என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலந்துரையாடும் நிகழ்ச்சி"

    • விருதுநகரில் கலந்துரையாடும் நிகழ்ச்சியில் தொடர் செயல்பாடுகளே வெற்றியை தரும்.
    • பள்ளி மாணவர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம், வத்திராயிருப்பு நாடார் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் அம்மாபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவி களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுடன் கலந்துரை யாடினார்.

    அப்போது அவர் பேசிய தாவது:-

    நமக்கான அன்றாட வாழ்க்கையில் விருப்பமான ஒன்றை தேர்ந்தெடுப்பதற்கு பல்வேறு தரவுகள் நமக்கு தேவைப்படுகிறது. அதோடு அதனை அடைவதற்கான நமது முயற்சியும் தேவைப் படுகிறது. அதுபோல உயர்கல்வியில் நமக்கு விருப்பமான துறையை படிப்பதற்கு அதற்கான புரிதலும், அதற்கான கல்லூரிகள், மதிப்பெண்கள் ஆகிய தரவுகளை அறிந்து கொண்டு அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

    ஒரு காலத்தில் மாண வர்களுக்கான வாய்ப்புகள் குறித்து அறிந்து கொள்வது மிகவும் அரிதாக இருந்தது. ஆனால் தற்போது அதற் கான தகவல்கள் அனைத்தும் இணையதளம் மூலம் கைப்பேசியில் பெற முடிகிறது.

    மாணவர்கள் தங்க ளுக்கான இலக்கை நிர்ண யித்துக் கொண்டு, அதற் கான முயற்சிகளை நீங்கள் தான் எடுக்க வேண்டும். தற்போது மேற்கொள்ளப் பட்டு வரும் முயற்சிகளை விட சிறிதளவு அதிகமான முயற்சிகள் மேற்கொள்ளும் போது நமக்கான கனவினை அடை யலாம்.

    யார் தொடர்ச்சியாக ஒரு செயலை செய்கிறார் களோ அவர்கள் மிகப் பெரிய வெற்றியாளர்களாக ஆகிறார்கள். வெற்றி பெறு வதற்கும், சாதிப்பதற்கும் அறிவும், திறமையும் தேவை யில்லை. தொடர்ச்சியான செயல்பாடு தான் தேவை என்பதுதான் இத்தனை ஆண்டுகால மனித குல வரலாறு நமக்கு தரும் செய்தி. எனவே, மாணவ, மாணவிகள் தங்களது தொடர்ச்சியான செயல் பாடுகள் மூலம் பெறும் நல்ல மதிப்பெண்கள் மூலம், வாய்ப்புகளை பெறும் போது, நிச்சயமாக வெற்றி யடையலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்வில் பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

    ×