிலையில் உள்ள கிணற்றை சுற்றி தடுப்பு சுவர் எழுப்ப வேண்டும் எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்த மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு, ஒன்றிய கவுன்சிலர் பிரேமலதா ஆகியோர் விரைந்து வந்து சமரசம் பேசினார். மேலும் 2 மாதத்திற்குள் பழுதடைந்த தார் சாலை புதுப்பிப்பதோடு, பாதியில் தடைபட்டு நிற்கும் சாலை பணியை முழுமை படுத்தவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

    இதனை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×