என் மலர்tooltip icon

    நாமக்கல்

    • பரமத்திவேலூர் பல்வேறு பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்து வருகின்றனர்.
    • கரும்பை வெட்டிச் செல்வதற்காக மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு விவசாயி கள் பதிவு செய்துள்ளனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை, அண்ணா நகர், சேளூர், பிலிக்கல்பாளையம், கோப்பணம்பாளையம், குன்னத்தூர், ஆனங்கூர், வடகரை யாத்தூர், பெரிய சோளிபாளையம், கபிலக்கு றிச்சி, இருக்கூர், கொத்த மங்கலம், தி.கவுண்டம் பாளையம், சிறு நல்லிகோவில், திடுமல், குறும்பலமகாதேவி, ஜமீன் இளம் பள்ளி, சோழசிராமணி, ஜேடர்பாளையம், அய்யம்பா ளையம், கபிலர்மலை, நன்செய்இடையாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்து வருகின்றனர்.

    வெல்லம் தயாரிக்கும் ஆலை

    கரும்பை வெட்டிச் செல்வதற்காக மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு விவசாயி கள் பதிவு செய்துள்ளனர். பதிவு செய்யாத விவசாயிகள் வெல்லம் தயாரிக்கும் ஆலைகளுக்கு கரும்பை விற்பனை செய்கின்றனர். இந்த ஆலைகளில் கரும்பிலிருந்து அச்சு வெல்லம், உருண்டை வெல்லம் மற்றும் நாட்டு சர்க்கரை தயார் செய்கின்றனர். உற்பத்தி செய்யப்படும் வெல்லத்தை 30 கிலோ கொண்ட சிப்பங்களாக கட்டி பிலிக்கல்பாளையத்தில் உள்ள வெல்லம் ஏல மார்க்கெட்டில் சனி மற்றும் புதன்கிழமைகளில் விற்பனை செய்கின்றனர்.

    பிலிக்கல்பாளையத்தில் செயல்பட்டு வரும் வெல்லம் ஏல மார்க்கெட்டிற்குள் 13 ஏல மண்டிகள் உள்ளது. இங்கே குறிப்பிட்ட சில நபர்களே வெல்லம் விலையை நிர்ணயம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் வெல்லம் தயாரிப்பில் ஈடுபடும் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைப்பதில்லை என கூறப்படுகிறது.

    தேசிய வேளாண்மை சந்தை

    எனவே தேசிய வேளாண்மை சந்தையில் தேங்காய் பருப்பு, தேங்காய் ஏலம் நடத்துவது போல் வெல்லத்தையும் ஏலம் விட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தனியார் ஏல மண்டிகள் சிண்டிகேட் அமைத்து விலை நிர்ணயம் செய்வதை கட்டுப்படுத்த வேண்டும்.

    அதேபோல் வெல்லம் தயாரிக்கும் ஆலை அதிபர்கள் சிண்டிகேட் அமைத்துக் கொண்டு கரும்பு விலைகளை அவர்களே நிர்ணயம் செய்து ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் வாங்குவதில்லை. இதனால் விவசாயிகள் பாதிப்பு அடைந்து வருகின்றனர்.

    இது குறித்து கரும்பு ஆலை வெல்லம் தயாரிப்பில் ஈடுபடும் விவசாயிகள் கூறியதாவது:-

    ஏல மண்டியில் வெல்லம் ஒரு கிலோ 40 ரூபாய்க்கு விலை போகின்றது. ஆனால் வெளிமார்க்கெட்டில் ஒரு கிலோ 60 முதல் 80 ரூபாய் வரை விற்பனை ஆகிறது.

    விவசாயிகளை விட கமிஷன் ஏஜென்ட்களுக்கும், புரோக்கர்களுக்கும் அதிக அளவில் லாபம் ஈட்டுகின்றனர். வெல்லம் தயாரிப்பில் ஈடுபடும் விவசாயிகளுக்கு சொற்ப லாபமே கிடைக்கிறது.

    கலப்பட வெல்லம்

    ஒரு சில கரும்பு ஆலை உரிமையாளர்கள் வெல்லம் தயாரிக்கும் போது அரசால் தடை செய்யப்பட்ட மலிவான சர்க்கரையை 1 கிலோ பத்து ரூபாய்க்கு வாங்கி வெல்லப்பாகில் கலந்து கலப்பட வெல்லத்தை 40 ரூபாய்க்கு விற்கின்றனர். அதேபோல் வெல்லம் தயாரிக்கும் பாகில் பல்வேறு வகையான ரசாயன கலவைகள் கலக்கப்படுகின்றன.

    கலப்பட வெல்லத்தை சாப்பிடுபவர்களுக்கு வயிற்று உபாதைகள் ஏற்படும். வெல்லம் தயாரிப்பில் கலப்படத்தை தவிர்க்கவும், விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கவும் தமிழக அரசு தேசிய வேளாண்மை சந்தையில் வெல்லம் ஏலம் நடத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • பரமத்தி வேலூரில் 400 ஆண்டுகள் பழமையான எல்லையம்மன் கோவிலில் நவராத்திரி விழாவின் 10-வது நாளை முன்னிட்டு பூச்சொறிதல் விழா நடைபெற்றது.
    • இதையொட்டி உற்சவர் அம்மனுக்கு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் 400 ஆண்டுகள் பழமையான எல்லையம்மன் கோவிலில் நவராத்திரி விழாவின் 10-வது நாளை முன்னிட்டு பூச்சொறிதல் விழா நடைபெற்றது.

    இதையொட்டி உற்சவர் அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு அர்த்தநாரீஸ்வரர் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப் பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் பரமத்திவேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை வேலூர் எல்லையம்மன் கோவில் நவராத்திரி விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    அதேபோல் கோப்பணம் பாளையம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவி லில் நவராத்திரி 10-ம் நாளை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    • பள்ளிபாளையம் பகுதியில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறி தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
    • 20 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு இடங்களில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.

    பள்ளிபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறி தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் சார்பில் பள்ளிபாளையத்தின் பல்வேறு இடங்களில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.

    இதில் நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் அசோகன், மாவட்டத் தலைவர் மோகன், ஒன்றிய செயலாளர் முத்துக்குமார், பள்ளிபாளையம் ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராள மானோர் கலந்துகொண்டு 20 சதவீத போனஸ் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர். தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை அடுத்தடுத்து நடத்த உள்ளதாகவும் தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • கீரம்பூர் அருகே உள்ள தொட்டிப்பட்டி சாய் தபோவனத்தில் ஸ்ரீ சாயிபாபா குருபூஜை 105-ம் ஆண்டு விழா நடைபெற்றது.
    • காலை 7.45 முதல் 8.30 வரை ஆரத்தி, கூட்டு பிரார்த்தனையும், 10 மணி முதல் 11 மணி வரை ஸ்ரீவித்யாரம்பம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் கீரம்பூர் அருகே உள்ள தொட்டிப்பட்டி சாய் தபோவனத்தில் ஸ்ரீ சாயிபாபா குருபூஜை 105-ம் ஆண்டு விழா நடைபெற்றது. காலை 7.45 முதல் 8.30 வரை ஆரத்தி, கூட்டு பிரார்த்தனையும், 10 மணி முதல் 11 மணி வரை ஸ்ரீவித்யாரம்பம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு காலை முதல் மாலை வரை கோவில் வளாகத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை சீரடி சாய்பாபா வழிபாட்டு மன்ற நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

    • பரமத்தி வேலூர்- மோகனூர் செல்லும் சாலையில் உள்ள குப்பிச்சிபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் உள்ளது.
    • சாலை ஓரத்தில் 50 வயது மதியத்தக்க பெண் ஒருவர் வாகனம் மோதி படுகாயம் அடைந்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர்- மோகனூர் செல்லும் சாலையில் உள்ள குப்பிச்சிபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தில் உள்ள தார் சாலை ஓரத்தில் 50 வயது மதியத்தக்க பெண் ஒருவர் வாகனம் மோதி படுகாயம் அடைந்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து பரமத்தி வேலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் இந்திராணி தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று அந்த பெண்ணை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த பெண் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? எதற்காக இங்கு வந்தார்? என்பது குறித்தும், விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இந்த பகுதியின் வழியாக நாமக்கல் நகராட்சிக்கு புதியதாக அமைக்கப்பட்ட ஜேடர்பாளையம் புதிய குடிநீர் திட்ட பைப் லைன் உள்ளது.
    • கடந்த ஒரு வாரமாக இப்பகுதியில் நகராட்சி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் ரோட்டில் வெள்ளமாக ஓடுகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட 8-வது வார்டில், பெரியூர் உள்ளது. இந்த பகுதியின் வழியாக நாமக்கல் நகராட்சிக்கு புதியதாக அமைக்கப்பட்ட ஜேடர்பாளையம் புதிய குடிநீர் திட்ட பைப் லைன் உள்ளது. பெரியூரின் மத்திய பகுதியில் நகராட்சி தொடக்கப்பள்ளி, சத்துணவு கூடம், விநாயகர் கோவில், பகவதி அம்மன் கோவில் போன்றவை அமைந்துள்ள 4 ரோடு பகுதி உள்ளது. கடந்த ஒரு வாரமாக இப்பகுதியில் நகராட்சி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் ரோட்டில் வெள்ளமாக ஓடுகிறது. இதனால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளும், இருசக்கர வாகனங்களில் செல்வோரும் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.

    பெரியூர் நான்கு ரோட்டில் இருந்து கிருஷ்ணாபுரம் செல்லும் ரோட்டிலும், நத்தமேடு செல்லும் ரோட்டிலும், குடிநீர் பைப்பில் இருந்து வெளியேறும் தண்ணீர் குளம்போல் தேங்கி நிற்பதால், கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகி உள்ளது. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது.

    ஊரின் மத்தியில் ஏற்பட்டுள்ள குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்து, சீரமைக்க நகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • தெய்வமணி ( 35) . இவர் அந்த பகுதியில் தண்ணீர் இல்லாத 60அடி ஆழம் உள்ள கிணற்றில் தவறி விழுந்தார்.
    • இது பற்றி ராசிபுரம் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    ராசிபுரம்:

    ராசிபுரம் அருகே உள்ள சிங்களாந்தபுரம் மேற்கு தெருவைச் சேர்ந்தவர் தெய்வமணி ( 35) . இவர் அந்த பகுதியில் தண்ணீர் இல்லாத 60அடி ஆழம் உள்ள கிணற்றில் தவறி விழுந்தார். கிணற்றுக்குள் தவறி விழுந்த தெய்வமணி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இது பற்றி ராசிபுரம் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ராசிபுரம் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று கிணற்றுக்குள் தத்தளித்துக் கொண்டிருந்த தெய்வமணியை உயிருடன் மீட்டு சிகிச்சைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    • கதிரேசன் லைன் பகுதியில் வசிப்பவர் செந்தில்குமார் (39) தனியார் மில் தொழிலாளி.
    • நேற்று மாலை இவர் வசிக்கும் சிமெண்ட் அட்டை வீட்டில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பள்ளிபாளையம் பிரிவு சாலை, கதிரேசன் லைன் பகுதியில் வசிப்பவர் செந்தில்குமார் (39) தனியார் மில் தொழிலாளி.

    நேற்று மாலை இவர் வசிக்கும் சிமெண்ட் அட்டை வீட்டில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. வீட்டில் இருந்த இவரது மனைவி மலர்கொடி, (36) மகள் பானுமித்ரா, மகன் மனோஜ்குமார் ஆகியோர் வெளியில் தப்பி வந்தனர். பூஜை நாள் என்பதால், பானுமித்ரா வீட்டில் சுவாமி படங்களுக்கு முன் தீபம் ஏற்றியதாக கூறப்படுகிறது. இதன் மூலம் தீ பரவி தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

    இது குறித்து தகவலறிந்த குமாரபாளையம் தீயணைப்பு படையினர் நேரில் வந்து தீயை அணைத்தனர். முன்னதாக அவ்வழியே வந்த நகராட்சி கவுன்சிலர் ராஜ், தீ விபத்து ஏற்பட்டது கண்டு, அதிர்ச்சியடைந்து, அக்கம் பக்கம் உள்ளவர்களின் உதவியுடன், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

    இது குறித்து குமார பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    • போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு‌ ஏற்படுத்தும் வகையில் கடைகள் வைக்கப்பட்டு ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டிருந்தது.
    • இந்த ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றக்கோரி வேலூர் பேரூராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் பொதுமக்கள் அதிக அளவில் நடமாட்டம் உள்ள இடங்களில் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் கடைகள் வைக்கப்பட்டு ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டிருந்தது.

    இந்த ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றக்கோரி வேலூர் பேரூராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

    அதன் அடிப்படையில் பரமத்திவேலூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பேரூராட்சி செயல் அலுவலர் திருநாவுக்கரசு உத்தரவின் பேரில் துப்புரவு ஆய்வாளர் குருசாமி, துப்புரவு மேற்பார்வையாளர் ஜனார்த்தனன் ஆகியோர் முன்னிலையில் பேரூராட்சி பணியாளர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றினார்கள்.

    மேலும் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக ஆக்கிரமிப்பு செய்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேரூராட்சி நிர்வாகத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • நாமக்கல் நகராட்சியில் 39 வார்டுகள் உள்ளது. 1,40,000 மக்கள் தொகை உள்ளன. ஆயுத பூஜையை முன்னிட்டு இன்று 72 டன் குப்பைகள் அகற்றப்பட்டன.
    • கொசவம்பட்டி குப்பை கிடங்கு 2 உள்ளிட்ட 6 நுண்ணுரம் செயலாக்கம் மையத்தில் கொண்டு செல்லப்பட்டன.

    நாமக்கல்:

    நாமக்கல் நகராட்சியில் 39 வார்டுகள் உள்ளது. 1,40,000 மக்கள் தொகை உள்ளன. ஆயுத பூஜையை முன்னிட்டு இன்று 72 டன் குப்பைகள் அகற்றப்பட்டன. அகற்றப்பட்ட குப்பைகள் தினசிரி மார்க்கெட், தினசரி சந்தை, சேந்தமங்கலம் சாலை, முதலைப்பட்டி, கொசவம்பட்டி ரோஜாநகர் , கொசவம்பட்டி குப்பை கிடங்கு 2 உள்ளிட்ட 6 நுண்ணுரம் செயலாக்கம் மையத்தில் கொண்டு செல்லப்பட்டன. அகற்றப்பட்ட குப்பைகள் மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரிக்கப்பட்டு மக்கும் குப்பைகளை உரமாக்கி விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன. மக்காத குப்பைகளை மறுசுழற்சி செய்யப்பட்டு கடைகளுக்கு வழங்கப்பட்டுவருகின்றன. மக்காத குப்பைகளை இது குறித்து சிமெண்ட் தொழிற்சாலைக்கு அனுப்பப்படுகன்றன.

    நகராட்சி கமிஷனர் சென்னகேசவன் கூறியதாவது:-

    ஆயுத பூஜையை முன்னிட்டு நகராட்சி பகுதியில் 72 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன. சாலை களில் விபத்து ஏற்படுத்தும் வகையில் சாலையில் குப்பைகளை போடுவதை தவிர்க்க வேண்டும் என்றார். 

    • ஜெயராஜ் (வயது 45). இவர் அப்பகுதியில் குடும்பத்துடன் கூரை வீட்டில் வசித்து வந்தார்.
    • வீட்டில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. அதை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பொத்தனூர் கிழக்கு வண்ணாந்துறை மேட்டுத் தெருவை சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது 45). இவர் அப்பகுதியில் குடும்பத்துடன் கூரை வீட்டில் வசித்து வந்தார்.

    சம்பவத்தன்று வீட்டில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. அதை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர். இருப்பினும் தீயை அணைக்க முடியவில்லை . இதுகுறித்து ஜெயராஜ் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று கூரை வீட்டில் வேகமாக எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்து தீ அருகில் உள்ள வீடுகளுக்கு பரவாமல் தடுத்தனர்.

    இருப்பினும் கூரை வீட்டுக்குள் இருந்த துணிகள், உணவு பொருட்கள், பாத்திரங்கள், ஆவணங்கள், பீரோ, கட்டில், டி.வி. உள்ளிட்ட ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகின. 

    • ஆயுதபூைஜ, சரஸ்வதி பூைஜ, விஜயதசமி உள்ளிட்ட பண்டிகை நாமக்கல் மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
    • இன்று விஜயதசமியை யொட்டி நாமக்கல்லில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    நாமக்கல்:

    ஆயுதபூைஜ, சரஸ்வதி பூைஜ, விஜயதசமி உள்ளிட்ட பண்டிகை நாமக்கல் மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

    இன்று விஜயதசமியை யொட்டி நாமக்கல்லில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவில்களில் பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம் செய்தனர். பெண்கள் பலர் தங்கள் வீடுகளில் சாமி படங்களை வைத்து வழிபட்டனர்.

    சாலைகள் வெறிச்சோடியது

    இந்த நிலையில் தொடர் விடுமுறை காரணமாக நாமக்கல்லில் வசிக்கும் வெளியூரை சேர்ந்த பொதுமக்கள், தொழிலாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு கடந்த 20-ந்தேதி (வெள்ளிக்கிழமை) முதலே சென்றனர். இதனால் நாமக்கல்லில் உள்ள சாலைகளில் வாகன போக்குவரத்து இல்லாமல் வெளிச்சோடி காணப்பட்டன.

    எப்போதும் பரபரப்பாக காணப்பட்ட பரமத்தி சாலை, மோகனூர் சாலை, சேலம் சாலை, துறையூர் மற்றும் திருச்சி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. ஒருசில இருசக்கர வாகனங்கள் மட்டுமே சாலையில் சென்றதால் அமைதியான சூழல் நிலவியது.

    ×