என் மலர்
மதுரை
- குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
- தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க செயலாளர், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மதுரை
குழந்தை தொழிலா ளர்கள் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் மதுரை கூடுதல் தொழிலா ளர் ஆணையர் ஜெயபால் மற்றும் மதுரை தொழிலாளர் இணை ஆணையர் சுப்பிர மணியன் ஆகியோரின் வழி காட்டுதலின்படியும் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் அனு சரிக்கப்பட்டது.
மதுரை, எம்.ஜி.ஆர். ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் மதுரை தொழிலாளர் இணை ஆணையர் சுப்பிரமணியன் தலைமையில் குழந்தை தொழிலாளரி உறுதிமொழி ஏற்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து குழந்தை தொழி லாளர் முறைக்கெதிரான கையெழுத்து இயக்கம். வாகனங்களில் விழிப்பு ணர்வு. ஸ்டிக்கர்கள் ஓட்டு தல், பொதுமக்களிடையே துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்தல் போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடங்கி வைக்கப்பட்டது.
மேலும் குழந்தை தொழிலாளர் முறைக்கெதிரான வீதி நாடகம் மற்றும். பறை இசை ஆகிய கலை நிகழ்ச்சி கள் சைல்டு லைன் உதவி யுடன் நடத்தப்பட்டது. இதில் மதுரை தொழிலாளர் துணை ஆணையர் லிங்கம், மதுரை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) கார்த்திகேயன், மதுரை தொழிலாளர் உதவி ஆணை யர் (சமூக பாதுகாப்பு திட்டம்) மலர்விழி, தொழிலாளர் துணை ஆய்வர்கள், தொழி லாளர் உதவி ஆய்வர்கள். முத்திரை ஆய்வர்கள், மாவட்ட தடுப்பு படை உறுப்பினர்களான சைல்டுலைன் அமைப்பினர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு கல்வித்துறை, தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க செயலாளர், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- கோஷ்டி மோதலில் ஈடுபட்ட 8 பேரை கைது செய்தனர்.
- இதில் இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது.
மதுரை
மதுைர பெத்தானி யாபுரம் மேட்டுத்தெரு கம்பர் தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி பேச்சியம்மாள் (வயது 41) .இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (51) என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது.
சம்பவத்தன்றும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து பேச்சியம்மாள் கரிமேடு போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து சரவணன், பூமாரி, கனி, செல்வி ஆகிய 4 பேரையும் கைது செய்தனர் . சரவணன் கொடுத்த புகாரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ரமேஷ், பேச்சி, கோகிலா, பிரியா ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.
- ரெயில்வே ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
- முடிவில் கோட்ட துணைத்தலைவர் வினோத் பாபு நன்றி கூறினார்.
மதுரை
மதுரை கோட்ட ரெயில்வே தொழிலாளர் சங்கமான தக்சின் ரெயில்வே ஊழியர்கள் யூனியன் சார்பில் மதுரை ரெயில் நிலைய மேற்கு நுழைவுவாயில் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. துணை பொதுச்செயலாளர் கார்த்திக் சங்கிலி தலைமை தாங்கி னார்.
கோட்ட பொருளாளர் சரவணன் முன்னிலை வகித்தார். துணை பொதுச்செயலாளர் சிவக்குமார், கோட்ட உதவி தலைவர் ஜெயராஜசேகர், கோட்ட இணை செயலாளர்ஆர்.சங்கரநாராயணன், ஏ.ஐ.எல்.ஆர்.எஸ்.ஏ. கோட்ட துணை தலைவர் கண்ணன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
100 ஆண்டுகளுக்கு மேல் சேவை செய்த ராயபுரம் ரெயில்வே அச்சகத்தை மூடும் முடிவை கைவிட வேண்டும். காலி பணி யிடங்கள் போர்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும். முன்னாள் ராணுவத்தினரை ஒப்பந்த கேட் கீப்பர்களாக நியமிக்கக் கூடாது. தொழிலாளர்க ளுக்கு அலவன்ஸ் தொகையை வழங்க வேண்டும் உள்ளிட் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
முடிவில் கோட்ட துணை தலைவர் வினோத் பாபு நன்றி கூறினார்.
- காட்டு பன்றிகள், குரங்குகள் பயிர்களை சேதப்படுத்துகின்றன.
- விவசாயி களின் கோரிக்கைகளுக்கு துறை சார்ந்த அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
மதுரை
மதுரை மேற்கு வட்டாட்சி யர் அலுவ லகத்தில் விவசா யிகள் குறைதீர் கூட்டம் தாசில்தார் நாகராஜன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் தாலுகா அலுவலக எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் விவசா யிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை முன் வைத்தனர்.
சேதமடைந்துள்ள துவரிமான் கண்மாய் ஷட்டரை சரி செய்ய வேண்டும். கீழமாத்தூரில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்ற வேண்டும், கீழக் குயில்குடி தட்டானூர் பொட்டக்குளம் கண்மாயில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும், துவரிமான் பகுதியில் விளை நிலங்களுக்குள் புகுந்து காட்டு பன்றிகள் குரங்குகள் பயிர்களை சேதப்படுத்துகிறது.
அதனை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை விவசாயிகள் முன்வைத்தனர். விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு துறை சார்ந்த அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
கூட்டத்தில் துணை வட்டாட்சியர்கள், வருவாய் அலுவலர், வி.ஏ.ஓ.க்கள், பல்வேறு துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- திருப்பாலை, மூன்றுமாவடி பகுதிகளில் மாநகராட்சி கமிஷனர் ஆய்வு செய்தார்.
- சாலை வசதிகள் செய்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
மதுரை
மதுரை மாநகராட்சி கமிஷனர் பிரவீன் குமார் கடந்த வாரம் பொறுப் பேற்றுக் கொண்டார். இதைத்தொடர்ந்து மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளிலும் செய்யப் பட்டுள்ள அடிப்படை வசதி கள் குறித்து ஆய்வு செய்ய திட்டமிட்ட அவர் திருப் பாலை, மூன்றுமாவடி, கண்ணனேந்தல் உள்ளிட்ட பகுதிகளில் நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் சாலை மற்றும் வீதிகளில் அள்ளப்படாமல் இருந்த குப்பைகளை அகற்ற தூய்மை பணியாளர்களுக்கு உத்தரவிட்டார். பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்த கமிஷனர் பிரவீன்குமார் குடிநீர் சரியாக வருகிறதா? என்று கேட்டறிந்தார். சில பகுதிகளில் குடிநீர் குறைந்த அளவில் கிடைப்பதாக பொதுமக்கள் புகார் தெரி வித்தனர்.
அதனை சரிசெய்ய அதி காரிகளுக்கு அவர் உத்தர விட்டார். பல்வேறு இடங்க ளில் ஆய்வு செய்த மாநக ராட்சி கமிஷனர் பிரவீன் குமாரிடம் பொதுமக்கள் தரமான சாலை அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதன் விவரம் வருமாறு:-
மண்டலம் 1-க்கு உட்பட்ட பகுதிகளில் கவுன்சிலர்கள், முக்கிய பிரமுகர்கள் வசிக்கும் பகுதிகளில் மட்டும் தார்சாலை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. கண்ணனேந்தல், மூன்றுமாவடி, திருப்பாலை, தபால் தந்திநகர், பார்க் டவுண் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை பணிகளுக்காக தோண்டப்பட்ட வீதிகள் இன்னும் முழுமையாக சரி செய்யப்படவில்லை.
இதனால் பொதுமக்கள் சாலைகளில் செல்வதற்கு இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது பல்வேறு பகுதிகளில் குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை பணிகள் முடிவடைந்த நிலையில் முறையான சாலைகள் அமைத்து தராததால் பொதுமக்கள் தொடர்ந்து அதிகாரிகளிடம் கோரிக்கை மனுக்களைகொடுத்தும் நடவடிக்கை இல்லை.
இவ்வாறு அவர்கள் கமிஷனரிடம் தெரிவித்துள்ளனர். மேலும் அவரிடம் உடனடியாக சாலைகள் அமைத்து தர வேண்டும் என்றும் கோரிக்கையும் விடுத்தனர். குடியிருப்போர் சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் தனித்தனியாக மனுக்களை அளித்து உடனடியாக சாலை அமைக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
- சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும்.
- மேயரிடம் கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்தனர்.
திருப்பரங்குன்றம்
மதுரை மாநகராட்சி மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட திருப்பரங்குன்றத் தில் இன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. மண்டல தலைவர் சுவிதா விமல் தலைமை தாங்கினார். மேயர் இந்திராணி, ஆணையாளர் பிரவீன் குமார், துணை மேயர் நாகராஜன் ஆகியோர் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றனர்.
கூட்டத்தில் 97-வது வார்டு கவுன்சிலர் சிவசக்தி ரமேஷ் தனது வார்டுக்கு உட்பட்ட கோட்டை அரசு ஆரம்ப பள்ளியில் குடிநீர் வசதி இல்லாமல் மாணவ- மாணவிகள் அவதிப்படு கின்றனர். எனவே குடிநீர் வசதியை நிறைவேற்ற வேண்டும். ஓம் சக்தி நகரில் கட்டப்பட்டு உள்ள பொதுக் கழிவறையை பயன்பாட்டு க்கு கொண்டு வர வேண்டு மென வலியு றுத்தி கோ ரிக்கை மனு அளித்தனர்.
94-வது வார்டு கவுன்சிலர் ஸ்வேதா சத்யன் திருநகர் பகுதியில் சாலை, தெரு விளக்கு, கழிவுநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என கோரிக்கை மனு அளித்தார். மேலும் வார்டில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு போதுமான கவச உடைகள், கையுறைகள் இல்லை. எனவே அதனை உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.
93-வது வார்டு பொது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என கவுன்சிலர் ரவிச்சந்திரன் வலியுறுத்தினார். மதுரை மாநகராட்சியின் மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட பகுதியில் பல்வேறு இடங்க ளில் குடிநீர், சாலை, தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என பொதுமக்களும் மனு அளித்தனர்.
மனுக்களை பெற்றுக் கொண்ட மேயர், கோரிக்கை தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
- உலக நலன் வேண்டி அறுபடை வீடுகளுக்கு செல்லும் பாதயாத்திரை குழுவினர்.
- 1,157 கிலோ மீட்டர் 67 நாட்கள் திட்டமிட்டு இந்த பாதயாத்திரை பயணத்தை தொடர்ந்து நடத்தி வருகிறோம்.
திருப்பரங்குன்றம்
உலக நலன் வேண்டியும், விவசாயம் செழிக்க மழை வேண்டியும் உலக மக்கள் சுபிட்சமாக வாழ வலைய பட்டி சித்தர் பச்சை காவடி ஐயா தலைமையில் 26 பேர் நடை பயண பாதயாத்திரை குழு திருப்பரங்குன்றத்திற்கு வந்தது.
இவர்கள் கடந்த 7-ந் தேதி சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் இருந்து பாதயாத்திரையாக புறப்பட்டு 11-ந் தேதி முருகனின் ஆறாம் படை வீடான மதுரையில் உள்ள பழமுதிர் சோலைக்கு வந்தனர். தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்டு நேற்று இரவு திருப்பரங் குன்றத்திற்கு வந்து தங்கிய அவர்கள் இன்று காலையில் திருப் பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு தரிசனம் செய்தனர்.
இதுகுறித்து வலையபட்டி சித்தர் பச்சை காவடி ஐயா நிருபர்களிடம் கூறியதாவது:- எனது 16 வயதில் அய்யப்பன் கோவி லில் தொடங்கிய இந்த பாத யாத்திரை தற்போது வரை நடைபெற்று வரு கிறது. இதுவரை 12 முறை ராமேஸ்வரம் - காசி பாதயாத்திரை சென்றும், 16 முறை திருப்பதி மற்றும் அய்யப்பன் கோவிலுக்கும் நடந்தே சென்று சாமி தரி சனம் செய்தேன்.
தற்போது உலக நலன் வேண்டி, அனைத்து உயிர் களும் இன்புற்று வாழ வேண்டியும் அறுபடை வீடு களுக்கு பாதயாத்திரை பயணத்தை கடந்த 2016-ம் ஆண்டு தொடங்கினோம். அதன்படி முதலில் பழமுதிர் சோலை தொடர்ந்து திருப் பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலைக்கு சென்று திருத்தணியில் எங்களது நடைப் பயணத்தை நிறைவு செய் வோம். சுமார் 1,157 கிலோ மீட்டர் 67 நாட்கள் திட்ட மிட்டு இந்த பாதயாத்திரை பயணத்தை தொடர்ந்து நடத்தி வருகிறோம். இடை யில் கொரோனா காரண மாக 2 ஆண்டுகள் செல்ல முடியவில்லை.
தற்போது 6-வது ஆண்டாக இந்த ஆன்மீக யாத்திரையை நிறைவு செய் யும் விதமாக கடந்த 7-ம் தேதி பயணத்தை தொடங்கி னோம். தினமும் இரவு ஒரு மணி அளவில் நடக்க ஆரம் பித்து காலை 9 மணி வரை நடை பயணம் செல்வோம். பின்பு நாங்கள் திட்டமிட்ட இடத்தில் தங்கி பஜனை பாடிவிட்டு தொடர்ந்து அடுத்த இடத்திற்கு செல் வோம். முருகனின் அருளால் இந்த பயணம் சிறப்பாக அமையும் என நம்புகிறோம்
இவ்வாறு அவர் கூறி னார்.
- வரும் காலங்களில் பால் உற்பத்தியை அதிகமாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
- முன்பு இருந்ததை விட தற்போது ஆவின் பால் உற்பத்தி ஏறுமுகமாக தான் இருக்கிறது.
மதுரை:
பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மதுரை ஆவின் பாலகத்தில் ஐஸ்கிரீம் உற்பத்தி மற்றும் பால் பாக்கெட், பால்கோவா, நெய் போன்ற பொருள்கள் உற்பத்தி செய்வதை இன்று ஆய்வு செய்தார்.
அதனைத்தொடர்ந்து தும்பைபட்டி பால் உற்பத்தியாளர் சங்கத்தில் உள்ள உறுப்பினர்கள் 50 பேருக்கு கறவை மாடு வாங்க தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ. 25 லட்சம் கடனுதவியும், உத்தம நாயக்கனூரில் உள்ள உறுப்பினர்கள் 25 பேருக்கு கறவை மாடு வாங்க கடனாக ரூ. 50 ஆயிரம் வீதம் ரூ. 12 லட்சத்து 50 ஆயிரமும், கோட்ட நத்தம்பட்டி பகுதியில் தலா ரூ. 50 ஆயிரம் வீதம் 26 பேருக்கு ரூ.13 லட்சமும் வழங்கினார்.
வீரபெருமாள்பட்டி சங்கத்திற்கு ரூ. 2 லட்சத்து 50 ஆயிரமும், தாட்கோ நிதி திட்டத்தில் 3 பேருக்கு ரூ. 60 ஆயிரமும், பராமரிப்பு கடன் உதவியாக 31 நபர்களுக்கு ரூ.4 லட்சத்து 34 ஆயிரம் என மொத்தம் 135 நபர்களுக்கு ரூ.57 லட்சத்து 94 ஆயிரத்தையும் அமைச்சர் வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து அமைச்சர் மனோதங்கராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-
வரும் காலங்களில் பால் உற்பத்தியை அதிகமாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதேபோல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்த ஆவின் ஐஸ்கிரீம் அனைத்து இடங்களுக்கும் கிடைக்க வழி வகை செய்யப்படும்.
ஆவின் ஐஸ்கிரீமுக்கு தற்போது அதிக வரவேற்பு உள்ளது. 10 சதவீதத்திற்கும் மேல் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதையும் வரும் காலங்களில் அதிகமாக உற்பத்தி செய்ய நடவடிக்கைகள் எடுக்க உள்ளோம்.
பால் உற்பத்தி விவசாயிகளுக்கு நமது அரசு கடன் உதவிகளை வழங்குவது மட்டுமின்றி, மாடுகளின் பராமரிப்பு செலவு, அந்த மாடுகளுக்கு நோய் வந்தால் அதனை தடுக்க நோய் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவும் தீவிரம் காட்டி இருக்கிறோம்.
முன்பு இருந்ததை விட தற்போது ஆவின் பால் உற்பத்தி ஏறுமுகமாக தான் இருக்கிறது. ஒரு மாநில பால் உற்பத்தியில் மற்றொரு மாநிலம் தலையிடக்கூடாது என்பது எங்களின் கருத்து. எனவே அமுல் நிறுவனம் வருவதினால் ஆவின் பால் உற்பத்தி குறையாது. அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா, ஆவின் தலைமை இயக்குனர் வினித், மதுரை ஆவின் பொது மேலாளர் சாந்தி மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் அக்ரி.கணேசன், செல்லத்துரை, ஆனந்த், புண்ணியமூர்த்தி உள்பட பலர் உடனிருந்தனர்.
- வாலிபர்கள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மதுரை
மதுரை தபால்தந்தி நகர் கோமதி அம்மன் நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் செந்தமிழ்செ ல்வன்(வயது26). இவர் அடிக்கடி மது குடித்தார்.
இதில் ஏற்பட்ட மன அழுத்தத்தில் செந்தமிழ்செ ல்வன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விளாங்குடி செங்கோல் நகரை சேர்ந்தவர் சுரேஷ்கண்ணன்(35). இவரும் குடிப்பழக்கம் காரணமாக விரக்தியடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- மதுரை சோழவந்தான் அருகே பா.ஜ.க. சாதனை விளக்க கூட்டம் நடந்தது.
- பா.ஜ.க. அரசின் 9 ஆண்டு கால சாதனைகளை விளக்கியும், தி.மு.க. அரசை கண்டித்தும் நடந்தது.
சோழவந்தான்
சோழவந்தான் அருகே உள்ள மேலக்காலில் மதுரை கிழக்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு மண்டல் பாரதீய ஜனதா கட்சி சார்பில் சாதனை விளக்க கூட்டமும், தி.மு.க. அரசின் மக்கள் விரோத போக்கிற்கு கண்டனம் தெரிவிக்கும் கூட்டமும் நடந்தது. மண்டல் தலைவர் அழகர்சாமி தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் குகனேஷ்வரன் முன்னிலை வகித்தார். பொதுச்செயலாளர் முத்துப்பாண்டி வரவேற்றார். பா.ஜ.க. அரசின் 9 ஆண்டு கால சாதனைகளை விளக்கியும், தி.மு.க. அரசை கண்டித்தும் மாவட்ட செயலாளர் கண்ணன், உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் தங்கவேல் சாமி, மாவட்ட நிர்வாகி கோசா பெருமாள் ஆகியோர் பேசினர். கூட்டத்தில் மகளிரணி நிர்வாகிகள் முருகேஸ்வரி, தேவி, வர்த்தக அணி தசரத சக்கரவர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மதுரை அருகே கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மூதாட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
- மர்ம நபர்கள் கொடூரமாக கொலை செய்து முட்புதரில் வீசிச்சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
மதுரை
மதுரை அருகே நாகமலை புதுக்கோட்டையை அடுத்த காலாங்கரையில் உள்ள முட்புதரில் இன்று காலை 55 வயது மதிக்கத்தக்க பெண் இறந்து கிடந்தார். இதைப்பார்த்த அந்தப்பகுதி மக்கள் உடனே நாகமலை புதுக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரி வித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது அந்த பெண்ணின் கை, கால்கள் கட்டப்பட்டிருந்தது. உடலில் பல்வேறு பாகங்களில் ரத்தக்காயங்கள் இருந்தன. எனவே மர்ம நபர்கள் அந்த பெண்ணை கொடூரமாக கொலை செய்து விட்டு முட்புதரில் வீசிச்சென்றி ருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். தொடர்ந்து அந்த பெண்ணின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோத னைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது கண்டறியப்பட்டால் அவரை கொலை செய்து வீசி சென்றவர்கள் யார்? என்பது தெரியவரும். ஆகவே பிணமாக கிடந்த பெண்ணை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
- கார் விபத்தில் அரசு ஊழியர் பலியானார்.
- தடுப்பில் மோதி கார் தலைக்குப்புற உருண்டு கவிழ்ந்தது.
வாடிப்பட்டி
கோவை மாவட்டம் சூலூர் சேர்ந்தவர் மோகன சுந்தரம் (வயது73). இவர் மாவட்ட வருவாய் அலுவலரின் நேர்முக உதவியாளராக பணி செய்து ஓய்வு பெற்றவர். மதுரைக்கு வந்திருந்த மோகனசுந்தரம் இன்று மதியம் தனது சகோதரி காரில் சுகஜோதி யுடன் (70) ஊருக்கு புறப்பட் டார்.
வாடிப்பட்டி அருகே கட்டக்குளம் பிரிவு 4 வழிச்சாலையில் வந்தபோது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அதே வேகத்தில் சாலையோர தடுப்பில் மோதி கார் தலைக்குப்புற உருண்டு கவிழ்ந்தது.
இதில் படுகாயமடைந்த மோகனசுந்தரம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காயங்களுடன் உயிருக்கு போராடிய சுகஜோதியை அங்கிருந்த வர்கள் மீட்டு வாடிப்பட்டி அரசுமருத்துவமனையில் சேர்த்தனர்.
விபத்து குறித்து வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்திய பிரியா, சப் இன்ஸ்பெக்டர் மாயாண்டி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.






