என் மலர்
நாமக்கல்
- குமாரபாளையம் போலீஸ் நிலையம், குமாரபாளையம் தாலுகா ஓட்டுனர் பயிற்சி பள்ளி மற்றும் தனியார் கல்லூரி இணைந்து சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சியை நடத்தியது.
- ராஜம் தியேட்டர் பகுதியில் தொடங்கி ஆனங்கூர் பிரிவு, பள்ளிபாளையம் பிரிவு உள்ளிட்ட பிரதான சாலை வழியாக குமாரபாளையம் பஸ் நிலையம் வரை நடைபெற்றது.
குமாரபாளையம்:
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் வட்டார போக்குவரத்து அலுவலகம், குமாரபாளையம் போலீஸ் நிலையம், குமாரபாளையம் தாலுகா ஓட்டுனர் பயிற்சி பள்ளி மற்றும் தனியார் கல்லூரி இணைந்து சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சியை நடத்தியது.
இந்த விழிப்புணர்வு பேரணியானது குமாரபாளையம் ராஜம் தியேட்டர் பகுதியில் தொடங்கி ஆனங்கூர் பிரிவு, பள்ளிபாளையம் பிரிவு உள்ளிட்ட பிரதான சாலை வழியாக குமாரபாளையம் பஸ் நிலையம் வரை நடைபெற்றது.
விழிப்புணர்வு
இந்த பேரணியினை வட்டார போக்குவரத்து அலுவலர் பூங்குழலி கொடிய சைத்து தொடங்கி வைத்தார். பேரணியில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியவாறும், துண்டு பிரசுரங்களையும் பொது மக்களுக்கு விநியோகம் செய்தவாறும் சென்றனர்.
பேரணி குறித்து குமாரபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி கூறுகையில், இரு சக்கர வாகனம் ஓட்டும் போது தலைக்கவசம் அணிய வேண்டும், ஓட்டுனர் உரிமம் பெறாமல் வாகனம் ஓட்டுதல் கூடாது. சிறுவர்களுக்கு வாகனங்களை கொடுத்து அதனால் பொதுமக்களுக்கு விபத்து ஏற்பட்டால் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும், பஸ்களில் ஏர் ஹாரன்கள் பொருத்தக்கூடாது என்றார்.
- வெல்லத்தை ஏலம் எடுப்பதற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து வெல்லத்தை ஏலம் எடுத்துச் செல்கின்றனர்.
- கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 7 ஆயிரம் உருண்டை வெல்ல சிப்பங் களும், 3 ஆயிரம் அச்சு வெல்ல சிப்பங்களும் கொண்டு வரப்பட்டிருந்தது.
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் வட்டத்தில் ஜேடர்பாளை யம், சோழசிராமணி, அய்யம் பாளையம், கபிலர் மலை, பரமத்திவேலூர், பாண்டமங்கலம், நன்செய்இடையாறு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் கரும்பு பயிர் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் புதன்கிழமைகளில் வெல்ல ஏலச் சந்தையில் ஏலம் நடைபெறுகிறது.
வெல்லத்தை ஏலம் எடுப்பதற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து வெல்லத்தை ஏலம் எடுத்துச் செல்கின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 7 ஆயிரம் உருண்டை வெல்ல சிப்பங் களும், 3 ஆயிரம் அச்சு வெல்ல சிப்பங்களும் கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,250 வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,250 வரையிலும் ஏலம் போனது. புதன்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு தொடர் மழை காரணமாக வெல்லம் உற்பத்தி செய்ய முடியாததால் குறைந்த அளவிலேயே வெல்லம் கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் 4 ஆயிரத்து 500 உருண்டை வெல்ல சிப்பங்களும், ஆயிரத்து 500 அச்சு வெல்ல சிப்பங்களும் கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,300 வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று1,300 வரையிலும் ஏலம் போனது. தொடர்ந்து மழை பெய்து வந்ததால் வெல்லம் உற்பத்தி செய்ய முடியாததாலும், வரத்து குறைந்ததாலும் வெல்லம் விலை உயர்வடைந்து உள்ளதாக வெல்ல உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
- புதுச்சேரியில் இருந்து மது பாட்டில்கள் கடத்தி வந்ததாக நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு ராஜேஷ் கண்ணாவுக்கு ரகசிய தகவல் வந்தது.
- அந்த காரில் புதுச்சேரியில் இருந்து கடத்தி வந்த 102 மது மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மதுபாட்டில்களுடன் காரையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்
கொல்லிமலை:
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அரியூர் நாடு கெம்பளம் பஸ் நிறுத்தம் அருகே ஒரு சொகுசு கார் நின்றிருந்தது. அந்த காரில் புதுச்சேரியில் இருந்து மது பாட்டில்கள் கடத்தி வந்ததாக நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு ராஜேஷ் கண்ணாவுக்கு ரகசிய தகவல் வந்தது.
இந்த தகவலின்பேரில் டி.எஸ்.பி. தனராஜ் மேற்பார்வையில் சேந்தமங்கலம் இன்ஸ்பெக்டர் கோவிந்தராசன் தலைமையிலான வாழவந்தி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அந்த காரில் புதுச்சேரியில் இருந்து கடத்தி வந்த 102 மது மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மதுபாட்டில்களுடன் காரையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். இதில் காரின் உரிமையாளர் பெரிய கோவிலூரை சேர்ந்த கார்த்திக், செல்வராஜ் என்பதும், இருவரும் தலைமறைவாகி உள்ளதும் தெரியவந்தது. அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
- ராஜேந்திரன் வயது (64). ஓட்டல் உரிமையாளர் இவர் அயோத்தியாப் பட்டணம் பஸ் நிறுத்தம் அருகே ஆத்தூர் மெயின் ரோட்டில் ஓட்டல்நடத்தி வருகிறார்.
- அதிகாலை 4 மணியளவில் வழக்கம் போல தனது ஓட்டலில் இருந்து எதிரே உள்ள டீக்கடைக்கு டீ வாங்க ஆத்தூர் மெயின்ரோட்டை வடக்கில் இருந்து தெற்காக கடக்க முயன்றார்.
சேலம்:
சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் கோமுநகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் வயது (64).
ஓட்டல் உரிமையாளர்
இவர் அயோத்தியாப் பட்டணம் பஸ் நிறுத்தம் அருகே ஆத்தூர் மெயின் ேராட்டில் ஓட்டல்நடத்தி வருகிறார். இன்று அதிகாலை 4 மணியளவில் வழக்கம் போல தனது ஓட்டலில் இருந்து எதிரே உள்ள டீக்கடைக்கு டீ வாங்க ஆத்தூர் மெயின்ரோட்டை வடக்கில் இருந்து தெற்காக கடக்க முயன்றார்.
அப்போது ஆத்தூரில் இருந்து சேலம் நோக்கி வந்த மினி சரக்கு வாகனம் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ராஜேந்திரன் தலை உள்பட பல இடங்களில் படுகாயம் அடைந்தார்.
பரிதாப சாவு
அவரை மீட்டு அந்த பகுதியினர் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ராஜேந்திரன் இறந்து விட்டார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்ககாக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து அம்மாப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மோகன் கடந்த சில வருடங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து சிகிச்சை பெற்றும் உடல் நிலை சரியாகாததால்
- மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த மோகன் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள அத்தியப்பம்பாளையத்தை சேர்ந்தவர் மோகன் (48). விவசாயி. இவரது மனைவி தீபலட்சுமி (39). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். மோகன் கடந்த சில வருடங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து சிகிச்சை பெற்றும் உடல் நிலை சரியாகாததால் மோகன் கடந்த சில நாட்களாக மனமுடைந்த நிலையில் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் மனைவி தோட்டத்திற்கு சென்று விட்ட நேரத்தில் தனியாக வீட்டில் இருந்த மோகன் விஷம் குடித்து உயிருக்கு போராடியுள்ளார். இவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு நாமக்கல்லில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த மோகன் சிகிச்சை பலனின்றி இறந்தார். இகுறித்து வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரமத்தி வேலூர்:
சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, எள், நிலக்கடலை காய் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. இதில் அருகே உள்ள கரூர் ஒன்றியம், பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.
அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் நிலக்கடலை காய் 42.66 1/2குவிண்டால் எடை கொண்ட 140-மூட்டை நிலக்கடலை காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.86.46-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.68.29-க்கும், சராசரி விலையாக ரூ.85.29-க்கும் என ரூ.3 லட்சத்து 32ஆயிரத்து 148-க்கு ஏலம் போனது.
ராசிபுரம்:
ராசிபுரம் தாலுகா, நாமகிரிப்பேட்டை அருகே உள்ள அரியாக் கவுண்டம்பட்டியைச் சேர்ந்தவர் தெய்வசிகாமணி (வயது 72). விவசாயி. இவர் நேற்று முன்தினம் மாலையில் அவரது மொபட்டில் நாமகிரிப்பேட்டையில் இருந்து வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தார்.
இந்த நிலையில் அரியாக்கவுண்டம்பட்டி தெற்கு காலனியை சேர்ந்த வாலிபர் சண்முகம் (20) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் தெய்வசிகாமணி மீது மோதியது. இதில் இரண்டு பேரும் காயம் அடைந்தனர். ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கிருந்து தெய்வசிகாமணி மேல் சிகிச்சைக்காக சேலம் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
அங்கு சிகிச்சை பலனின்றி தெய்வசிகாமணி பரிதாபமாக இறந்தார். இது பற்றி நாமகிரிப்பேட்டை போலீசார் வாலிபர் சண்முகம் மீது வழக்குப் பதிவு செய்தனர். ஆனால் சண்முகம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
- ராஜம்மாள் (69) கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று காலை ஒட்டன் கோவில் பகுதியில் சாலையை கடப்பதற்காக ராஜம்மாள் நின்று கொண்டிருந்தார்.
- வேகமாக வந்த சரக்கு வாகனம் இவர் மீது மோதியதில் படுகாயமடைந்தார்.
குமாரபாளையம்:
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் ஆனங்கூர் சாலை, ஒட்டன்கோவில் பகுதியில் வசிப்பவர் ராஜம்மாள் (69) கூலித் தொழிலாளி.
சம்பவத்தன்று காலை ஒட்டன் கோவில் பகுதியில் சாலையை கடப்பதற்காக ராஜம்மாள் நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே வேகமாக வந்த சரக்கு வாகனம் இவர் மீது மோதியதில் படுகாயமடைந்தார்.
இதையடுத்து இவர் சிகிச்சைக்காக ஈரோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்துக்கு காரணமான சரக்கு வாகன டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குமாரபாளையம் போலீசில் அவரது உறவினர்கள் புகார் கொடுத்தனர். இதன்படி போலீசார் வழக்குப்பதிவு சரக்கு வாகன டிரைவரான கிழக்கு காலனியை சேர்ந்த சவுந்தர்ராஜன் (28) என்ற வாலிபரை கைது செய்தனர்.
- நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் போலீசார் சார்பில் ராகிங்கிற்கு எதிரான விழிப்புணர்வு முகாம் நடந்தது
- சக கல்லூரி மாணவர்களால் ராகிங் செய்யப்பட்டால் தைரியமாக கல்லூரி நிர்வாகத்திடம் தெரியப்படுத்த வேண்டும்
குமாரபாளையம்:
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் போலீசார் சார்பில் ராகிங்கிற்கு எதிரான விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதில் இன்ஸ்பெக்டர் தவமணி பங்கேற்று பேசுகையில், ஒரு துன்பகரமான இன்பத்தைப் பெறுவதற்கான நோக்கத்துடன் ஒரு மாணவரின் அதிகாரம் அல்லது மேன்மையைக் காட்டுதல்தான் ராகிங். நாட்டிலுள்ள அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் அனைத்து மாணவர்களின் உடல் மற்றும் உளவியல் ரீதியிலான ஆரோக்கியமான வளர்ச்சியை ஏற்படுத்த பல்கலைக்கழக மானியக்குழு, கவுன்சில்களுடன் கலந்தாலோசித்து இந்த ராகிங் ஒழுங்குமுறையை கொண்டு வருகிறது. மேலும் சக கல்லூரி மாணவர்களால் ராகிங் செய்யப்பட்டால் தைரியமாக கல்லூரி நிர்வாகத்திடம் தெரியப்படுத்த வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
- இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது.
இந்த நிலையில் இன்று காலையில் கடுமையான பனிப்பொழிவு காணப் பட்டது. சாலை களில் மூடுபனி சூழ்ந்தது.
திருச்சி, துறையூர், சேலம், மோகனூர், திருச்செங்கோடு உள்ளிட்ட முக்கிய சாலைகளில் சூழந்த மூடுபனியால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
முன்னால் செல்லும் வாகனங்கள் தெரியாத அளவு பனிமூட்டம் காணப் பட்டதால் விபத்தை தடுக்கும் வகையில் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி வாகனங்களை இயக்கி சென்றனர். காலை 8 மணி வரை பனிமூட்டம் இருந்ததால் வேலைக்கு செல்வோரும் அவதிப் பட்டனர்.
- சுற்றுலா தலங்களை பிரபலப்ப டுத்தவும், பள்ளி மாணவ, மாணவிகளிடையே சுற்றுலா பற்றிய விழிப்பு ணர்வை ஏற்படுத்தும் நோக்கோடும் பள்ளி மாணவர்களுக்கு ஒரு நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி
- இந்த சுற்றுலாவில் மாணவ, மாணவியர்களுக்கு காலை உணவு, மதிய உணவு, இருவேளை ஸ்நாக்ஸ் மற்றும் குடிநீர், வினாடி-வினா போட்டிக்கான பரிசுகள் ஆகியன சுற்றுலாத்துறையின் சார்பில் வழங்கப்படவுள்ளது.
நாமக்கல்:
உலக சுற்றுலா தின விழாவினை முன்னிட்டு மாவட்டத்திலுள்ள சுற்றுலா தலங்களை பிரபலப்ப டுத்தவும், பள்ளி மாணவ, மாணவிகளிடையே சுற்றுலா பற்றிய விழிப்பு ணர்வை ஏற்படுத்தும் நோக்கோடும் பள்ளி மாணவர்களுக்கு ஒரு நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவல கத்தில் நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை கலெக்டர் உமா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் நாமக்கல் மாவட்டத்தை சார்ந்த அரசு ஆதி திராவிட பழங்குடியின 50 மாணவ, மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் திருச்செங்கோடு காந்தி ஆசிரமம், சேலம் மாவட்டம் சங்ககிரி கோட்டை மற்றும் குரும்பப்பட்டி உயிரியியல் பூங்கா ஆகிய இடங்களுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டு பார்வையிட உள்ளார்கள்.
இந்த சுற்றுலாவில் மாணவ, மாணவியர்களுக்கு காலை உணவு, மதிய உணவு, இருவேளை ஸ்நாக்ஸ் மற்றும் குடிநீர், வினாடி-வினா போட்டிக்கான பரிசுகள் ஆகியன சுற்றுலாத்துறையின் சார்பில் வழங்கப்படவுள்ளது.
- திருச்செங்கோடு அர்த்த நாரீசுவரர் கோவிலின் உபகோவிலான பத்திரகாளியம்மன் கோவிலில் 25-ம் ஆண்டு நவராத்திரி விழா கடந்த 15-ந் தேதி தொடங்கியது.
- இதையொட்டி அம்மனுக்கு அபிசேகம், அலங்கார தீபாராதனை, யாக பூஜைகள், கன்னிகா மற்றும் சுமங்கலி பூஜைகள் நடத்தப்பட்டது.
திருச்செங்கோடு:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அர்த்த நாரீசுவரர் கோவிலின் உபகோவிலான பத்திரகாளியம்மன் கோவிலில் 25-ம் ஆண்டு நவராத்திரி விழா கடந்த 15-ந் தேதி தொடங்கியது.
இதையொட்டி அம்மனுக்கு அபிசேகம், அலங்கார தீபாராதனை, யாக பூஜைகள், கன்னிகா மற்றும் சுமங்கலி பூஜைகள் நடத்தப்பட்டது. இதில் அம்மன் கேதராம்பிகை அலங்காரத்தில் பக்தர்க ளுக்கு அருள்பாலித்தார்.
மேலும் கொலு மண்டப மேடையில் பல்வேறு திருத்தலங்கள், புராணங்கள், இதிகாசங்கள், புகழ் பெற்ற தலங்கள் குறித்த பொம்மைகள் அலங்கரித்து வைக்கப்பட்டு பூஜைகள் நடந்தது. இந்த கொலு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஒவ்வொரு நாளும் பத்ரகாளியம்மன் மூலவருக்கு அம்பிகை, கங்கணதாரணம்பிகை, குமுதாம்பிகை, மாங்கல்யதாராணம்பிகை உள்ளிட்ட பல்வேறு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது.
வருகிற 24-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கலசா பிசேகம், அன்னபாவாடை சாற்றல், சர்ப்ப வாகனத்தில் அம்மன் திருவீதி உலா, மஞ்சள் நீராட்டு விழாவுடன் நவராத்தி விழா பூஜைகள் நிறைவு பெறுகிறது.






