search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gudalnagar"

    • மதுரையில் இரட்டைப் பாதை பணிகள் காரணமாக வைகை, பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் கூடல்நகரில் இருந்து புறப்படும்.
    • அடுத்த மாதம் 6-ந் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    மதுரை

    மதுரையில் இருந்து சென்னைக்கு சொகுசு பஸ்சில் செல்ல ரூ.850 கட்டணம் வசூலிக்கப் படுகிறது. குளிர்சாதன பஸ்சுக்கு ரூ.1,100 வரை கட்டணம் செலுத்த வேண்டும். மதுரையில் இருந்து சென்னைக்கு தனியார் நிறுவனங்கள் சார்பிலும் ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்களில் பயணிக்க, ஒருவருக்கு ரூ.1500 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    மதுரையில் இருந்து சென்னைக்கு சீரான சாலைகள் இல்லை. பஸ்கள் குண்டும் குழி யுமான சாலைகளில் பயணிக்க வேண்டும். இதனால் பயணிகளுக்கு உடல் வலி, களைப்பு ஏற்படுகிறது. மேலும் மதுரையில் இருந்து சென்னைக்கு பஸ்சில் செல்ல அதிகபட்சம் 11 மணி நேரம் ஆகிறது.

    மதுரை-சென்னை இடை யேயான பஸ் பயணத்துடன் ஒப்பிடுகையில், ரெயில் பயணம் சுலபமானது. முன்கூட்டியே ரிசர்வ் செய்து விட்டால் படுத்துக் கொண்டே பயணம் செய்யலாம். பயண நேரம் குறைவு. கட்டணமும் அதிகமில்லை.

    மதுரையில் இருந்து சென்னைக்கு வைகை, பாண்டியன் எக்ஸ்பிரஸ் ஆகிய 2 ரெயில்கள் தினமும் இயக்கப்பட்டு வருகிறது. இது 10 நிறுத்தங்களை உள்ளடக்கியது. சில ரெயில் நிலையங்களில் மட்டுமே நிற்கும். அதுவும் தவிர எக்ஸ்பிரஸ் ரெயில்கள் அதிவேகமாக செல்லக்கூடியவை. அதிக பட்சம் 7 மணி நேரத்தில் சென்னையை அடைய முடியும். இதன் காரணமாக மதுரையில் வசிக்கும் பொதுமக்கள் சென்னைக்கு ரெயிலில் செல்ல முக்கியத்துவம் கொடுக்கின்றனர். மதுரையில் இருந்து காலை 7 மணிக்கு வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்படுகிறது. இது மதியம் 2.30 மணிக்கு சென்னை சேறும். அதேபோல சென்னையில் இருந்து இரவு 9.30 மணிக்கு புறப்படும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயில், மதுரைக்கு அதிகாலை 5.30 மணிக்கு வரும்.

    எக்ஸ்பிரஸ் ரெயிலை பொருத்தவரை குறைந்தபட்சம் 1000 பேர் ஒரே நேரத்தில் பயணம் செய்ய முடியும். மதுரை-சென்னைஇடையே தினந்தோறும் இரு மார்க்கங்க ளிலும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்கின்றனர்.

    மதுரை-விருதுநகர் இடையே இரட்டை ரெயில் பாதை பணிகள் நடக்கிறது. வருகிற 17-ந் தேதி முதல் மார்ச் மாதம் 3-ந் தேதி வரை மதுரை - சென்னை வைகை விரைவு ரெயில் (12636) மற்றும் பிப்ரவரி 16 முதல் மார்ச் 2 வரை சென்னை - மதுரை வைகை விரைவு ரெயில் (12635) ஆகியவை கூடல்நகர் - மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

    அதேபோல பிப்ரவரி 16 முதல் மார்ச் 3-ந் தேதி வரை மதுரை-சென்னை பாண்டியன் விரைவு ரெயில், பிப்ரவரி 15 முதல் மார்ச் 2 வரை சென்னை - மதுரை பாண்டியன் விரைவு ரெயில் (12637) ஆகியவை கூடல் நகர் - மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    மதுரையில் இருந்து தினந்தோறும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னைக்கு இயக்கப்பட்டு வருகிறது. இது மதுரையில் இருந்து மாலை 3 மணிக்கு புறப்பட்டு இரவு 7.30 மணிக்கு சென்னை செல்லும். மதுரை ரெயில் நிலையத்தில் இரட்டை பாதை பணிகள் காரணமாக, தேஜஸ் ரெயில் நேற்று முதல் திருச்சியில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்டு வருகிறது.

    மதுரை ரெயில் நிலை யத்தில் நடைபெறும் இரட்டைப்பாதை பணிகள் எப்போது முடியும் என்று தெரியவில்லை? அதே நேரத்தில் அடுத்த மாதம் 6-ந் தேதி வரை போக்குவரத்து மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளதால், அதுவரை பயணிகள் வைகை, பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் பயணிக்க வேண்டுமென்றால் கூடல் நகருக்கு செல்ல வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

    இது பயணிகளுக்கு சற்று இடைஞ்சலை ஏற்படுத்தி யுள்ளது.

    ×