என் மலர்
உள்ளூர் செய்திகள்

தொடர் விடுமுறை காரணமாக இன்று நாமக்கல் சாலைகளில் வாகன போக்குவரத்து இல்லாமல் வெறிச்சோடியது.
தொடர் விடுமுறையால் நாமக்கல் நகரம் வெறிச்சோடியது
- ஆயுதபூைஜ, சரஸ்வதி பூைஜ, விஜயதசமி உள்ளிட்ட பண்டிகை நாமக்கல் மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
- இன்று விஜயதசமியை யொட்டி நாமக்கல்லில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
நாமக்கல்:
ஆயுதபூைஜ, சரஸ்வதி பூைஜ, விஜயதசமி உள்ளிட்ட பண்டிகை நாமக்கல் மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இன்று விஜயதசமியை யொட்டி நாமக்கல்லில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவில்களில் பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம் செய்தனர். பெண்கள் பலர் தங்கள் வீடுகளில் சாமி படங்களை வைத்து வழிபட்டனர்.
சாலைகள் வெறிச்சோடியது
இந்த நிலையில் தொடர் விடுமுறை காரணமாக நாமக்கல்லில் வசிக்கும் வெளியூரை சேர்ந்த பொதுமக்கள், தொழிலாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு கடந்த 20-ந்தேதி (வெள்ளிக்கிழமை) முதலே சென்றனர். இதனால் நாமக்கல்லில் உள்ள சாலைகளில் வாகன போக்குவரத்து இல்லாமல் வெளிச்சோடி காணப்பட்டன.
எப்போதும் பரபரப்பாக காணப்பட்ட பரமத்தி சாலை, மோகனூர் சாலை, சேலம் சாலை, துறையூர் மற்றும் திருச்சி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. ஒருசில இருசக்கர வாகனங்கள் மட்டுமே சாலையில் சென்றதால் அமைதியான சூழல் நிலவியது.






