search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மத்தூர் அருகே   லாரி தார்ப்பாயை கிழித்து   ரூ.1 லட்சம் பொருட்கள் திருட்டு-   மர்ம ஆசாமிகள் கைவரிசை
    X

    மத்தூர் அருகே லாரி தார்ப்பாயை கிழித்து ரூ.1 லட்சம் பொருட்கள் திருட்டு- மர்ம ஆசாமிகள் கைவரிசை

    • டீ குடித்துவிட்டு திரும்ப வந்து பார்த்த போது லாரியின் பின்புறம் தார்ப்பாய் கிழிந்து கிடந்தது.
    • லாரியில் இருந்த தேங்காய் எண்ணெய் பாக்கெட்டுகள் கொண்ட அட்டை பெட்டிகள் மாயமானது.

    மத்தூர்,

    புதுச்சேரியிலிருந்து கர்நாடக மாநிலம், ஹுப்ளிக்கு மளிகை பொருட் களை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்தது. லாரியில் தேங்காய் எண்ணெய் பாக்கெட்டுகள் உள்ளிட்ட மளிகை பொருட்கள் இருந்தன.

    லாரியை புதுச்சேரி வாணிதாசன் நகரை சேர்ந்த திருச்சேரன் (வயது57) என்பவர் ஒட்டி வந்தார். நேற்று இரவு லாரி கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே வந்தபோது டீ குடிப்பதற்காக லாரியை நிறுத்தியுள்ளார்.

    அப்போது டீ குடித்துவிட்டு திரும்ப வந்து பார்த்த போது லாரியின் பின்புறம் தார்ப்பாய் கிழிந்து கிடந்தது. இதனை கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.

    லாரியில் இருந்த தேங்காய் எண்ணெய் பாக்கெட்டுகள் கொண்ட அட்டை பெட்டிகள் மாயமானது.

    இது குறித்து டிரைவர் திருச்சேரன் மத்தூர் போலீசில் புகார் செய்தார்.

    அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து லாரியில் கைவரிசை கட்டிய மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர். திருடு போன தேங்காய் எண்ணெய் பாக்கெட்டுகளின் மதிப்பு ரூ.95 ஆயிரம் இருக்கும் என ெதரிவித்தனர்.

    இந்த சம்பவம் அப்பகுதி வழியாக லோடு ஏற்றிச்சென்ற லாரி டிரைவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×