என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேசிய வேளாண்மை சந்தையில்  வெல்லத்தை ஏலம் விட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
    X

    தேசிய வேளாண்மை சந்தையில் வெல்லத்தை ஏலம் விட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

    • பரமத்திவேலூர் பல்வேறு பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்து வருகின்றனர்.
    • கரும்பை வெட்டிச் செல்வதற்காக மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு விவசாயி கள் பதிவு செய்துள்ளனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை, அண்ணா நகர், சேளூர், பிலிக்கல்பாளையம், கோப்பணம்பாளையம், குன்னத்தூர், ஆனங்கூர், வடகரை யாத்தூர், பெரிய சோளிபாளையம், கபிலக்கு றிச்சி, இருக்கூர், கொத்த மங்கலம், தி.கவுண்டம் பாளையம், சிறு நல்லிகோவில், திடுமல், குறும்பலமகாதேவி, ஜமீன் இளம் பள்ளி, சோழசிராமணி, ஜேடர்பாளையம், அய்யம்பா ளையம், கபிலர்மலை, நன்செய்இடையாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்து வருகின்றனர்.

    வெல்லம் தயாரிக்கும் ஆலை

    கரும்பை வெட்டிச் செல்வதற்காக மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு விவசாயி கள் பதிவு செய்துள்ளனர். பதிவு செய்யாத விவசாயிகள் வெல்லம் தயாரிக்கும் ஆலைகளுக்கு கரும்பை விற்பனை செய்கின்றனர். இந்த ஆலைகளில் கரும்பிலிருந்து அச்சு வெல்லம், உருண்டை வெல்லம் மற்றும் நாட்டு சர்க்கரை தயார் செய்கின்றனர். உற்பத்தி செய்யப்படும் வெல்லத்தை 30 கிலோ கொண்ட சிப்பங்களாக கட்டி பிலிக்கல்பாளையத்தில் உள்ள வெல்லம் ஏல மார்க்கெட்டில் சனி மற்றும் புதன்கிழமைகளில் விற்பனை செய்கின்றனர்.

    பிலிக்கல்பாளையத்தில் செயல்பட்டு வரும் வெல்லம் ஏல மார்க்கெட்டிற்குள் 13 ஏல மண்டிகள் உள்ளது. இங்கே குறிப்பிட்ட சில நபர்களே வெல்லம் விலையை நிர்ணயம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் வெல்லம் தயாரிப்பில் ஈடுபடும் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைப்பதில்லை என கூறப்படுகிறது.

    தேசிய வேளாண்மை சந்தை

    எனவே தேசிய வேளாண்மை சந்தையில் தேங்காய் பருப்பு, தேங்காய் ஏலம் நடத்துவது போல் வெல்லத்தையும் ஏலம் விட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தனியார் ஏல மண்டிகள் சிண்டிகேட் அமைத்து விலை நிர்ணயம் செய்வதை கட்டுப்படுத்த வேண்டும்.

    அதேபோல் வெல்லம் தயாரிக்கும் ஆலை அதிபர்கள் சிண்டிகேட் அமைத்துக் கொண்டு கரும்பு விலைகளை அவர்களே நிர்ணயம் செய்து ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் வாங்குவதில்லை. இதனால் விவசாயிகள் பாதிப்பு அடைந்து வருகின்றனர்.

    இது குறித்து கரும்பு ஆலை வெல்லம் தயாரிப்பில் ஈடுபடும் விவசாயிகள் கூறியதாவது:-

    ஏல மண்டியில் வெல்லம் ஒரு கிலோ 40 ரூபாய்க்கு விலை போகின்றது. ஆனால் வெளிமார்க்கெட்டில் ஒரு கிலோ 60 முதல் 80 ரூபாய் வரை விற்பனை ஆகிறது.

    விவசாயிகளை விட கமிஷன் ஏஜென்ட்களுக்கும், புரோக்கர்களுக்கும் அதிக அளவில் லாபம் ஈட்டுகின்றனர். வெல்லம் தயாரிப்பில் ஈடுபடும் விவசாயிகளுக்கு சொற்ப லாபமே கிடைக்கிறது.

    கலப்பட வெல்லம்

    ஒரு சில கரும்பு ஆலை உரிமையாளர்கள் வெல்லம் தயாரிக்கும் போது அரசால் தடை செய்யப்பட்ட மலிவான சர்க்கரையை 1 கிலோ பத்து ரூபாய்க்கு வாங்கி வெல்லப்பாகில் கலந்து கலப்பட வெல்லத்தை 40 ரூபாய்க்கு விற்கின்றனர். அதேபோல் வெல்லம் தயாரிக்கும் பாகில் பல்வேறு வகையான ரசாயன கலவைகள் கலக்கப்படுகின்றன.

    கலப்பட வெல்லத்தை சாப்பிடுபவர்களுக்கு வயிற்று உபாதைகள் ஏற்படும். வெல்லம் தயாரிப்பில் கலப்படத்தை தவிர்க்கவும், விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கவும் தமிழக அரசு தேசிய வேளாண்மை சந்தையில் வெல்லம் ஏலம் நடத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×