என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீட்டில் திடீரென தீ"

    • ஜெயராஜ் (வயது 45). இவர் அப்பகுதியில் குடும்பத்துடன் கூரை வீட்டில் வசித்து வந்தார்.
    • வீட்டில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. அதை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பொத்தனூர் கிழக்கு வண்ணாந்துறை மேட்டுத் தெருவை சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது 45). இவர் அப்பகுதியில் குடும்பத்துடன் கூரை வீட்டில் வசித்து வந்தார்.

    சம்பவத்தன்று வீட்டில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. அதை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர். இருப்பினும் தீயை அணைக்க முடியவில்லை . இதுகுறித்து ஜெயராஜ் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று கூரை வீட்டில் வேகமாக எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்து தீ அருகில் உள்ள வீடுகளுக்கு பரவாமல் தடுத்தனர்.

    இருப்பினும் கூரை வீட்டுக்குள் இருந்த துணிகள், உணவு பொருட்கள், பாத்திரங்கள், ஆவணங்கள், பீரோ, கட்டில், டி.வி. உள்ளிட்ட ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகின. 

    ×