search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கண்வலிக்கிழங்கு விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் ஆதார விலை கிடைக்க அரசு நடவடிக்கை அமைச்சர் தகவல்
    X

    அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

    கண்வலிக்கிழங்கு விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் ஆதார விலை கிடைக்க அரசு நடவடிக்கை அமைச்சர் தகவல்

    • விவசாய பொருட்களுக்கு ஆதார விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
    • கண்வலிக்கிழங்கு ஆதார விலை

    ஒட்டன்சத்திரம்:

    மருத்துவக்குணம் கொண்ட பயிர்களை தமிழக விவசாயிகள் பாரம்பரிய மாகவே சாகுபடி செய்து வருகின்றனர். அதில் குளோரி லில்லி மிகவும் முக்கியமான மருத்துவப் பயிராகும். இதனை செங்காந்தள் மலர் என்றும், கண்வலிக்கிழங்கு என்றும் அழைப்பார்கள். செங்காந்தள் மலரானது நமது மாநில மலராகும்.

    தமிழ்நாட்டில் கண்வலி க்கிழங்கு சுமார் 5,100 எக்டரில் திண்டுக்கல், திருப்பூர், கரூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டு ஆண்டுதோறும் 3985 டன் கண்வலிக்கிழங்கு விதைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

    தமிழகத்தில் திண்டுக்கல், திருப்பூர், கரூர், அரியலூர், பெரம்பலூர், சேலம், திருச்சி மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் உற்பத்தி செய்யப்படும் கண்வலிக்கிழங்கு விதைகள் வடமாநிலங்களிலுள்ள பல்வேறு தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த இடைத்தரகர்களால் விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்படுகிறது.

    இத்தகைய தனியார் நிறுவனங்கள் கொள்முதல் செய்யும் கண்வலிக்கிழங்கு விதைகளுக்கு உரிய விலையை விவசாயிகளுக்கு தொடர்ந்து வழங்குவ தில்லை என்றும், இதனால் கண்வலிக்கிழங்கு சாகுபடி செய்யும் விவசாயிகள் மிகவும் பாதிப்புக்குள்ளாகி ன்றனர். இதனால் தமிழ்நாட்டைச் சேர்ந்த கண்வலிக்கிழங்கு விதை களுக்கு சந்தை நிலவரப்படி உரிய விலையினை விவசாயிகளுக்கு வழங்க வேண்டுமென்று மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் பல ஆண்டுகளாக இவ்விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

    இக்கண்வலிக்கிழங்கு விதைகளுக்கும் குறைந்த பட்ச ஆதார விலையினை நிர்ணயிப்பதற்கான சாத்தி யக்கூறுகளை ஆராயுமாறு மத்திய அரசின் வேளாண் செலவு மற்றும் விலை ஆணையத்திற்கு உத்தர விடுமாறு தமிழக அரசு கோரியுள்ளது.

    நெல், உளுந்து, துவரை போன்ற பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிப்பது போல், தமிழக அரசின் கோரிக்கையினை ஏற்று கண்வலிக்கிழங்கு விதைகளுக்கும் மத்திய அரசு குறைந்தபட்ச ஆதார விலையினை விரைவில் நிர்ணயிக்கும் பட்சத்தில் கண்வலிக்கிழங்கு விதை களை கொள்முதல் செய்யும் வியாபாரிகளையும், தமிழக விவசாயிகளையும் ஒருங்கி ணைத்து அரசின் மேற்பா ர்வையில் தமிழகத்தில் கண்வலிக்கிழங்கு சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு லாபகரமான விலை கிடைக்க அனைத்து நட வடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ளும் என்று வேளாண் உளவு த்துறை அமைச்சர் பன்னீ ர்செல்வம் தெரிவித்தார்.

    Next Story
    ×