என் மலர்
உள்ளூர் செய்திகள்

குமாரபாளையத்தில் மில் தொழிலாளி வீட்டில் தீ விபத்து
- கதிரேசன் லைன் பகுதியில் வசிப்பவர் செந்தில்குமார் (39) தனியார் மில் தொழிலாளி.
- நேற்று மாலை இவர் வசிக்கும் சிமெண்ட் அட்டை வீட்டில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.
குமாரபாளையம்:
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பள்ளிபாளையம் பிரிவு சாலை, கதிரேசன் லைன் பகுதியில் வசிப்பவர் செந்தில்குமார் (39) தனியார் மில் தொழிலாளி.
நேற்று மாலை இவர் வசிக்கும் சிமெண்ட் அட்டை வீட்டில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. வீட்டில் இருந்த இவரது மனைவி மலர்கொடி, (36) மகள் பானுமித்ரா, மகன் மனோஜ்குமார் ஆகியோர் வெளியில் தப்பி வந்தனர். பூஜை நாள் என்பதால், பானுமித்ரா வீட்டில் சுவாமி படங்களுக்கு முன் தீபம் ஏற்றியதாக கூறப்படுகிறது. இதன் மூலம் தீ பரவி தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
இது குறித்து தகவலறிந்த குமாரபாளையம் தீயணைப்பு படையினர் நேரில் வந்து தீயை அணைத்தனர். முன்னதாக அவ்வழியே வந்த நகராட்சி கவுன்சிலர் ராஜ், தீ விபத்து ஏற்பட்டது கண்டு, அதிர்ச்சியடைந்து, அக்கம் பக்கம் உள்ளவர்களின் உதவியுடன், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
இது குறித்து குமார பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.






