என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தெப்பத்தேர் வெள்ளோட்டம்"

    • அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான விஜயநகர பேரரசு காலத்தில் திரயம்க உடையார் என்பவரால் உருவாக்கப்பட்ட நகராட்சியால் நிர்வாகிக்கப்படும் பெரிய தெப்பக்குளம் உள்ளது.
    • இங்கு பாரம்பரியமாக மாரியம்மன் திருவிழாவின் போது தெப்ப தேர் ஓட்டுவது வழக்கம்.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு-ஈரோடு சாலையில் அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான விஜயநகர பேரரசு காலத்தில் திரயம்க உடையார் என்பவரால் உருவாக்கப்பட்ட நகராட்சியால் நிர்வாகிக்கப்படும் பெரிய தெப்பக்குளம் உள்ளது.

    இங்கு பாரம்பரியமாக மாரியம்மன் திருவிழாவின் போது தெப்ப தேர் ஓட்டுவது வழக்கம். கடந்த 51 ஆண்டுகளுக்கு முன்பு 1971-ம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான வறட்சியின் காரணமாக தெப்பக்குளத்தில் தண்ணீர் இல்லாததால் தெப்பதேர் நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது. மேலும் தெப்ப தேர் நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெறாமல் இருந்தது.

    இந்த நிலையில் கடந்த ஆண்டு தெப்பத்தேர் திருவிழா வெகு விமர்சையாக நடந்தது. இந்த ஆண்டு மாரியம்மன் திருவிழா கடந்த 17 -ந் தேதி பூச்சாட்டுகளுடன் தொடங்கியது. வருகிற 28-ந் தேதி தெப்பக்குளத்தில் கம்பம் விடும் நிகழ்ச்சி நடக்க உள்ளது.

    அதற்கு முந்தைய நாளான 27-ந் தேதி வெள்ளிக்கிழமை தெப்போற்சவ திருவிழா நடத்தப்பட உள்ளது. அதற்கான கள ஆய்வுப் பணிகள் நடந்தது. கடந்த ஆண்டு 90 பேரல்கள் கொண்டு 20 அடிக்கு 20 அடி என அமைக்கப்பட்டிருந்த தெப்பம் இந்த ஆண்டு 150 பேரல்களை 28 அடிக்கு 28 அடியாக அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 2 அடுக்குகளாக இருந்தது. தற்போது 3 அடுக்ககளாக அமைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அமைக்கப்பட்டுள்ள இந்த தெப்பதேர் வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது. இதில் தாசில்தார் சுகந்தி, திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு, கோவில் செயல் அலுவலர் ரமணிகாந்தன்,கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் தங்கமுத்து, நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேந்திரன், நகர் மன்ற உறுப்பினர் ரவிக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×