பரமத்திவேலூர் எல்லையம்மன் கோவிலில் பூச்சொறிதல் விழா

பரமத்தி வேலூரில் 400 ஆண்டுகள் பழமையான எல்லையம்மன் கோவிலில் நவராத்திரி விழாவின் 10-வது நாளை முன்னிட்டு பூச்சொறிதல் விழா நடைபெற்றது. இதையொட்டி உற்சவர் அம்மனுக்கு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
பரமத்திவேலூர் எல்லையம்மன், கோப்பணம் பாளையம் அங்காள பரமேஸ்வரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் இருந்தபோது எடுத்த படம்.
பரமத்திவேலூர் எல்லையம்மன், கோப்பணம் பாளையம் அங்காள பரமேஸ்வரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் இருந்தபோது எடுத்த படம்.
Published on

பரமத்தி வேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் 400 ஆண்டுகள் பழமையான எல்லையம்மன் கோவிலில் நவராத்திரி விழாவின் 10-வது நாளை முன்னிட்டு பூச்சொறிதல் விழா நடைபெற்றது.

இதையொட்டி உற்சவர் அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு அர்த்தநாரீஸ்வரர் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப் பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பரமத்திவேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை வேலூர் எல்லையம்மன் கோவில் நவராத்திரி விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

அதேபோல் கோப்பணம் பாளையம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவி லில் நவராத்திரி 10-ம் நாளை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com