search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னை நகரின் வளர்ச்சி திட்டத்துக்கு பொதுமக்களிடம் கருத்து கேட்பு- அமைச்சர் சேகர்பாபு கையேடுகளை வழங்கினார்
    X

    சென்னை நகரின் வளர்ச்சி திட்டத்துக்கு பொதுமக்களிடம் கருத்து கேட்பு- அமைச்சர் சேகர்பாபு கையேடுகளை வழங்கினார்

    • சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம், 1189 சதுர கி.மீ பரப்பிலான சென்னைப் பெருநகரப் பகுதிக்கு மூன்றாம் பெருந்திட்டத்தினை (2026-2046) தயாரிக்க உள்ளது.
    • தனியார் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரிடம் கலந்தாலோசனை கூட்டங்கள் நடத்தி, கருத்துகள் மற்றும் விருப்பங்கள் பெறப்பட்டது.

    சென்னை:

    சென்னை பெருநகரின் முதல் பெருந்திட்டம் 1976-ம் ஆண்டும், இரண்டாம் பெருந்திட்டம் 2008-ம் ஆண்டும் தயாரிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம், 1189 சதுர கி.மீ பரப்பிலான சென்னைப் பெருநகரப் பகுதிக்கு மூன்றாம் பெருந்திட்டத்தினை (2026-2046) தயாரிக்க உள்ளது.

    இத்திட்டம் 2026-ம் ஆண்டில் இருந்து செயல்பாட்டிற்கு வர இருக்கிறது. மூன்றாவது பெருந்திட்ட தொலைநோக்கு ஆவணம் தயாரிக்க கலந்தாலோசகர் நியமிக்கப்பட்டு, சென்னை பெருநகரில் 29 மண்டலங்களில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், தனியார் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரிடம் கலந்தாலோசனை கூட்டங்கள் நடத்தி, அவர்களின் கருத்துகள் மற்றும் விருப்பங்கள் பெறப்பட்டது.

    அதன் தொடர்ச்சியாக பெருவாரியான பொதுமக்கள் தங்களது கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கும் விதமாக, சென்னை மெரினா கடற்கரை, உழைப்பாளர் சிலை அருகில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு சென்னை பெருநகரின் மூன்றாம் பெருந்திட்ட தொலைநோக்கு ஆவண விழிப்புணர்வு கையேட்டினை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி, இணைய வழி வாயிலாக பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க வலியுறுத்தினார்.

    இந்த தொலைநோக்கு ஆவணத் தயாரிப்பிற்கு கருத்து தெரிவிக்க விரும்புவோர், ஆங்கில படிவத்தினை பூர்த்தி செய்ய: https://forms.gle/1SaapSDXXyyAmbBK7 அல்லது தமிழ் படிவத்தினை பூர்த்தி செய்ய: https://forms.gle/4cQVYKFekpia4upr9 அல்லது www.cmavision.in என்ற இணையதள பக்கத்தில் கருத்துகளை தெரிவிக்கலாம்.

    Next Story
    ×