என் மலர்
நீங்கள் தேடியது "Discussion program"
- சர்வதேச அறக்கட்டளை நிறுவனருமான எம்.எஸ்.விஜி கலந்துரையாடினார்.
- பாடமாக எடுத்து கொண்டு நாம் மற்றவர்களுக்கு உதவிகள் செய்து வாழ வேண்டும்.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள ஜெயந்தி சி.பி.எஸ்.சி. மேல்நிலைப் பள்ளியில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாணவ,மாணவிகளிடம் அமெரிக்க வாழ் இந்திய மருத்துவரும், சர்வதேச அறக்கட்டளை நிறுவனருமான எம்.எஸ்.விஜி கலந்துரையாடினார். இதில் பள்ளி தாளாளர் கிருஷ்ணன், பல்லடம் வனம் இந்தியா அறக்கட்டளை இயக்குநர் டி.எம்.எஸ்.பழனிசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் மருத்துவர் எம்.எஸ்.விஜி கூறியதாவது:-
நான் ஈரோட்டை சேர்ந்தவன். அமெரிக்காவில் குடியுரிமை பெற்று கடந்த பல ஆண்டுகளாக அங்கு வசித்து வருகிறேன். நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் மரத்தடியில் மண் தரையில் அமர்ந்து தான் படித்தேன். ஆனால் தற்போது அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பாதுகாப்பான கட்டடத்தில் மேசையில் அமர்ந்து படிக்கின்றனர். மேலும் இன்றைய விஞ்ஞான வளர்ச்சியால் தற்போது படிக்கும் குழந்தைகள் அறிவுபூர்வமான கேள்விகளை கேட்கின்றனர். அந்தளவுக்கு கல்வி துறை வளர்ச்சி அடைந்துள்ளது.
தமிழக அரசு பள்ளி கல்வி துறைக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதால் இன்றைய கல்வி துறை சர்வதேச அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ளது. அனைத்து பள்ளிகளிலும் நூலகம் அமைத்து அதில் சர்வதேச அளவிலான புத்தகங்களை குழந்தைகள் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். கொரோனா தொற்றால், மற்ற உயிர்களை காப்பாற்றினால் தான் நமது உயிர் பாதுகாக்கப்படும் என்கிற தத்துவத்தை மனித குலம் உணர்ந்துகொண்டது. எனவே அதனை பாடமாக எடுத்து கொண்டு நாம் மற்றவர்களுக்கு உதவிகள் செய்து வாழ வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் “வேளாண் விஞ்ஞானி, விரிவாக்க அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்துரையாடல்’’ நிகழ்ச்சி கீழ்சாத்தம்பூர் கிராமத்தில் நடைபெற்றது.
- வேளாண்மை அலுவலர் மோகன் விவசாயிகளுக்கு உயிர் உரங்கள், உயிரியல் பூஞ்சான கொல்லிகள் மூலம் விதைநேர்த்தி செய்தல், நுண்ணூட்ட கலவைகள் பயிருக்கு இடுவதன் முக்கியத்துவம் குறித்து பேசினார்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் வட்டாரம் வேளாண்மைத் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் "வேளாண் விஞ்ஞானி, விரிவாக்க அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்துரையாடல்'' நிகழ்ச்சி கீழ்சாத்தம்பூர் கிராமத்தில் நடைபெற்றது.
வேளாண்மை உதவி இயக்குநர் சித்ரா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பயிர் சாகுபடி முறைகள், பயிர்பாதுகாப்பு முறைகள் குறித்து விளக்கமளித்தார். நாமக்கல் வேளாண்மை அலுவலர் மோகன் விவசாயிகளுக்கு உயிர் உரங்கள், உயிரியல் பூஞ்சான கொல்லிகள் மூலம் விதைநேர்த்தி செய்தல், நுண்ணூட்ட கலவைகள் பயிருக்கு இடுவதன் முக்கியத்துவம் குறித்து பேசினார்.
கோவை வேளாண்மை பல்கலைகழகம் சிறப்பு அலுவலர் இயற்கை வள மேம்பாடு (ஓய்வு) இயக்குநர் அப்பாவு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தென்னை கன்று தேர்வு முதல் அறுவடை வரை உள்ள தொழில்நுட்பங்கள், தென்னையை தாக்கும் காண்டாமிருக வண்டு, சிகப்பு கூன் வண்டு, கரையான் தாக்குதல், தென்னை குரும்பை உதிர்தல், உரமேலாண்மை, மற்றும் மண்ணிலும் தண்ணீரிலும் ஏற்படும் சத்துப்பற்றாக்குறை யினை எவ்வாறு மேம்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு விரிவாக விளக்கமளித்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு உதவி வேளாண்மை அலுவலர் மாலதி, அட்மா திட்ட வட்டார தொழில் நுட்ப மேலாளர் ரமேஷ், உதவி தொழில் நுட்ப மேலாளர் கவிசங்கர் ஆகியோர் ஏற்பாடு செய்து இருந்தனர்.
- விருதுநகரில் கலந்துரையாடும் நிகழ்ச்சியில் தொடர் செயல்பாடுகளே வெற்றியை தரும்.
- பள்ளி மாணவர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம், வத்திராயிருப்பு நாடார் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் அம்மாபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவி களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுடன் கலந்துரை யாடினார்.
அப்போது அவர் பேசிய தாவது:-
நமக்கான அன்றாட வாழ்க்கையில் விருப்பமான ஒன்றை தேர்ந்தெடுப்பதற்கு பல்வேறு தரவுகள் நமக்கு தேவைப்படுகிறது. அதோடு அதனை அடைவதற்கான நமது முயற்சியும் தேவைப் படுகிறது. அதுபோல உயர்கல்வியில் நமக்கு விருப்பமான துறையை படிப்பதற்கு அதற்கான புரிதலும், அதற்கான கல்லூரிகள், மதிப்பெண்கள் ஆகிய தரவுகளை அறிந்து கொண்டு அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
ஒரு காலத்தில் மாண வர்களுக்கான வாய்ப்புகள் குறித்து அறிந்து கொள்வது மிகவும் அரிதாக இருந்தது. ஆனால் தற்போது அதற் கான தகவல்கள் அனைத்தும் இணையதளம் மூலம் கைப்பேசியில் பெற முடிகிறது.
மாணவர்கள் தங்க ளுக்கான இலக்கை நிர்ண யித்துக் கொண்டு, அதற் கான முயற்சிகளை நீங்கள் தான் எடுக்க வேண்டும். தற்போது மேற்கொள்ளப் பட்டு வரும் முயற்சிகளை விட சிறிதளவு அதிகமான முயற்சிகள் மேற்கொள்ளும் போது நமக்கான கனவினை அடை யலாம்.
யார் தொடர்ச்சியாக ஒரு செயலை செய்கிறார் களோ அவர்கள் மிகப் பெரிய வெற்றியாளர்களாக ஆகிறார்கள். வெற்றி பெறு வதற்கும், சாதிப்பதற்கும் அறிவும், திறமையும் தேவை யில்லை. தொடர்ச்சியான செயல்பாடு தான் தேவை என்பதுதான் இத்தனை ஆண்டுகால மனித குல வரலாறு நமக்கு தரும் செய்தி. எனவே, மாணவ, மாணவிகள் தங்களது தொடர்ச்சியான செயல் பாடுகள் மூலம் பெறும் நல்ல மதிப்பெண்கள் மூலம், வாய்ப்புகளை பெறும் போது, நிச்சயமாக வெற்றி யடையலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்வில் பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.






