search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    600 ஜோடிகளுக்கு கோவில்கள் சார்பாக திருமணம்- அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு
    X

    600 ஜோடிகளுக்கு கோவில்கள் சார்பாக திருமணம்- அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு

    • பொருளாதாரத்தில் பின்தங்கிய இணைகளுக்கு கோவில்கள் சார்பாக 4 கிராம் பொன் தாலி உட்பட ரூ.50 ஆயிரம் மதிப்பில் சீர் வரிசைகள் வழங்கி, திருமண விழா நடத்தப்பட்டு வருகிறது.
    • கடந்த ஆண்டு 500 இணைகளுக்கு கோவில் சார்பில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

    சென்னை:

    சட்டசபையில் இந்து சமய அறநிலையத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்திற்கு பிறகு அமைச்சர் சேகர்பாபு புதிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசியதாவது:-

    பொருளாதாரத்தில் பின்தங்கிய இணைகளுக்கு கோவில்கள் சார்பாக 4 கிராம் பொன் தாலி உட்பட ரூ.50 ஆயிரம் மதிப்பில் சீர் வரிசைகள் வழங்கி, திருமண விழா நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு 500 இணைகளுக்கு கோவில் சார்பில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

    இவ்வாண்டு கூடுதலாக மேலும் 100 இணைகளை சேர்த்து ஒரு மண்டலத்திற்கு 30 இணைகள் வீதம் 600 இணைகளுக்கு கோவில்கள் சார்பாக திருமண விழா நடத்தி வைக்கப்படும்.

    கோவில்களில் திருமணங்களில் மணமக்களில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருப்பின் அவர்களுக்கு கட்டணமில்லா திருமணமும், புத்தாடையும் அறிவிக்கப்பட்டு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. இவ்வாண்டு முதல் கோவில்களில் நடைபெறும் திருமணங்களில் மணமக்களில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருப்பின், அத்திருமணத்திற்கு 4 கிராம் பொன் தாலி கோவில் சார்பில் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×