என் மலர்
நாமக்கல்
- திருச்செங்கோடு பிரிவில் காலியாக உள்ள, 20 ஊர்க்காவல் படை பணிக்கு, வருகிற 30-ந் தேதிக்குள் விண்ப்பிக்க வேண்டும்.
- நாமக்கல் பிரிவிற்கு ஆண்கள் 11, பெண்கள் 4, திருச்செங்கோடு பிரிவிற்கு ஆண்கள் 4, பெண்கள் ஒன்று என, மொத்தம், 20 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
நாமக்கல்:
நாமக்கல், திருச்செங்கோடு பிரிவில் காலியாக உள்ள, 20 ஊர்க்காவல் படை பணிக்கு, வருகிற 30-ந் தேதிக்குள் விண்ப்பிக்க வேண்டும்.
இது குறித்து நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்கண்ணன் தெரிவித்துள்ளதாவது:-
நாமக்கல் மாவட்ட ஊர்க்காவல்படைக்கு, நாமக்கல் பிரிவிற்கு ஆண்கள் 11, பெண்கள் 4, திருச்செங்கோடு பிரிவிற்கு ஆண்கள் 4, பெண்கள் ஒன்று என, மொத்தம், 20 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஊர்க்காவல் படையில் பணிபுரிய விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், குறைந்த பட்சம், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 முதல், 45 வயதுக்குள் இருக்க வேண்டும். எவ்வித குற்றப்பின்னணியும், எந்த அமைப்பிலோ, அரசியல் கட்சி சார்ந்தவராகவோ இருக்கக்கூடாது.
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் இன்று அக்., 21 முதல், வரும், 30 வரை, நாமக்கல் போலீஸ் நிலைய வளாகத்தில் உள்ள ஊர்க்காவல்படை அலுவலகத்தில் வழங்கப்படுகிறது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ ஊர்க்காவல்படை அலுவலகத்தில், வரும் 30-ந் தேதி, மாலை, 5 மணிக்குள் வந்து சேர வேண்டும். ஆட்கள் தேர்வு நடக்கும் நாள் பின்னர் தெரிவிக்கப்படும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், பள்ளி, கல்லுாரி மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் டிரைவிங் லைசென்ஸ் (இருப்பின்) ஆகியவற்றின் ஜெராக்ஸ் காப்பி இணைக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
- இன்று (சனிக்கிழமை) முதல் 5 நாட்களுக்கு நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.
- இன்று முதல் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) முதல் 5 நாட்களுக்கு நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இன்று முதல் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதன்படி இன்று 3 மி.மீட்டரும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) 6 மி.மீட்டரும், நாளை மறுநாள் (திங்கட்கிழமை) 15 மி.மீட்டரும், 24-ந் தேதி 12 மி.மீட்டரும், 25-ந் தேதி 40 மி.மீட்டரும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இன்று முதல் 3 நாட்களுக்கு மணிக்கு 5 கி.மீட்டர் வேகத்தில் வடகிழக்கு திசையில் இருந்தும், 24 மற்றும் 25-ந் தேதிகளில் மணிக்கு 4 கி.மீட்டர் வேகத்தில் கிழக்கு திசையில் இருந்தும் காற்று வீசும்.
இதனிடையே வெப்பநிலையை பொறுத்த வரையில் அதிகபட்சமாக 91.4 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 69.8 டிகிரியாகவும் இருக்கும். இதனிடையே காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக 80 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக 64 சதவீதமாகவும் இருக்கும்.
மழைக்கு வாய்ப்பு
சிறப்பு வானிலையை பொறுத்தவரை அடுத்த 5 நாட்களுக்கு வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் மாவட்டத்தில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இதனிடையே கடந்த வாரம் இறந்த கோழிகள் இறக்கை அழுகல் மற்றும் ரத்த சோகை நோயால் பாதிக்கப்பட்டு இறந்தது கோழியினை நோய் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆய்வகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. எனவே பண்ணையாளர்கள் கோழிகளுக்கு அளிக்கப்படும் தீவனத்தில் நுண்ணுயிர் கிருமிகளின் தாக்கம் உள்ளதா? என்பதை பரிசோதித்து அதற்கேற்ப தீவன மேலாண்மை முறைகளை கையாள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- பணியின்போது உயிரிழந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 21-ம் தேதி காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
- நாமக்கல் ஆயுதப்படை மைதானத்தில் உள்ள காவலர் நினைவு சின்னத்தில் காவலர் வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டது.
நாமக்கல்:
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பணியின்போது உயிரிழந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 21-ம் தேதி காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இதனையொட்டி, கடந்த ஓராண்டில் பணியின்போது வீரமரணம் அடைந்த 188 காவல்துறையினர் மற்றும் துணை ராணுவ படையினருக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி இன்று நாமக்கல் ஆயுதப்படை மைதானத்தில் உள்ள காவலர் நினைவு சின்னத்தில் காவலர் வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி., கலெக்டர் டாக்டர் உமா., ராமலிங்கம் எம்.எல்.ஏ. மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ் கண்ணன் ஆகியோர் பங்கேற்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள். பின்னர் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டு, 90 துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செய்யப்பட்டது. தொடர்ந்து வீர தியாகத்தை போற்றும் வகையில் வீரவணக்க உறுதிமொழி போலீசார் எடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜூ மற்றும் போலீசார் திரளாக பங்கேற்றனர்.பணியின்போது உயிரிழந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 21-ம் தேதி காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
- மோகனூரில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் பணம் வசூல் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தார்.
- நாமக்கல்லில் இருந்து கரூர் நோக்கி வந்த கார் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த தமிழ்செல்வன் மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை அருகே உள்ள பெரியசோளிபாளையம் தண்ணீர்பந்தல் பகுதியைச் சேர்ந்தவர் செல்லத்துரை. இவரது மகன் தமிழ்செல்வன் (வயது 25). இவருக்கு திருமணம் ஆகவில்லை.
இவர் மோகனூரில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் பணம் வசூல் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தார். இவர் நிதி நிறுவனத்திற்கு வசூல் பணிக்காக பரமத்திவேலூர் அருகே உள்ள அனிச்சம் பாளை யத்திற்கு சென்றுள்ளார்.
கார் மோதியது
பின்னர் தனது மோட்டார் சைக்கிளில் அனிச்சம்பாளையத்தில் இருந்து பரமத்திவேலூர் செல்ல நாமக்கல்- கரூர் பைபாஸ் சாலையை கடக்க முயன்றார்.
அப்போது நாமக்கல்லில் இருந்து கரூர் நோக்கி வந்த கார் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த தமிழ்செல்வன் மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று தமிழ்ச்செல்வன் உயிரிழந்தார்.
டிரைவர் கைது
இந்த விபத்து குறித்து வேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழ்ச்செல்வன் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த கார்த்திக் (36) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பரமத்திவேலூர் காவிரி கரையோர பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிர் செய்யப்பட்டுள்ளது.
- சிறு விவசாயிகள் பரமத்தி வேலூர் வாழைத்தார் விற்பனை சந்தைக்கு வாழைத்தார்களை நேரடியாக கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் காவிரி கரையோர பகுதிகளான வெங்கரை, குச்சிபாளையம், பொத்தனூர், வேலூர், அனிச்சம்பாளையம், நன்செய் இடையாறு, பாலப்பட்டி மற்றும் மோகனூர் உள்ளிட்ட பகுதிகளில் பல்லாயிரக்க ணக்கான ஏக்கரில் வாழை பயிர் செய்யப்பட்டுள்ளது.
கேரளா
இங்கு விளையும் வாழைத்தார்கள் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், சேலம், கோவை, ஈரோடு, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் தினந்தோறும் லாரிகள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. சிறு விவசாயிகள் பரமத்தி வேலூர் வாழைத்தார் விற்பனை சந்தைக்கு வாழைத்தார்களை நேரடியாக கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.300-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.350-க்கும், பச்சைநாடன் வாழைத்தார் அதிக பட்சமாக ரூ.250-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.400-க்கும் விற்பனையானது. மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.3-க்கும் ஏலம் போனது.
விலை உயர்வு
இந்த நிலையில் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.500-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.450-க்கும், பச்சைநாடன் வாழைத்தார் அதிகபட்ச மாக ரூ.350-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.300-க்கும் விற்பனையானது. மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.5-க்கும் விற்பனையானது. ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை விழாவை முன்னிட்டு வாழைத்தார்கள் விலை உயர்வடைந்து உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
- நாமக்கல் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி புவியியலாளர் கவுதமி தலைமையிலான அதிகாரிகள் கூடச்சேரி கல்லாங்காடு புதூர் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
- போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் பெருமாள் வழக்கு பதிவு செய்து பொக்லைன் எந்திரத்தை பறிமுதல் செய்து தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனரின் உத்தரவுப்படி நாமக்கல் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி புவியியலாளர் கவுதமி தலைமையிலான அதிகாரிகள் கூடச்சேரி கல்லாங்காடு புதூர் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் உள்ள சேம்பர் அருகே ராசாம்பாளையத்தைச் சேர்ந்த ரவி என்பவருக்கு சொந்தமான நிலத்தில் அரசு அனுமதி இன்றி பொக்லைன் எந்திரம் மூலம் மண் அள்ளிக் கொண்டு இருப்பதை பார்த்தனர். இதையடுத்து பொக்லைன் எந்திர டிரைவர் வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து உதவி புவியியலாளர் கவுதமி நல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் பெருமாள் வழக்கு பதிவு செய்து பொக்லைன் எந்திரத்தை பறிமுதல் செய்து தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர்.
- குமாரபாளையம் போலீஸ் நிலையம், குமாரபாளையம் தாலுகா ஓட்டுனர் பயிற்சி பள்ளி மற்றும் தனியார் கல்லூரி இணைந்து சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சியை நடத்தியது.
- ராஜம் தியேட்டர் பகுதியில் தொடங்கி ஆனங்கூர் பிரிவு, பள்ளிபாளையம் பிரிவு உள்ளிட்ட பிரதான சாலை வழியாக குமாரபாளையம் பஸ் நிலையம் வரை நடைபெற்றது.
குமாரபாளையம்:
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் வட்டார போக்குவரத்து அலுவலகம், குமாரபாளையம் போலீஸ் நிலையம், குமாரபாளையம் தாலுகா ஓட்டுனர் பயிற்சி பள்ளி மற்றும் தனியார் கல்லூரி இணைந்து சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சியை நடத்தியது.
இந்த விழிப்புணர்வு பேரணியானது குமாரபாளையம் ராஜம் தியேட்டர் பகுதியில் தொடங்கி ஆனங்கூர் பிரிவு, பள்ளிபாளையம் பிரிவு உள்ளிட்ட பிரதான சாலை வழியாக குமாரபாளையம் பஸ் நிலையம் வரை நடைபெற்றது.
விழிப்புணர்வு
இந்த பேரணியினை வட்டார போக்குவரத்து அலுவலர் பூங்குழலி கொடிய சைத்து தொடங்கி வைத்தார். பேரணியில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியவாறும், துண்டு பிரசுரங்களையும் பொது மக்களுக்கு விநியோகம் செய்தவாறும் சென்றனர்.
பேரணி குறித்து குமாரபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி கூறுகையில், இரு சக்கர வாகனம் ஓட்டும் போது தலைக்கவசம் அணிய வேண்டும், ஓட்டுனர் உரிமம் பெறாமல் வாகனம் ஓட்டுதல் கூடாது. சிறுவர்களுக்கு வாகனங்களை கொடுத்து அதனால் பொதுமக்களுக்கு விபத்து ஏற்பட்டால் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும், பஸ்களில் ஏர் ஹாரன்கள் பொருத்தக்கூடாது என்றார்.
- வெல்லத்தை ஏலம் எடுப்பதற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து வெல்லத்தை ஏலம் எடுத்துச் செல்கின்றனர்.
- கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 7 ஆயிரம் உருண்டை வெல்ல சிப்பங் களும், 3 ஆயிரம் அச்சு வெல்ல சிப்பங்களும் கொண்டு வரப்பட்டிருந்தது.
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் வட்டத்தில் ஜேடர்பாளை யம், சோழசிராமணி, அய்யம் பாளையம், கபிலர் மலை, பரமத்திவேலூர், பாண்டமங்கலம், நன்செய்இடையாறு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் கரும்பு பயிர் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் புதன்கிழமைகளில் வெல்ல ஏலச் சந்தையில் ஏலம் நடைபெறுகிறது.
வெல்லத்தை ஏலம் எடுப்பதற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து வெல்லத்தை ஏலம் எடுத்துச் செல்கின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 7 ஆயிரம் உருண்டை வெல்ல சிப்பங் களும், 3 ஆயிரம் அச்சு வெல்ல சிப்பங்களும் கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,250 வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,250 வரையிலும் ஏலம் போனது. புதன்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு தொடர் மழை காரணமாக வெல்லம் உற்பத்தி செய்ய முடியாததால் குறைந்த அளவிலேயே வெல்லம் கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் 4 ஆயிரத்து 500 உருண்டை வெல்ல சிப்பங்களும், ஆயிரத்து 500 அச்சு வெல்ல சிப்பங்களும் கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,300 வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று1,300 வரையிலும் ஏலம் போனது. தொடர்ந்து மழை பெய்து வந்ததால் வெல்லம் உற்பத்தி செய்ய முடியாததாலும், வரத்து குறைந்ததாலும் வெல்லம் விலை உயர்வடைந்து உள்ளதாக வெல்ல உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
- புதுச்சேரியில் இருந்து மது பாட்டில்கள் கடத்தி வந்ததாக நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு ராஜேஷ் கண்ணாவுக்கு ரகசிய தகவல் வந்தது.
- அந்த காரில் புதுச்சேரியில் இருந்து கடத்தி வந்த 102 மது மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மதுபாட்டில்களுடன் காரையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்
கொல்லிமலை:
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அரியூர் நாடு கெம்பளம் பஸ் நிறுத்தம் அருகே ஒரு சொகுசு கார் நின்றிருந்தது. அந்த காரில் புதுச்சேரியில் இருந்து மது பாட்டில்கள் கடத்தி வந்ததாக நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு ராஜேஷ் கண்ணாவுக்கு ரகசிய தகவல் வந்தது.
இந்த தகவலின்பேரில் டி.எஸ்.பி. தனராஜ் மேற்பார்வையில் சேந்தமங்கலம் இன்ஸ்பெக்டர் கோவிந்தராசன் தலைமையிலான வாழவந்தி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அந்த காரில் புதுச்சேரியில் இருந்து கடத்தி வந்த 102 மது மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மதுபாட்டில்களுடன் காரையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். இதில் காரின் உரிமையாளர் பெரிய கோவிலூரை சேர்ந்த கார்த்திக், செல்வராஜ் என்பதும், இருவரும் தலைமறைவாகி உள்ளதும் தெரியவந்தது. அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
- ராஜேந்திரன் வயது (64). ஓட்டல் உரிமையாளர் இவர் அயோத்தியாப் பட்டணம் பஸ் நிறுத்தம் அருகே ஆத்தூர் மெயின் ரோட்டில் ஓட்டல்நடத்தி வருகிறார்.
- அதிகாலை 4 மணியளவில் வழக்கம் போல தனது ஓட்டலில் இருந்து எதிரே உள்ள டீக்கடைக்கு டீ வாங்க ஆத்தூர் மெயின்ரோட்டை வடக்கில் இருந்து தெற்காக கடக்க முயன்றார்.
சேலம்:
சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் கோமுநகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் வயது (64).
ஓட்டல் உரிமையாளர்
இவர் அயோத்தியாப் பட்டணம் பஸ் நிறுத்தம் அருகே ஆத்தூர் மெயின் ேராட்டில் ஓட்டல்நடத்தி வருகிறார். இன்று அதிகாலை 4 மணியளவில் வழக்கம் போல தனது ஓட்டலில் இருந்து எதிரே உள்ள டீக்கடைக்கு டீ வாங்க ஆத்தூர் மெயின்ரோட்டை வடக்கில் இருந்து தெற்காக கடக்க முயன்றார்.
அப்போது ஆத்தூரில் இருந்து சேலம் நோக்கி வந்த மினி சரக்கு வாகனம் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ராஜேந்திரன் தலை உள்பட பல இடங்களில் படுகாயம் அடைந்தார்.
பரிதாப சாவு
அவரை மீட்டு அந்த பகுதியினர் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ராஜேந்திரன் இறந்து விட்டார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்ககாக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து அம்மாப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மோகன் கடந்த சில வருடங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து சிகிச்சை பெற்றும் உடல் நிலை சரியாகாததால்
- மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த மோகன் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள அத்தியப்பம்பாளையத்தை சேர்ந்தவர் மோகன் (48). விவசாயி. இவரது மனைவி தீபலட்சுமி (39). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். மோகன் கடந்த சில வருடங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து சிகிச்சை பெற்றும் உடல் நிலை சரியாகாததால் மோகன் கடந்த சில நாட்களாக மனமுடைந்த நிலையில் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் மனைவி தோட்டத்திற்கு சென்று விட்ட நேரத்தில் தனியாக வீட்டில் இருந்த மோகன் விஷம் குடித்து உயிருக்கு போராடியுள்ளார். இவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு நாமக்கல்லில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த மோகன் சிகிச்சை பலனின்றி இறந்தார். இகுறித்து வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரமத்தி வேலூர்:
சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, எள், நிலக்கடலை காய் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. இதில் அருகே உள்ள கரூர் ஒன்றியம், பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.
அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் நிலக்கடலை காய் 42.66 1/2குவிண்டால் எடை கொண்ட 140-மூட்டை நிலக்கடலை காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.86.46-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.68.29-க்கும், சராசரி விலையாக ரூ.85.29-க்கும் என ரூ.3 லட்சத்து 32ஆயிரத்து 148-க்கு ஏலம் போனது.






