search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரியில் காவல் துறை சார்பில்   போதை பொருள் தடுப்பு   தொடர்பான விழிப்புணர்வு கூட்டம்
    X

    தருமபுரியில் காவல் துறை சார்பில் போதை பொருள் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு கூட்டம்

    • போதை பொருட்கள் அவர்களுக்கு எவ்வாறு கிடைக்கிறது என்பது குறித்தும் ஊராட்சி மன்ற தலைவர்கள் கண்காணிக்க வேண்டும்.
    • ஒவ்வொரு ஊராட்சியும் வளர்ச்சியடையும் எனவும் தருமபுரி மாவட்டத்தை போதை பொருள் இல்லா மாவட்டமாக உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்

    தருமபுரி,

    தருமபுரியில் காவல் துறை சார்பில் போதை பொருள் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் கலைசெல்வன் தலைமையில் தருமபுரியில் நேற்று நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் மாவட்டத்தில் இருந்து 251 ஊராட்சி மன்ற தலைவர்கள் பங்கேற்றனர். இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் போதை பொருளை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் பற்றியும், அதனை எவ்வாறு தடுப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    இக்கூட்டத்தில் சிறப்புரையாற்றிய காவல் கண்காணிப்பாளர் ஒவ்வொரு கிராமத்திலும் இளைஞர்களை கண்காணிக்க வேண்டும். அதே போல் அவர்களின் நடவடிக்கை குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

    போதை பொருட்கள் அவர்களுக்கு எவ்வாறு கிடைக்கிறது என்பது குறித்தும் ஊராட்சி மன்ற தலைவர்கள் கண்காணிக்க வேண்டும்.

    அப்போது தான் ஒவ்வொரு ஊராட்சியும் வளர்ச்சியடையும் எனவும் தருமபுரி மாவட்டத்தை போதை பொருள் இல்லா மாவட்டமாக உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என காவல் கண்காணிப்பாளர் கேட்டுக்கொண்டார்.

    இந்த விழிப்புணரவு கூட்டத்தில் கூடுதல் காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் அண்ணாமலை, இளங்கோ உட்கோட்ட காவல் துணை கங்காணிப்பாளர்கள் மற்றும் அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

    Next Story
    ×