என் மலர்
நீங்கள் தேடியது "கலந்துரையாடல் நிகழ்ச்சி"
- சர்வதேச அறக்கட்டளை நிறுவனருமான எம்.எஸ்.விஜி கலந்துரையாடினார்.
- பாடமாக எடுத்து கொண்டு நாம் மற்றவர்களுக்கு உதவிகள் செய்து வாழ வேண்டும்.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள ஜெயந்தி சி.பி.எஸ்.சி. மேல்நிலைப் பள்ளியில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாணவ,மாணவிகளிடம் அமெரிக்க வாழ் இந்திய மருத்துவரும், சர்வதேச அறக்கட்டளை நிறுவனருமான எம்.எஸ்.விஜி கலந்துரையாடினார். இதில் பள்ளி தாளாளர் கிருஷ்ணன், பல்லடம் வனம் இந்தியா அறக்கட்டளை இயக்குநர் டி.எம்.எஸ்.பழனிசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் மருத்துவர் எம்.எஸ்.விஜி கூறியதாவது:-
நான் ஈரோட்டை சேர்ந்தவன். அமெரிக்காவில் குடியுரிமை பெற்று கடந்த பல ஆண்டுகளாக அங்கு வசித்து வருகிறேன். நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் மரத்தடியில் மண் தரையில் அமர்ந்து தான் படித்தேன். ஆனால் தற்போது அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பாதுகாப்பான கட்டடத்தில் மேசையில் அமர்ந்து படிக்கின்றனர். மேலும் இன்றைய விஞ்ஞான வளர்ச்சியால் தற்போது படிக்கும் குழந்தைகள் அறிவுபூர்வமான கேள்விகளை கேட்கின்றனர். அந்தளவுக்கு கல்வி துறை வளர்ச்சி அடைந்துள்ளது.
தமிழக அரசு பள்ளி கல்வி துறைக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதால் இன்றைய கல்வி துறை சர்வதேச அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ளது. அனைத்து பள்ளிகளிலும் நூலகம் அமைத்து அதில் சர்வதேச அளவிலான புத்தகங்களை குழந்தைகள் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். கொரோனா தொற்றால், மற்ற உயிர்களை காப்பாற்றினால் தான் நமது உயிர் பாதுகாக்கப்படும் என்கிற தத்துவத்தை மனித குலம் உணர்ந்துகொண்டது. எனவே அதனை பாடமாக எடுத்து கொண்டு நாம் மற்றவர்களுக்கு உதவிகள் செய்து வாழ வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- சிறார் சிறுமிகளுக்கு கலந்துரையாடல் நிகழ்ச்சி தருமபுரி காந்திநகரில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது.
- இச்சிறார் மற்றும் சிறுமியர் மன்ற புதுப்பித்தலுக்கு உறுதுணையாக இருந்த குழுவினர்களுக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கபட்டது.
தருமபுரி,
சேலம் சரகத்தில் மொத்தம் 41 காவல் சிறுமி மற்றும் சிறார் மன்றங்கள் உள்ளன. இதில் 1372 சிறுமி மற்றும் சிறார்கள் பயன் பெற்று வருகின்றனர். கடந்த 2012 ம் ஆண்டில் துவங்கப்பட்டு ஒவ்வொரு சிறுமி மற்றும் சிறார் மன்றத்திற்கும் ஆண்டிற்கு ரூ.66,000 வழங்கப்பட்டது. தற்போது இந்த தொகை ரூ.75,000 ஆக உயர்த்தி வழங்கப்படுகிறது.
காவல் சிறுமி மற்றும் சிறார் மன்றங்கள் கொரோனா காலத்தில் இந்த மன்றங்களுக்கான முழு பலனைபெற இயலவில்லை. இந்நிலையில் மீண்டும் சிறார் மன்றத்தை புதுபிக்கும் வகையில் தருமபுரியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமையில் சிறார் சிறுமிகளுக்கு கலந்துரையாடல் நிகழ்ச்சி தருமபுரி காந்திநகரில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக சேலம் சரக காவல் துறை துணை தலைவர் ராஜேஷ்வரி கலந்து கொண்டு தருமபுரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 10 சிறுமி மற்றும் சிறார் மன்றங்களில் உள்ள 282 மாணவ ,மாணவியர்களுக்கு விளையாட்டு போட்டிகளின் போது அணிந்து கொள்ள ஏதுவாக டி சட்டை, பள்ளிக்கு புத்தகம் கொண்டு செல்லும் கைப்பைகள் ஆகியவைகளை தனியார் பங்களிப்பளிப்புடன் வழங்கினார்.
மேலும் விளையாட்டுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி மற்றும் ஆங்கிலப் புலமை போன்ற பயிற்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் 41 சிறார் மன்ற உறுப்பினர்களுக்கும் கிடைக்க ஏற்பாடு செய்யபட்டன.
சுகாதார முகாம் மற்றும் தோல் சிகிச்சை தவிர பொங்கல்விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளை கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டன. மேலும் இச்சிறார் மற்றும் சிறுமியர் மன்ற புதுப்பித்தலுக்கு உறுதுணையாக இருந்த குழுவினர்களுக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கபட்டது.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சேலம் சரக காவல் துறை துணை தலைவர் ராஜேஷ்வரி இதன் மூலம் மிகவும் நலிவடைந்த மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள சிறார்கள் சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடாமல் கல்வி மற்றும் முன்னேற்றத்தின் மீது நாட்டத்தை செலுத்தும் நோக்கில் இந்த முன்னெடுப்பை மேற்கொண்டு நடைமுறைப்படுத்தி வரப்படுகிறது.
இதனால் சமூக சிந்தனையையும், நல்ல குடிமக்களுக்கான தகுதியையும் குழந்தை பருவத்திலேயே வளர்த்தெடுக்க முன்னுரிமை கொடுத்து சேலம் சரகத்தில் முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என சேலம் சரக காவல் துறை துணை தலைவர் ராஜேஷ்வரி தெரிவித்தார்.
- வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் “வேளாண் விஞ்ஞானி, விரிவாக்க அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்துரையாடல்’’ நிகழ்ச்சி கீழ்சாத்தம்பூர் கிராமத்தில் நடைபெற்றது.
- வேளாண்மை அலுவலர் மோகன் விவசாயிகளுக்கு உயிர் உரங்கள், உயிரியல் பூஞ்சான கொல்லிகள் மூலம் விதைநேர்த்தி செய்தல், நுண்ணூட்ட கலவைகள் பயிருக்கு இடுவதன் முக்கியத்துவம் குறித்து பேசினார்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் வட்டாரம் வேளாண்மைத் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் "வேளாண் விஞ்ஞானி, விரிவாக்க அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்துரையாடல்'' நிகழ்ச்சி கீழ்சாத்தம்பூர் கிராமத்தில் நடைபெற்றது.
வேளாண்மை உதவி இயக்குநர் சித்ரா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பயிர் சாகுபடி முறைகள், பயிர்பாதுகாப்பு முறைகள் குறித்து விளக்கமளித்தார். நாமக்கல் வேளாண்மை அலுவலர் மோகன் விவசாயிகளுக்கு உயிர் உரங்கள், உயிரியல் பூஞ்சான கொல்லிகள் மூலம் விதைநேர்த்தி செய்தல், நுண்ணூட்ட கலவைகள் பயிருக்கு இடுவதன் முக்கியத்துவம் குறித்து பேசினார்.
கோவை வேளாண்மை பல்கலைகழகம் சிறப்பு அலுவலர் இயற்கை வள மேம்பாடு (ஓய்வு) இயக்குநர் அப்பாவு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தென்னை கன்று தேர்வு முதல் அறுவடை வரை உள்ள தொழில்நுட்பங்கள், தென்னையை தாக்கும் காண்டாமிருக வண்டு, சிகப்பு கூன் வண்டு, கரையான் தாக்குதல், தென்னை குரும்பை உதிர்தல், உரமேலாண்மை, மற்றும் மண்ணிலும் தண்ணீரிலும் ஏற்படும் சத்துப்பற்றாக்குறை யினை எவ்வாறு மேம்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு விரிவாக விளக்கமளித்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு உதவி வேளாண்மை அலுவலர் மாலதி, அட்மா திட்ட வட்டார தொழில் நுட்ப மேலாளர் ரமேஷ், உதவி தொழில் நுட்ப மேலாளர் கவிசங்கர் ஆகியோர் ஏற்பாடு செய்து இருந்தனர்.






