search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குமாரபாளையம்"

    • நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் போலீசார் சார்பில் ராகிங்கிற்கு எதிரான விழிப்புணர்வு முகாம் நடந்தது
    • சக கல்லூரி மாணவர்களால் ராகிங் செய்யப்பட்டால் தைரியமாக கல்லூரி நிர்வாகத்திடம் தெரியப்படுத்த வேண்டும்

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் போலீசார் சார்பில் ராகிங்கிற்கு எதிரான விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதில் இன்ஸ்பெக்டர் தவமணி பங்கேற்று பேசுகையில், ஒரு துன்பகரமான இன்பத்தைப் பெறுவதற்கான நோக்கத்துடன் ஒரு மாணவரின் அதிகாரம் அல்லது மேன்மையைக் காட்டுதல்தான் ராகிங். நாட்டிலுள்ள அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் அனைத்து மாணவர்களின் உடல் மற்றும் உளவியல் ரீதியிலான ஆரோக்கியமான வளர்ச்சியை ஏற்படுத்த பல்கலைக்கழக மானியக்குழு, கவுன்சில்களுடன் கலந்தாலோசித்து இந்த ராகிங் ஒழுங்குமுறையை கொண்டு வருகிறது. மேலும் சக கல்லூரி மாணவர்களால் ராகிங் செய்யப்பட்டால் தைரியமாக கல்லூரி நிர்வாகத்திடம் தெரியப்படுத்த வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • குமாரபாளையம் , சுற்றுப்புற பகுதியில் கடந்த 2 நாட்களாக இரவில் மழை பெய்து வருகிறது. நேற்றுமுன்தினம் காலை முதலே மேக மூட்டமாகவும், குளிர்காற்றும் வீசி வந்தது.
    • இரவில் மழை கொட்டியது. குமாரபாளையம் பஸ் நிலைய பகுதியில் பெய்த மழையால் கழிவுநீர் குழாய் அடைப்பு ஏற்பட்டு குழாய் வழியாக செல்ல வேண்டிய கழிவுநீர் பஸ் நிலைய கடைகளின் வழியாக ஓடியது

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் கடந்த 2 நாட்களாக இரவில் மழை பெய்து வருகிறது. நேற்றுமுன்தினம் காலை முதலே மேக மூட்டமாகவும், குளிர்காற்றும் வீசி வந்தது. பின்னர் இரவு தொடங்கிய கனமழை 3 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. இதனால் சாலையோர வியாபாரிகள், இரவு பணி முடிந்து வீட்டிற்கு செல்வோர் பெரிதும் பாதிப்படைந்தனர். சாலைகளில் மழை வெள்ளம் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.

    தொடர்ந்து 3-வது நாளாக நேற்றும் இரவில் மழை கொட்டியது. குமாரபாளையம் பஸ் நிலைய பகுதியில் பெய்த மழையால் கழிவுநீர் குழாய் அடைப்பு ஏற்பட்டு குழாய் வழியாக செல்ல வேண்டிய கழிவுநீர் பஸ் நிலைய கடைகளின் வழியாக ஓடியது. இதனால் பயணிகள் அவதியடைந்தனர். இந்த நிலையில் குமாரபாளையம் பகுதியில் மழை நீடிப்பதால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

    குமாரபாளையம் அருகே வீரமாத்தியம்மன் கோவில் திருவிழா நடந்தது.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் அருகே வீரப்பம்பாளையம், வேலாங்காடு பகுதியில் உள்ள வீரமாத்தியம்மன் கோவில் திருவிழா நடந்தது. இதனையொட்டி காவிரி ஆற்றில் மேளதாளங்கள் முழங்க தீர்தக்குடங்கள் எடுத்து வரப்பட்டன.

    கோவில் வளாகத்தில் பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற பொங்கல் வைத்து, சாமிக்கு படையலிட்டு வணங்கினர். சாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடைபெற்றன. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    ×