என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருப்பூர் சாய்பாபா கோவிலில் 10-ம் ஆண்டு விழா
- 08 சங்காபிேஷகம், பாலாபிேஷகம், சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தன.
- விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
திருப்பூர் :
திருப்பூர் யுனிவர்சல் தியேட்டர் சாலையில் உள்ள சீரடி சாய்பாபா கோவிலில் 10ம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி அன்று காலை 9மணிக்கு வேள்வி பூஜைகள் நடந்தது. தொடர்ந்து 108 சங்காபிேஷகம், பாலாபிேஷகம், சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தன.
சீரடி சாய்பாபா சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மதியம் 12 மணிக்கு சிறப்பு ஆரத்தி பூஜையும், தொடர்ந்து சிறப்பு பஜனையும் நடந்தது.அவிநாசி வாசீகர் மடாலயம் காமாட்சிதாச சுவாமி தலைமையிலான குழுவினர் ஆண்டு விழா பூஜைகளை நடத்தினர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை திருப்பூர் ஸ்ரீசீரடி சாய் பீடம் அறக்கட்டளை செய்திருந்தது.
Next Story






