பரமத்தி வேலூர் சாய்பாபா கோவிலில் சிறப்பு வழிபாடு

பரமத்தி வேலூர் தாலுகா வீரணம்பா ளையத்தில் உள்ள ஸ்ரீ சீரடி முக்கண் சாய் பாபாவிற்கு நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
சாய்பாபா சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தபோது எடுத்த படம்.
சாய்பாபா சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தபோது எடுத்த படம்.
Published on

பரமத்திவேலுார்:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா வீரணம்பா ளையத்தில் உள்ள ஸ்ரீ சீரடி முக்கண் சாய் பாபாவிற்கு நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனை முன்னிட்டு சீரடி முக்கண் சாய்பா பாவுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், தேன் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ முக்கண் சாய்பாபா பக்தர்க ளுக்கு காட்சி அளித்தார். இதில் நாமக்கல், பரமத்தி வேலூர், பொத்தனூர், பாண்டமங்கலம், நன்செய்

இடையாறு, ஜேடர்பா ளையம், வெங்கரை, மோகனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சாய்பாபா பக்தர்கள், அதிகாலை முதலே கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com