என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கீழ்சாத்தம்பூர் கிராமத்தில் விவசாயிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி
    X

    கீழ்சாத்தம்பூர் கிராமத்தில் விவசாயிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்ற காட்சி.

    கீழ்சாத்தம்பூர் கிராமத்தில் விவசாயிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி

    • வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் “வேளாண் விஞ்ஞானி, விரிவாக்க அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்துரையாடல்’’ நிகழ்ச்சி கீழ்சாத்தம்பூர் கிராமத்தில் நடைபெற்றது.
    • வேளாண்மை அலுவலர் மோகன் விவசாயிகளுக்கு உயிர் உரங்கள், உயிரியல் பூஞ்சான கொல்லிகள் மூலம் விதைநேர்த்தி செய்தல், நுண்ணூட்ட கலவைகள் பயிருக்கு இடுவதன் முக்கியத்துவம் குறித்து பேசினார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் வட்டாரம் வேளாண்மைத் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் "வேளாண் விஞ்ஞானி, விரிவாக்க அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்துரையாடல்'' நிகழ்ச்சி கீழ்சாத்தம்பூர் கிராமத்தில் நடைபெற்றது.

    வேளாண்மை உதவி இயக்குநர் சித்ரா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பயிர் சாகுபடி முறைகள், பயிர்பாதுகாப்பு முறைகள் குறித்து விளக்கமளித்தார். நாமக்கல் வேளாண்மை அலுவலர் மோகன் விவசாயிகளுக்கு உயிர் உரங்கள், உயிரியல் பூஞ்சான கொல்லிகள் மூலம் விதைநேர்த்தி செய்தல், நுண்ணூட்ட கலவைகள் பயிருக்கு இடுவதன் முக்கியத்துவம் குறித்து பேசினார்.

    கோவை வேளாண்மை பல்கலைகழகம் சிறப்பு அலுவலர் இயற்கை வள மேம்பாடு (ஓய்வு) இயக்குநர் அப்பாவு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தென்னை கன்று தேர்வு முதல் அறுவடை வரை உள்ள தொழில்நுட்பங்கள், தென்னையை தாக்கும் காண்டாமிருக வண்டு, சிகப்பு கூன் வண்டு, கரையான் தாக்குதல், தென்னை குரும்பை உதிர்தல், உரமேலாண்மை, மற்றும் மண்ணிலும் தண்ணீரிலும் ஏற்படும் சத்துப்பற்றாக்குறை யினை எவ்வாறு மேம்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு விரிவாக விளக்கமளித்தார்.

    இந்த நிகழ்ச்சிக்கு உதவி வேளாண்மை அலுவலர் மாலதி, அட்மா திட்ட வட்டார தொழில் நுட்ப மேலாளர் ரமேஷ், உதவி தொழில் நுட்ப மேலாளர் கவிசங்கர் ஆகியோர் ஏற்பாடு செய்து இருந்தனர்.

    Next Story
    ×