search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பயிர்க்காப்பீடு செய்ய காலநீட்டிப்பு வேண்டும் -  முதல்வருக்கு விவசாயிகள்  கோரிக்கை     பயிர்க்காப்பீடு செய்ய காலநீட்டிப்பு வேண்டும் -  முதல்வருக்கு விவசாயிகள்  கோரிக்கை
    X

    பயிர்க்காப்பீடு செய்ய காலநீட்டிப்பு வேண்டும் - முதல்வருக்கு விவசாயிகள் கோரிக்கை பயிர்க்காப்பீடு செய்ய காலநீட்டிப்பு வேண்டும் - முதல்வருக்கு விவசாயிகள் கோரிக்கை

    • மேட்டூர் அணையிலிருந்து உரிய காலத்திற்கு முன்பே தண்ணீர் திறந்துவிட ப்பட்டதால் விவசாயிகள் நல்ல முறையில் விவசாயம் செய்து வருகின்றனர்.
    • பயிர் காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை எதிர் வருகின்ற 30ம் தேதி வரை நீட்டித்து தர விவசாயிகள் சங்கத்தினர் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்டம் கல்லணைக்கால்வாய் கடைமடை பகுதியில் சுமார் 27 ஆயிரம் ஏக்கர் விளை நிலத்தில் விவசாயிகள் நெர்ப்பயிர் சாகுபடி செய்து வருகின்றனர்.மேட்டூர் அணையிலிருந்து உரிய காலத்திற்கு முன்பே தண்ணீர் திறந்துவிட ப்பட்டதால் விவசாயிகள் நல்ல முறையில் விவசாயம் செய்து வருகின்றனர். இருந்த போதிலும் சமீபத்தில் பெய்து வரும் கன மழையால் விவசாயப் பணிகளில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது.

    இதற்கிடையில் விவசாயிகள் 2022- 23ம் ஆண்டிற்கான பயிர் காப்பீடு செய்ய அரசால் அறிவிக்கப்பட்டு கடந்த 1ம் தேதி முதல் பயிர் காப்பீடு செய்யப்பட்டு வருகிறது. இதற்கான கால அவகாசம் எதிர் வருகின்ற 15ம் தேதியோடு முடிவடைகின்ற நிலையில், பயிர் காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை எதிர் வருகின்ற 30ம் தேதி வரை நீட்டித்து தர விவசாயிகள் சங்கத்தினர் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது குறித்து கல்லணை க்கால்வாய் பாசனதாரர் விவசாயிகள் ஒருங்கிணைப்பு சங்கத் தலைவர் கொக்குமடை ரமேஷ் தமிழக முதல்வரின் தனிப்பி ரிவிற்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது, புதுக்கோட்டை மாவட்ட கல்லணை க்கால்வாய் பகுதியில் பெருமழை காரணமாக விவசாயப் பணிகள் தாமதமாக நடைபெற்று வருகிறது. இதனால் எதிர் வருகின்ற 15ம் தேதிக்குள் விவசாயிகள் பயிர்க்காப்பீடு செய்ய தாமதமாகி வருகிறது.

    எனவே தமிழக முதல்வர் விவசாயி களின் வாழ்வாதாரத்தை கவனத்தில் கொண்டு பயிர் காப்பீடு செய்ய எதிர் வருகின்ற 30ம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்தர சங்கத்தின் சார்பாக கேட்டுக்கொள்வதாகத் தெரிவித்தார்.




    Next Story
    ×