என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
போலீஸ் நிலையங்களில் கேட்பாரற்று கிடக்கும் வாகனங்களை பெற அவகாசம்
- தேனி மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் சிக்கிய வாகனங்களை யாரும் உரிமைகோர வருவதில்லை
- உரிய ஆவணங்களுடன் 15 நாட்களுக்குள் வாகனத்தை பெற்றுக் கொள்ள அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது
தேனி:
தேனி வட்டத்துக்குட்பட்ட தேனி, அல்லிநகரம், பழனிசெட்டிபட்டி, வீரபாண்டி போலீஸ் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் கேட்பாரற்று இருக்கும் இரு சக்கர மற்றும் 4 சக்கர வாகனங்களை இது வரை யாரும் உரிமை கோரவில்லை.
இந்த போலீஸ் நிலையங்களில் உள்ள வாகனங்களின் உரிமையாளர்கள் யாரேனும் இருந்தால் அதற்குரிய தகுந்த ஆவணங்களுடன் தேனி வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்து 15 நாட்களுக்குள் வாகனத்தை பெற்றுக் கொள்ள வேண்டும்.
அவ்வாறு யாரும் உரிமை கோரவில்லை என்றால் அவை அரசுடமையாக்கப்படும். தேனி வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட எஸ்.பி. அலுவலகம், சம்மந்தப்பட்ட போலீஸ் நிலையங்களில் ஒட்டப்பட்டுள்ள அறிவிப்பு பலகையில் விபரங்களை அறிந்து தங்கள் வாகனம் உள்ளதா? என்பதை தெரிந்து கொள்ளலாம் என தேனி வட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.
Next Story