என் மலர்tooltip icon

    மதுரை

    • மீனாட்சி அம்மன் கோவிலில் மகா சிவராத்திரி வழிபாடு வருகிற 18-ந்தேதி நடக்கிறது.
    • அன்று இரவு முதல் மறுநாள் காலை வரை நடை திறந்திருக்கும்.

    மதுரை

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வருகிற 18-ந்தேதி மகா சிவராத்திரி விழா சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. அன்று அம்மன்-சுந்த ரேஸ்வரருக்கு விடிய விடிய சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு தீபாராதனைகள் நடக்கிறது. இதையொட்டி பக்தர்கள் பால், தயிர், இளநீர், பன்னீர், பழவகைகள், தேன், மஞ்சள் பொடி, எண்ணெய், நெய் மற்றும் இதர அபிஷேக பொருட்களை வருகிற 18-ந் தேதி மாலைக்குள் கோவில் உள்துறை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

    அன்று இரவு முதல் மறுநாள் காலை வரை நடை திறந்திருக்கும். அப்போது பக்தர்கள் இரவு முழுவதும் கோவிலுக்குள் தரிசனத்திற்காக அனுமதிக் கப்படுவார்கள்.

    இதேபோல் இம்மை யிலும் நன்மை தருவார் கோவில், சிம்மக்கல் ஆதிசொக்கநாதர் கோவில், செல்லூர் திருவாப்பு டையார் கோவில், தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோவில், தெற்குமாசி வீதி தென்திருவாலவாய சுவாமி கோவில், எழுகடல் காஞ்சன மாலையம்மன் கோவில், பேச்சியம்மன் படித்துறை, காசி விஸ்வநாதர் கோவில், சுடுதண்ணீர் வாய்க்கால் கடம்பவனேஸ்வரர் கோவில், திருவாதவூர் திருமறைநாத சுவாமி கோவில், ஆமூர் அய்யம் பொழில் ஈஸ்வரர் கோவில், உள்பட பல சிவன் கோவில்களிலும் மகா சிவராத்திரி சிறப்பு வழிபாடு நடைபெற உள்ளது.

    • ரெயில்வே பள்ளியில் விளையாட்டு போட்டி நடந்தது.
    • 100-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் கலந்து கொண்டனர்.

    மதுரை

    மதுரை ரெயில்வே பள்ளியில் 10 வயதுக்கும் உட்பட்டோருக்கான மாநில சாரண- சாரணியர் விளையாட்டு போட்டி நடந்தது. கோட்ட மேலாளர் பத்மநாபன் அனந்த் தொடங்கி வைத்தார். முதுநிலை கோட்ட வர்த்தக மேலாளர் ரதிபிரியா, கோட்ட ஊழியர் நல அதிகாரி சங்கரன், உதவி அதிகாரி இசக்கி ஆகியோர் கலந்து கொண்டனர். விளையாட்டு போட்டியில் சென்னை, சேலம், திருச்சி, பாலக்காடு, திருவனந்தபுரம், மதுரை கோட்டங்கள் மற்றும் பொன்மலை, போத்தனூர், பெரம்பூர் பணிமனைகள் சார்பில் 100-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு விளையாட்டு, நுண்ணுறிவு சார்ந்த போட்டிகள் நடந்து வருகிறது. நாளை வரை போட்டிகள் நடக்கிறது.

    • முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் சரவணன் தலைமையில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
    • மதுரை மக்களுக்கு கொண்டுவரப்பட்ட ரூ‌. 1,296 கோடி மதிப்பிலான முல்லைப் பெரியாறு குடிநீர் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

    மதுரை

    தூத்துக்குடியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு விட்டு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மதுரை வழியாக வந்தார். அப்போது மதுரை வலையங்குளம் ரிங் ரோட்டில் முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் சரவணன் ஏற்பாட்டில் சிலம்பம், கரகாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மூலம் 500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் மேளதாளம் முழங்க எடப்பாடி பழனிச்சாமிக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

    அதனைத் தொடர்ந்து டாக்டர் சரவணன் பூங்கொத்து கொடுத்து எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்றார்.

    பின்னர் அங்கு நடந்த விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் சரவணன் தலைமையில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் தங்களை அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டனர். அப்போது டாக்டர் சரவ ணன், பழனிச்சாமிக்கு செங்கோல் கொடுத்தார்.

    விழாவில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    தி.மு.க. தேர்தல் வாக்கு றுதியை 85 சதவீதம் நிறைவேற்றி விட்டதாக பொய் கூறி வருகிறார்கள். ஆனால் 10 சதவீத வாக்குறுதியை அவர்கள் நிறைவேற்றவில்லை.

    ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி தி.மு.க. அரசு தான். இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம் இருப்பதாக மு.க. ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் உண்மையில் தமிழகம் ஊழலில் தான் முதன்மையாக இருக்கிறது.

    அ.தி.மு.க. ஆட்சியின் போது கொண்டு வந்த பல திட்டங்களை தி.மு.க.வினர் நிறுத்திவிட்டார்கள். மதுரை மக்களுக்கு கொண்டுவரப்பட்ட ரூ. 1,296 கோடி மதிப்பிலான முல்லைப் பெரியாறு குடிநீர் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

    தி.மு.க. கூறிய எந்த தேர்தல் அறிக்கை வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை மக்களுக்கு பட்டை நாமம் போட்டு விட்டார்கள்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, உதயகுமார், மற்றும் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு 100 யூனிட் இலவச மின்சாரத்துக்கு தி.மு.க. அரசு வைக்கும் ஆப்பு என மதுரையில் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டி பேசினார்.
    • ஒரே 5 ஆண்டுகளில் இரட்டை இலையிலும், தி.மு.க. விலும் நின்று ஜெயித்திருக்கிறார்.

    மதுரை

    மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க தி.மு.க. அரசு சொல்ல காரணம் 100 யூனிட் இலவச மின்சாரத்துக்கு வைக்கும் ஆப்பு என்று முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி னார்.

    மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அதி.மு.க. சார்பில் கூத்தியார் குண்டு பகுதியில் 51 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சிகொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.இளைஞர் அணி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ரமேஷ், திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர் நிலை யூர் முருகன் முன்னிலை வகித்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் அதி.மு.க. இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று அதி.மு.க. கொடியை ஏற்றி வைத்தார்.

    பின்னர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    தமிழகத்தில் அதி.மு.க. மட்டும் தான் ஏழை மக்களுக்கான கட்சி, இங்குதான் சாதாரண தொண்டன் கூட உச்ச நிலைக்கு வர முடியும். இங்கு தான் ஜனநாயகம் இருக்கிறது ஆனால் தி.மு.க.வில் குடும்ப ஆட்சி தான் நடக்கிறது. அந்த குடும்ப கட்சியில் பல டைரக்டர்கள் இருக்கிறார்கள். அவர்களது வேலையே ஊழல் செய்வது தான்.

    தி.மு.க. ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து இருக்கிறது. தி.மு.க. தேர்தல் நேரத்தில் அறிவித்த 520 வாக்குறுதிகளில் சிலவற்றை மட்டுமே நிறைவேற்றி இருக்கிறார்கள். இன்னும் 90 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.

    எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வால் அடை யாளம் காட்டப்பட்ட 8 பேர் தற்போது தி.மு.க. ஆட்சியில் அமைச்சர்களாக இருக்கிறார்கள். அதில் செந்தில் பாலாஜி என்ற அமைச்சர் 5 கட்சிக்கு சென்று வந்திருக்கிறார்.

    ஒரே 5 ஆண்டுகளில் இரட்டை இலையிலும், தி.மு.க. விலும் நின்று ஜெயித்திருக்கிறார். இந்த அதிசயம் யாருக்கும் நடந்ததில்லை. மக்களை ஏமாற்றக்கூடிய அந்த நபர்தான் முதன்மை அமைச்சராக இருக்கிறார். அவரை ஸ்டாலின் வாழ்த்தி கொண்டிருக்கிறார்.

    தி.மு.க. எதிர்க்கட்சியாக இருக்கும்போது பேசுவதும், ஆளுங்கட்சியாக இருக்கும்போது பேசுவதும் வேறுபாடாக இருக்கும். தேர்தல் நேரத்தில் கவர்ச்சி யான திட்டங்களை அறிவித்துவிட்டு ஆட்சிக்கு வந்தவுடன் அந்த வாக்குறுதி களை காற்றில் பறக்க விடுவது தி.மு.க.வின் வாடிக்கை. தி.மு.க. அரசு இப்போது கேட்டாலே ஷாக் அடிக்கும் வகையில் மின்கட்டணத்தை உயர்த்தி இருக்கிறது.

    100 யூனிட் இலவசம் மின்சாரம் அதி.மு.க. ஆட்சியில் அனைத்து மக்களுக்கும் ஒவ்வொரு வீடுகளுக்கும் வழங்கப் பட்டது. ஆனால் தற்போது தி.மு.க. அரசு மின் இணைப்புடன் ஆதார் இணைக்க கட்டாயப் படுத்தி வருகிறது. மின் இணைப்புடன் ஆதாரை இணைத்து விட்டால் ஏதாவது ஒரு மானியம் மட்டுமே மக்கள் வாங்க முடியும். எனவே இந்த 100 யூனிட் இலவச மின்சாரத்திற்கு ஆப்பு வைப்பதற்காக தான் இந்த நடவடிக்கையில் தி.மு.க. அரசு ஈடுபட்டுள்ளது.

    மக்களுக்கு சுமை மேல் சுமை ஏற்றி வரும் தி.மு.க. அரசை ஆட்சியில் இருந்து இறக்க மக்கள் முடிவு செய்து விட்டார்கள். இனிவரும் தேர்தல்களில் அதி.மு.க. அமோக வெற்றியை பெரும் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர் பி உதயகுமார், தகவல் தொழில்நுட்ப ப்பிரிவு மண்டல செய லாளர் ராஜ்சத்யன் மற்றும் நிர்வாகிகள் ஏராளமா னோர் கலந்து கொண்ட னர்.

    • மதுரையில் அக்ரி.கணேசன் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சி நாளை நடக்கிறது.
    • ஐடா ஸ்கட்டர் அரங்கம்-2ல் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    மதுரை

    மதுரையை சேர்ந்த அக்ரி.கணேசன்-ருக்மணி கணேசன், ராஜேந்திரன்-வசந்தி, பொன்னையா ஐ.ஏ.எஸ்.,-சினேகலதா ஆகியோர்களின் சகோதரர் தேவர் என்ற ஜெய பெருமாள்-ஜெயாவின் மகன் பாலகார்த்திக்குக்கும், பழனிச்சாமி-நாகலட்சுமி மகள் சுவாதிக்கும் ராம நாதபுரத்தில் திருமணம் நடைபெற்றது.

    இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி மதுரையில் நாளை(12-ந்தேதி) நடக்கிறது. காலை 10.30 மணி முதல் மாலை 3 மணி வரை மதுரை-தூத்துக்குடி ரிங்ரோட்டில் உள்ள வேலம்மாள் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள ஐடா ஸ்கட்டர் அரங்கம்-2ல் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் அரசியல் கட்சியினர், முக்கிய பிரமுகர்கள், தொழி லதிபர்கள் மற்றும் உறவி னர்கள், நண்பர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகிறார்கள். விழா ஏற்பாடுகளை இருவீட்டார் குடும்பத்தினர் செய்து வருகின்றனர்.

    • மதுரை வடக்கு மண்டலத்தில் குறைதீர்க்கும் முகாம் 14-ந் தேதி நடக்கிறது.
    • இந்த தகவலை மதுரை மாநகராட்சி செய்தி-மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

    மதுரை

    மதுரை மாநகராட்சி பகுதி பொதுமக்கள் குறை களை நிவர்த்தி செய்வதற்கு செவ்வாய்கிழமை தோறும் வார்டு மறுவரையறை செய்யப்பட்ட 5 மண்ட லங்களுக்கு அந்தந்த மண்டல அலுவலகங்களில் குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது.

    அதன்படி வருகிற 14-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள மாநகராட்சியின் வடக்கு மண்டல அலுவ லகத்தில் காலை 10 மணி முதல் 12.30 வரை பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது. மேயர் இந்திராணி, ஆணையாளர் சிம்ரன் ஜித்சிங் காலோன் ஆகியோர் தலைமை தாங்குகிறார்கள்.

    வடக்கு மண்டலத்திற்குட்பட்ட விளாங்குடி, கரிசல்குளம், ஜவஹர்புரம், விசாலாட்சி நகர், அருள்தாஸ்புரம், தத்தனேரி மெயின் ரோடு, அய்யனார் கோவில், மீனாட்சிபுரம், பீ.பீ.குளம், நரிமேடு, அகிம்சாபுரம், கோரிப்பாளையம், தல்லாகுளம், சின்ன சொக்கிக்குளம், கே.கே.நகர்,அண்ணா நகர், சாத்தமங்கலம், பாத்திமா நகர், பெத்தானியாபுரம், பி.பி.சாவடி, கோச்சடை ஆகிய வார்டு பொதுமக்கள் இந்த குறைதீர்க்கும் முகாமில் கலந்து கொண்டு குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயர் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, கட்டிட வரைபட அனுமதி, தெருவிளக்கு, தொழில்வரி உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன் பெறலாம்.

    மேற்கண்ட தகவலை மதுரை மாநகராட்சி செய்தி-மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது. புட்ேநாட்:

    • மதுரை - திருமங்கலம் இரட்டை பாதை பணி: ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் 13-ந் தேதி ஆய்வு செய்கிறார.
    • அந்தப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் ரெயில்பாதையை நெருங்கவோ, கடக்கவே வேண்டாம் என ரெயில்வே அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.

    மதுரை

    மதுரை - திருமங்கலம் இடையே 17.32 கி.மீ. தொலைவுக்கு இரட்டை ரெயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதனை பெங்களூரு தென் சரக ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய்குமார் ராய் நாளை மறுநாள் (13-ந் தேதி) ஆய்வு செய்கிறார். அப்போது மதுரை-திருமங்கலம் இடையே காலை 9.30 மணி முதல் மதியம் 2 மணி வரை மோட்டார் டிராலி மூலம் ஆய்வு நடக்கிறது. அதன்பிறகு மாலை 3 மணி முதல் 6 மணி வரை அதிவேக ரெயில் சோதனை ஓட்டம் நடக்கிறது. இதனைத் தொடர்ந்து மதுரை-திருமங்கலம் இரட்டை பாதையில், மின்மயமாக்கல் ஏற்பாடுகளை தெற்கு ரெயில்வே தலைமை முதன்மை மின் பொறியாளர் சித்தார்த்தா 14-ந் தேதி ஆய்வு செய்ய உள்ளார். இதற்காக அந்த பகுதியில் சிறப்பு ஆய்வு ரெயில் மூலம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஆய்வு நடக்கிறது. இதனைத் தொடர்ந்து மதுரை- திருமங்கலம் இடையேயான புதிய இரட்டை ரெயில் பாதை மின்தடத்தில் 25 ஆயிரம் வோல்ட் மின்சாரம் பாய்ச்சப்பட்டு சிறப்பு ஆய்வு ரெயில் மூலம் சோதனை நடத்தப்படுகிறது. எனவே அந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் இரட்டை ரெயில் பாதையை நெருங்கவோ, கடக்கவே வேண்டாம் என்று மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.

    • சிறுமியை திருமணம் செய்த வாலிபர் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • திருமணம் நடந்தபோது மணமகள் 15 வயது சிறுமியாக இருந்தது தெரியவந்தது.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் சேடபட்டி அருகே உள்ள பெருங்காமநல்லூரை சேர்ந்தவர் செல்வேந்திரன் (வயது35). இவருக்கு கடந்த 2020-ம் ஆண்டு திருமங்கலம் தெற்குதெருவை சேர்ந்த 15 வயது சிறுமியுடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டு சிறுமி பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

    இந்த நிலையில் திருமங்கலம் மகளிர் போலீஸ் நிலையத்தில் மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்க வலியுறுத்தி செல்வேந்திரன் புகார் கொடுத்தார். இது குறித்து மகளிர் போலீசார் விசாரணை நடத்திய போது செல்வேந்திரனுக்கு திருமணம் நடந்தபோது மணமகள் 15 வயது சிறுமியாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து மகளிர் ஊர்நலஅலுவலர் காமு இந்தக் குழந்தை திருமணம் தொடர்பாக புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் செல்வேந்திரன் மீது போக்சோ சட்டத்திலும் மற்றும் அவரது தந்தை முத்துகழுவன், தாய் சத்யபாமா மற்றும் சிறுமியின் உறவினர்கள் உட்பட 8 பேர் மீது வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுரை- சென்னை தேஜஸ் ரெயிலை திண்டுக்கல்லில் இருந்து இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • தேஜஸ் ரெயில் நேற்று முதல் திருச்சியில் இருந்து புறப்பட்டு செல்கிறது.

    மதுரை

    மதுரை- விருதுநகர் இடையே இரட்டை ரெயில் பாதை பணிகள் நடந்து வருகிறது. அந்த வழியாக செல்லும் ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மதுரையில் இருந்து புறப்பட வேண்டிய தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில், நேற்று முதல் திருச்சியில் இருந்து புறப்பட்டு செல்கிறது. இதனால் மதுரையில் இருந்து செல்லும் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    மதுரையில் இருந்து வருகிற 19, 21, 26, 28-ந் தேதிகளில் புறப்படும் டெல்லி நிஜாமுதீன் சம்பர்கிரந்தி விரைவு ரெயில் (12651) மற்றும் பிப்ரவரி 14, 16, 21, 23-ந் தேதிகளில் டெல்லியில் இருந்து புறப்படும் மதுரை சம்பர்கிரந்தி விரைவு ரெயில் (12652) ஆகியவை விழுப்புரம் வரை இயக்கப்படும் என்று தென்னக ரெயில்வே அறிவித்திருந்தது. இந்த நிலையில் பயணிகள் வசதிக்காக அந்த ரெயில்கள் திண்டுக்கல் வரை இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல மதுரை-சென்னை இடையேயான தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயிலையும் திண்டுக்கல்லில் இருந்து இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

    • மதுரையில் இரட்டைப் பாதை பணிகள் காரணமாக வைகை, பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் கூடல்நகரில் இருந்து புறப்படும்.
    • அடுத்த மாதம் 6-ந் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    மதுரை

    மதுரையில் இருந்து சென்னைக்கு சொகுசு பஸ்சில் செல்ல ரூ.850 கட்டணம் வசூலிக்கப் படுகிறது. குளிர்சாதன பஸ்சுக்கு ரூ.1,100 வரை கட்டணம் செலுத்த வேண்டும். மதுரையில் இருந்து சென்னைக்கு தனியார் நிறுவனங்கள் சார்பிலும் ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்களில் பயணிக்க, ஒருவருக்கு ரூ.1500 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    மதுரையில் இருந்து சென்னைக்கு சீரான சாலைகள் இல்லை. பஸ்கள் குண்டும் குழி யுமான சாலைகளில் பயணிக்க வேண்டும். இதனால் பயணிகளுக்கு உடல் வலி, களைப்பு ஏற்படுகிறது. மேலும் மதுரையில் இருந்து சென்னைக்கு பஸ்சில் செல்ல அதிகபட்சம் 11 மணி நேரம் ஆகிறது.

    மதுரை-சென்னை இடை யேயான பஸ் பயணத்துடன் ஒப்பிடுகையில், ரெயில் பயணம் சுலபமானது. முன்கூட்டியே ரிசர்வ் செய்து விட்டால் படுத்துக் கொண்டே பயணம் செய்யலாம். பயண நேரம் குறைவு. கட்டணமும் அதிகமில்லை.

    மதுரையில் இருந்து சென்னைக்கு வைகை, பாண்டியன் எக்ஸ்பிரஸ் ஆகிய 2 ரெயில்கள் தினமும் இயக்கப்பட்டு வருகிறது. இது 10 நிறுத்தங்களை உள்ளடக்கியது. சில ரெயில் நிலையங்களில் மட்டுமே நிற்கும். அதுவும் தவிர எக்ஸ்பிரஸ் ரெயில்கள் அதிவேகமாக செல்லக்கூடியவை. அதிக பட்சம் 7 மணி நேரத்தில் சென்னையை அடைய முடியும். இதன் காரணமாக மதுரையில் வசிக்கும் பொதுமக்கள் சென்னைக்கு ரெயிலில் செல்ல முக்கியத்துவம் கொடுக்கின்றனர். மதுரையில் இருந்து காலை 7 மணிக்கு வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்படுகிறது. இது மதியம் 2.30 மணிக்கு சென்னை சேறும். அதேபோல சென்னையில் இருந்து இரவு 9.30 மணிக்கு புறப்படும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயில், மதுரைக்கு அதிகாலை 5.30 மணிக்கு வரும்.

    எக்ஸ்பிரஸ் ரெயிலை பொருத்தவரை குறைந்தபட்சம் 1000 பேர் ஒரே நேரத்தில் பயணம் செய்ய முடியும். மதுரை-சென்னைஇடையே தினந்தோறும் இரு மார்க்கங்க ளிலும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்கின்றனர்.

    மதுரை-விருதுநகர் இடையே இரட்டை ரெயில் பாதை பணிகள் நடக்கிறது. வருகிற 17-ந் தேதி முதல் மார்ச் மாதம் 3-ந் தேதி வரை மதுரை - சென்னை வைகை விரைவு ரெயில் (12636) மற்றும் பிப்ரவரி 16 முதல் மார்ச் 2 வரை சென்னை - மதுரை வைகை விரைவு ரெயில் (12635) ஆகியவை கூடல்நகர் - மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

    அதேபோல பிப்ரவரி 16 முதல் மார்ச் 3-ந் தேதி வரை மதுரை-சென்னை பாண்டியன் விரைவு ரெயில், பிப்ரவரி 15 முதல் மார்ச் 2 வரை சென்னை - மதுரை பாண்டியன் விரைவு ரெயில் (12637) ஆகியவை கூடல் நகர் - மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    மதுரையில் இருந்து தினந்தோறும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னைக்கு இயக்கப்பட்டு வருகிறது. இது மதுரையில் இருந்து மாலை 3 மணிக்கு புறப்பட்டு இரவு 7.30 மணிக்கு சென்னை செல்லும். மதுரை ரெயில் நிலையத்தில் இரட்டை பாதை பணிகள் காரணமாக, தேஜஸ் ரெயில் நேற்று முதல் திருச்சியில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்டு வருகிறது.

    மதுரை ரெயில் நிலை யத்தில் நடைபெறும் இரட்டைப்பாதை பணிகள் எப்போது முடியும் என்று தெரியவில்லை? அதே நேரத்தில் அடுத்த மாதம் 6-ந் தேதி வரை போக்குவரத்து மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளதால், அதுவரை பயணிகள் வைகை, பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் பயணிக்க வேண்டுமென்றால் கூடல் நகருக்கு செல்ல வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

    இது பயணிகளுக்கு சற்று இடைஞ்சலை ஏற்படுத்தி யுள்ளது.

    • சொத்து பிரச்சினையில் தாயை மகனே அடித்துக் கொன்ற சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • கொலை குறித்து நாகமலை புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை மேலக்குயில்குடி கிழக்கு தெருவை சேர்ந்தவர் பம்பையா. இவரது மனைவி சிந்தாமணி(வயது 75). இவர் தனது 2 மகன்கள் மற்றும் 3 மகள்களுடன் வசித்து வந்தார்.

    சிந்தாமணியின் 2-வது மகன் வேந்தன்(50). இவர் தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்துவிட்டார். இதைத்தொடர்ந்து அவர் தனது தாய் சிந்தாமணி வீட்டிலேயே வசித்து வந்தார். அவர் ஒரு டிராவல்ஸ் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் வேந்தனுக்கு மது குடிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதனால் சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். அவரை சிந்தாமணி கண்டித்து வந்தார். சிந்தாமணிக்கு பூர்வீக சொத்துக்கள் உள்ளது. அதனை பிரித்து தரும்படி வேந்தன் அடிக்கடி தகராறு செய்து வந்தார்.

    வழக்கம்போல் நேற்று இரவும் வேந்தன் தாய் சிந்தாமணியிடம் சொத்தை பிரித்து தரும்படி கேட்டு தகராறு செய்துள்ளார். அப்போது அவர் உனக்கு சொத்து தரமுடியாது என்று கூறியுள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த வேந்தன் விறகு கட்டையை எடுத்து வந்து சிந்தாமணியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் உயிருக்கு போராடினார். இதனைகண்ட வேந்தன் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார்.

    இதுபற்றி அறிந்த உறவினர்கள் அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் சிந்தாமணியை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்துவிட்டார். இதுபற்றி நாகமலை புதுக்கோட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது.

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது ஒரு வீட்டில் பதுங்கியிருந்த வேந்தனை பிடித்து கைது செய்தனர். சொத்து பிரச்சினையில் தாயை மகனே அடித்துக் கொன்ற சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • இன்று தேர் பவனி நடைபெறும்.
    • நாளை ஆலயத்தில் பொங்கல் விழா நடக்கிறது.

    மதுரை கோ.புதூர் புனித லூர்து அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. திருச்சி சலேசிய மாநில தலைவர் அகிலன் தலைமையில் கொடியேற்றம் நடைபெற்றது. மதுரை உயர்மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி கலந்து கொண்டு திருப்பலி் நடந்தது. விழாவில் இன்று(சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு திருவிழா திருப்பலி சேலம் முன்னாள் மறை மாவட்ட ஆயர் சிங்கராயர் தலைமையில் நடைபெறுகிறது.

    இதைதொடர்ந்து தேர் பவனி நடைபெறும். இந்த தேர் பவனி ஆலயத்தில் இருந்து புறப்பட்டு சந்தன மாதா கோவில் தெரு, பாரதியார் ரோடு, சிங்காரவேலர் தெரு, அழகர்கோவில் ரோடு வழியாக ஆலயத்தை வந்தடையும். இந்த திருவிழாவில் மதுரை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். நாளை(ஞாயிற்றுக்கிழமை) ஆலயத்தில் பொங்கல் விழா நடக்கிறது. அப்போது பொங்கல் வைத்து, உப்பு மிளகு, தலை முடி இறக்கி நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.

    விழா ஏற்பாடுகளை பங்கு தந்தையர்கள், அருட்பணி பேரவை மற்றும் இறைமக்கள் செய்துள்ளனர்.

    ×