என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அருள்புரம் ஜெயந்தி பள்ளியில்  கலந்துரையாடல் நிகழ்ச்சி
    X

    அருள்புரம் ஜெயந்தி பள்ளியில் கலந்துரையாடல் நிகழ்ச்சி

    • சர்வதேச அறக்கட்டளை நிறுவனருமான எம்.எஸ்.விஜி கலந்துரையாடினார்.
    • பாடமாக எடுத்து கொண்டு நாம் மற்றவர்களுக்கு உதவிகள் செய்து வாழ வேண்டும்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள ஜெயந்தி சி.பி.எஸ்.சி. மேல்நிலைப் பள்ளியில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாணவ,மாணவிகளிடம் அமெரிக்க வாழ் இந்திய மருத்துவரும், சர்வதேச அறக்கட்டளை நிறுவனருமான எம்.எஸ்.விஜி கலந்துரையாடினார். இதில் பள்ளி தாளாளர் கிருஷ்ணன், பல்லடம் வனம் இந்தியா அறக்கட்டளை இயக்குநர் டி.எம்.எஸ்.பழனிசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் மருத்துவர் எம்.எஸ்.விஜி கூறியதாவது:-

    நான் ஈரோட்டை சேர்ந்தவன். அமெரிக்காவில் குடியுரிமை பெற்று கடந்த பல ஆண்டுகளாக அங்கு வசித்து வருகிறேன். நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் மரத்தடியில் மண் தரையில் அமர்ந்து தான் படித்தேன். ஆனால் தற்போது அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பாதுகாப்பான கட்டடத்தில் மேசையில் அமர்ந்து படிக்கின்றனர். மேலும் இன்றைய விஞ்ஞான வளர்ச்சியால் தற்போது படிக்கும் குழந்தைகள் அறிவுபூர்வமான கேள்விகளை கேட்கின்றனர். அந்தளவுக்கு கல்வி துறை வளர்ச்சி அடைந்துள்ளது.

    தமிழக அரசு பள்ளி கல்வி துறைக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதால் இன்றைய கல்வி துறை சர்வதேச அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ளது. அனைத்து பள்ளிகளிலும் நூலகம் அமைத்து அதில் சர்வதேச அளவிலான புத்தகங்களை குழந்தைகள் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். கொரோனா தொற்றால், மற்ற உயிர்களை காப்பாற்றினால் தான் நமது உயிர் பாதுகாக்கப்படும் என்கிற தத்துவத்தை மனித குலம் உணர்ந்துகொண்டது. எனவே அதனை பாடமாக எடுத்து கொண்டு நாம் மற்றவர்களுக்கு உதவிகள் செய்து வாழ வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×