search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாய்பாபா"

    • சீரடி சாய்பாபா கோவில் முன்பாக பிச்சை எடுத்து வருகிறார்.
    • ஆன்மீகப் பணிகளுக்காக வழங்கி வருவதற்காக மகிழ்ச்சி அடைகிறேன்.

    திருப்பதி:

    ஆந்திரா மாநிலம், முத்தியாலம் பாடு மாவட்டம், விஜயவாடாவை சேர்ந்தவர் யாதி ரெட்டி.

    இவர் விஜயவாடாவில் உள்ள சீரடி சாய்பாபா கோவில் முன்பாக பிச்சை எடுத்து வருகிறார். பிச்சை எடுத்த ரூ.1 லட்சத்தை சாய்பாபா கோவில் வளர்ச்சிக்கு நிதியாக கோவில் கவுரவ தலைவர் கவுதம் ரெட்டியிடம் வழங்கினார்.

    இது குறித்து கவுதம் ரெட்டி கூறுகையில், யாதி ரெட்டி கோவிலுக்கு நன்கொடை வழங்குவது இது முதல் முறை இல்லை. ஏற்கனவே பல தவணைகளில் ரூ.8.54 நன்கொடையாக வழங்கி உள்ளார் தற்போது வழங்கியுள்ள ரூ.1 லட்சத்துடன் ரூ.9.54 லட்சம் வழங்கி உள்ளார் என்றார்.

    யாதி ரெட்டி கூறுகையில் கோவில் முன்பாக பிச்சை எடுக்கும் ஒவ்வொரு ரூபாயும் ஆன்மீகப் பணிகளுக்காக வழங்கி வருவதற்காக மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.

    • வள்ளலார் பேரவை மாநில தலைவர் சுவாமி பத்மேந்திரா பங்கேற்பு
    • அன்பாலயத்தின் சார்பாக பொன்னாடை அணிவித்து, நினைவு பரிசு வழங்கப்பட்டது.

    நாகர்கோவில் :

    இரணியல் சீரடி ஸ்ரீ சாய்பாபா அன்பாலயத்தில், மனித வாழ்க்கையில் யோகா பயிற்சியின் சிறப்பை விளக்கும் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    சீரடி ஸ்ரீ சாய்பாபா அறக்கட்டளை சேர்மன் டாக்டர் கோலப்பன் தலைமை தாங்கினார். வள்ளலார் பேரவை மாநில தலைவர் சுவாமி பத்மேந்திரா அருளாசி வழங்கினார். கன்னியாகுமரி மாவட்ட கூடைப்பந்தாட்ட கழக செயலாளர் டாக்டர் மகேஷ், அன்பாலயத்தின் முன்னாள் தலைவர் கண்ணன் மற்றும் தலைவர் கஸ்தூரிபாய் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சென்னை அண்ணாநகர் கோமதி ஆண்டியப்பன் யோகா சென்டர் நிறுவனர் டாக்டர் கோமதி யோகா பயிற்சியின் உடல் ஆரோக்கியத்தின் சிறப்புகளை விளக்கி பேசி, பயிற்சியளித்தார். அவருக்கு அன்பாலயத்தின் சார்பாக பொன்னாடை அணிவித்து, நினைவு பரிசு வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சீரடி ஸ்ரீ சாய்பாபா அன்பாலயம் அறக்கட்டளையின் நிறுவன உறுப்பினர்கள், நிர்வாக உறுப்பினர்கள், சாய் ஒயிட்ஷைன் கோல்டேஜ் ஏஜ் ஹோம் நிர்வாகிகள் மற்றும் சாய் பக்தர்கள் செய்திருந்தனர்.

    • கீரம்பூர் அருகே உள்ள தொட்டிப்பட்டி சாய் தபோவனத்தில் ஸ்ரீ சாயிபாபா குருபூஜை 105-ம் ஆண்டு விழா நடைபெற்றது.
    • காலை 7.45 முதல் 8.30 வரை ஆரத்தி, கூட்டு பிரார்த்தனையும், 10 மணி முதல் 11 மணி வரை ஸ்ரீவித்யாரம்பம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் கீரம்பூர் அருகே உள்ள தொட்டிப்பட்டி சாய் தபோவனத்தில் ஸ்ரீ சாயிபாபா குருபூஜை 105-ம் ஆண்டு விழா நடைபெற்றது. காலை 7.45 முதல் 8.30 வரை ஆரத்தி, கூட்டு பிரார்த்தனையும், 10 மணி முதல் 11 மணி வரை ஸ்ரீவித்யாரம்பம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு காலை முதல் மாலை வரை கோவில் வளாகத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை சீரடி சாய்பாபா வழிபாட்டு மன்ற நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

    • மாலையில் 6:00 மணிக்கு ஸ்ரீ சத்யதர்ம சாய்பாபா ரத ஊர்வலம் புறப்படுதல் நிகழ்ச்சி நடக்கிறது
    • கன்னியாகுமரி மாவட்ட சீரடி சாய்பாபா அறக்கட்டளை நிர்வாகிகள். பக்தர்கள் செய்துள்ளனர்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் வடிவீஸ்வரம் சாய்பாபா நகரில் உள்ள ஸ்ரீ சத்தியதர்ம சாய்பாபா கோவில் குரு பூர்ணிமா விழா இன்றும் நாளையும். நடைபெறுகிறது. இன்று காலை கணபதி ஹோமம் அதைத்தொடர்ந்து ஆரத்தி எடுக்கப்பட்டு அன்னதான பிரசாதம் வழங்கப்பட்டதுடன் தொடர்ந்து மாலையில் 6:00 மணிக்கு ஸ்ரீ சத்யதர்ம சாய்பாபா ரத ஊர்வலம் புறப்படுதல் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 8 மணிக்கு இரவு ஆரத்தி நடத்தப்பட்டு அருட்பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.

    நாளை திங்கட்கிழமை காலை 7 மணிக்கு மங்கள இசை உடன் நிகழ்ச்சி தொடங்குகிறது. காலை 9 மணிக்கு சாய்சதீசரிதம் நடக்கிறது. தொடர்ந்து ஸ்ரீ சத்ய தர்ம சாய்பாபாவிற்கு அபிஷேகமும் அலங்காரத்துடன் கூடிய ஆரத்தியும் நடத்தப்பட்டு அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலை 5 மணிக்கு சொற்பொழிவு இரவு 7 மணிக்கு பக்தர்கள் மூலம் பாபாவிற்கு புஷ்பா அபிஷேகமும் இரவு 8 மணிக்கு ஆரத்தி நடத்தப்பட்டு அருட்பிரசாதமும் வழங்கப்படுகிறது.

    விழா ஏற்பாடுகளை கன்னியாகுமரி மாவட்ட சீரடி சாய்பாபா அறக்கட்டளை நிர்வாகிகள். பக்தர்கள் செய்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஷீரடி சாயிபாபாவை நினைத்துக் கொள்ளுங்கள்.
    • மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள்.

    மகான் என்பவர் குருவின் அம்சம். குரு என்பவர் ஞானி. ஞானி என்பவர், நம்மைக் கடைத்தேற்றி. அருள் வழங்குபவர். ஷீரடி சாயிபாபா, ஒரு ஞானியாக, குருவாக, ஞான குருவாக, மகானாக... பேசும் தெய்வமாக இருந்து இன்றைக்கும் நமக்கு அருளிக்கொண்டிருக்கிறார்.

    என்னுடைய அன்புக்கு உரிய குழந்தைகளே. இந்த வாழ்க்கை அற்பமானது என்று எண்ணிவிடாதீர்கள். மிக மிக அரிதானது இந்த வாழ்க்கை. இந்த வாழ்க்கைப் பயணத்தை நாம் அர்த்தமுள்ளதாக்கிக் கொள்ளவேண்டும். அந்தப் பயணத்துக்கு நீங்கள் தேர்ந்தெடுக்கும் பாதையானது, உண்மையில் நீங்கள் தேர்ந்தெடுத்தது அல்ல.

    உங்கள் வாழ்க்கையும் உங்களுக்கான பாதையும் அந்த வாழ்க்கைப் பயணத்துக்கான செயல்களும் நீங்கள் தேர்ந்தெடுத்தது அல்ல. நீங்கள் செயலாற்றுவது அல்ல. இவை அனைத்துமே ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டது.

    அப்படி தீர்மானிக்கப்பட்ட வழியில்தான் நீங்கள் நடந்துகொண்டிருக்கிறீர்கள். உங்களின் வாழ்க்கை தீர்மானிக்கப்பட்டது என்பதைப் புரிந்து உணர்ந்துகொண்டால், உங்கள் வாழ்வின் நோக்கம் என்னவாக இருக்கிறது என்பதில் உங்களுக்குத் தெளிவு கிடைத்துவிடும்.

    இதில் உங்களுக்குத் தெளிவு வந்துவிட்டால், உங்களுடைய வாழ்க்கை உன்னதமானது என்பதையும் புரிந்துகொள்வீர்கள். ஆனால் பலரும் புரிந்து கொள்வதே இல்லை. சக்தியின் உன்னதங்களைத் தெரிந்துகொள்வதே இல்லை.

    ஏற்கெனவே திட்டமிடப்பட்ட உங்களின் வாழ்க்கையில் மேடு பள்ளங்கள் ஏற்படலாம். நிறை குறைகள் ஏற்படலாம். கஷ்ட நஷ்டங்கள் இருக்கலாம். இன்னும் சொல்லப் போனால், 'இந்த உலகம் யுத்தகளம் போல் இருக்கிறது' என்று நீங்கள் நினைக்கலாம் .'நம் வாழ்க்கையே யுத்தமாகியிருக்கிறது' என்று வேதனைப்படலாம்.

    கவலையே படாதீர்கள். உங்களையும் உங்களின் வாழ்க்கையையும் என்னிடம் ஒப்படைத்துவிடுங்கள். உங்கள் வாழ்க்கைப் பயணத்தில் ஏற்படுகிற எல்லாக் கவலைகளையும் நான் எடுத்துக் கொள்கிறேன். உங்கள் பயணத்தை நான் இலகுவாக்கித் தருகிறேன்'' என்கிறார் சாயிபாபா.

    ''உன்னுடைய தகப்பனாக நானிருக்கிறேன். எதற்கும் துக்கப்படாதே. எதைக் கண்டும் பயப்படாதே. என் திருநாமத்தை யாரெல்லாம் சொல்கிறீர்களோ... அங்கே அவர்களுக்கு அருகில் நான் வந்துவிடுவேன்'' என்பது சாயிபாபா வாக்கு.

    உங்கள் அனைவரையும் ஒரு அம்மாவாக, அப்பாவாக இருந்து காப்பேன்.என் இதயத்தைக் கருவறையாக்கி அதில் உங்களை வைத்து அரவணைப்பேன்'' எனும் சாயிபாபாவின் சத்திய வார்த்தையை எடுத்துக்கொள்ளுங்கள். 'சாயிராம்' என்று அவரின் திருநாமத்தைச் சொல்லிக்கொண்டே இருங்கள்.

    பகவான் சாயிபாபா உங்களைக் காப்பார்!

    • சாய்பாபாவை குருவாக நினைப்பவர்கள் ஏராளம்.
    • சாய்பாபா படத்திற்கு மஞ்சள் நிற மலர்கள் அணிவித்தால் மிகவும் சிறப்பு.

    வாரந்தோறும் வியாழக்கிழமையன்று சாய்பாபாவுக்கு பெரும்பாலானோர் விரதமிருந்து வருகின்றனர். அவ்வாறு விரதம் இருப்பதையும் சாய்பாபா பக்தர்கள் பெரிதும் விரும்புகின்றனர்.

    அதற்கெல்லாம் காரணம்... பல அதிசயங்கள் அவர்களுடைய வாழ்க்கையில் நடந்து இருப்பது மட்டுமே. சாய்பாபாவை குருவாக நினைப்பவர்கள் ஏராளம். அதுவும் வியாழக்கிழமை குருவுக்கு உகந்த நாள் ஏன்பதால் வியாழக்கிழமை அன்று விரதம் இருக்கின்றனர்.

    அவ்வாறு விரதம் இருக்கும்போது 9 வாரங்கள் வியாழக்கிழமையன்று சாய்பாபாவின் நாமத்தை மனதிற்குள் எண்ணி தாங்கள் நினைக்கும் காரியத்தை நினைவுகூர்ந்து தூய எண்ணங்களுடன் வழிபட்டால் கட்டாயம் நிறைவேறும் என்பது ஐதீகம். அவ்வாறு வழிபாட்டில் ஈடுபடும் போது காலையோ அல்லது மாலையோ சாய்பாபாவின் படத்திற்கு முன் அமர்ந்து ஓர் மஞ்சள் துணியை சுத்தமான ஒரு பலகையில் விரித்து வைத்து, அதன் மீது சாய்பாபா படத்தை வைத்து தூய நீரில் சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் மற்றும் திலகமிட வேண்டும்.

    பாபாவிற்கு பிடித்த மஞ்சள் நிற மலர்கள் அணிவித்தால் மிகவும் சிறப்பு. பின்னர் ஊதுபத்தி ஏற்றி பாபாவின் விரத கதையையும் படிக்கலாம். பிறகு பூஜை செய்து நைவேத்தியம் அதாவது கற்கண்டு இனிப்பு பழங்கள் என் சாய்பாபாவிற்கு பிடித்த பொருட்களை வைத்து வழிபட்டால் எண்ணிய காரியம் விரைவில் நிறைவேறும் என்பது ஐதீகம். அதனால்தான் வாரந்தோறும் வியாழக்கிழமை அன்று பாபாவின் பக்தர்கள் தொடர்ந்து வழிபாட்டில் ஈடுபடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×