என் மலர்
மதுரை
- கீழ்மதுரை ரெயில் நிலையம் அருகே 24 கிலோ கஞ்சா பறிமுதல்; 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
- இவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்தவர்கள் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை மாநகரில் புகையிலை பொருட்கள், கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இருப்பினும் இளைஞர்களை குறிவைத்து சமூக விரோதிகள் கஞ்சா விற்பது அதிகரித்துள்ளது. மதுரையில் உள்ள கீழ்மதுரை ரெயில் நிலையம் சந்திப்பு பகுதியில் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் தெப்பக்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது கீழ்மதுரை ரெயில்நிலையம் அருகே மறைவான இடத்தில் பதுங்கியிருந்த 4 பேரை பிடித்து ேபாலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர்.
இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை சோதனை செய்தபோது 24 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. அதிர்ச்சிடைந்த போலீசார் 4 பேரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர்கள் திடீர்நகர் அலாவுதீன் தோப்பு சலீம் மகன் சசீர் (வயது23), வாடிப்பட்டி வினோபா நகர் சொக்கலிங்கபுரம் காந்தி மகன் திலீப் குமார் (22), சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வெள்ளாளர் தெரு செல்வம் மகன் குருமூர்த்தி(20), உசிலம்பட்டி வடக்கு தெரு நரியம்பட்டி சந்திரன் மகன் சரத்குமார் (22) என்று தெரியவந்தது.
இவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்தவர்கள் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மதுரையில் தொடக்கப்பள்ளி வகுப்புகள் இன்று தொடங்கின.
- ஆசிரியர்கள் இனிப்புகள் வழங்கி வரவேற்றனர்.
மதுரை
தமிழ்நாட்டில் வெயில் தாக்கத்தால் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பில் தாமதமானது. இந்நிலையில் வெயிலின் தாக்கம் ஓரளவுக்கு குறைந்ததால் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி வகுப்புகள் கடந்த 12-ந்தேதி தொடங்கின.
1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான தொடக்கப் பள்ளிகள் இன்று திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி 1 முதல் 5 வரையிலான வகுப்புகள் இன்று திறக்கப்பட்டன. அனைத்து பள்ளிகளிலும் காலை 8 மணி முதல் குழந்தைகள் புத்தகப்பையுடன் பள்ளிகளுக்கு வந்தனர்.
பள்ளிக் கூட வாசலில் முன்பு நின்றிருந்த ஆசிரியர்கள், இனிப்புகள் வழங்கியும் மலர் தூவியும் மாணவ-மாணவிகளை இன்முகத்துடன் உற்சாகமாக வரவேற்றனர். குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்ப வந்த பெற்றோர்கள், அவர்களை வாழ்த்தி அனுப்பி வைத்தனர்.
மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள், கள்ளர் சீரமைப்பு துறை சார்பில் நடத்தப்படும் பள்ளிகளில் முதல் நாளான இன்றே பாடபுத்தகங்களும் வழங்கப்பட்டன.
தனியார் பள்ளிகளிலும் இன்று முதல் 1-5 தொடக்க வகுப்புகள் தொடங்கியுள்ளது. இன்று முதல் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் முழுவதுமாக செயல்பட தொடங்கி உள்ளதால் மதுரையின் பல்வேறு இடங்களில் காலையில் வாகனங்கள் அதிகளவில் சென்றன. இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு பாடபுத்தகங்கள் கொடுக்கப்பட்ட நிலையில் பல தனியார் பள்ளிகளில் இன்னும் பாட புத்தகங்கள் வழங்கப்படவில்லை. அரசு தரப்பில் இருந்து பாடப் புத்தகங்களை தனியார் பள்ளிகளுக்கு வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக தனியார் பள்ளிகள் தெரிவித்துள்ளன.
எனவே உடனடியாக தனியார் பள்ளி மாணவர்களுக்கும் பாட புத்தகங்களை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
- மதுரை ஜீவா நகரில் தி.மு.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
- சிறப்பு அழைப்பாளராக தலைமை கழக பேச்சாளர் சென்னை அரங்கநாதன் கலந்து கொண்டு பேசினார்.
மதுரை
மதுரை ஜீவா நகரில் தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. மாநகர மாவட்ட செயலாளர் கோ.தளபதி எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பொதுமக்களுக்கு நலத்திட்டங்களை வழங்கினார். சிறப்பு அழைப்பாளராக தலைமை கழக பேச்சாளர் சென்னை அரங்கநாதன் கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில் பகுதி செயலாளர் காவேரி, 79-வது வார்டு வட்ட செயலாளர் பாலாஜி மற்றும் ஜெய்ஹிந்துபுரம் சிராஜ், சதீஸ் குமார், மரக்கடை வெங்கடேஷ், உமா மகேஸ்வரன், சிவபாலன், ஆர்.சதிஸ்குமார், அக்னி ஆகியோர் கலந்து கொண்டனர். மாநகர இளைஞரணி அமைப்பாளர் மூவேந்திரன், பகுதி இளைஞரணியை சேர்ந்த கோகுல்நாத் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.
- தி.மு.க. இளைஞரணி பொதுக்கூட்டங்கள் நடந்தது.
- தன்ராஜ் தலைமை தாங்கினார்.
அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள ஆதனூர் கிராமத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. இதற்கு கிழக்கு ஒன்றிய செயலாளர் தன்ராஜ் தலைமை தாங்கினார். அவை தலைவர் பாலசுப்பிரமணியன், பொதுக்குழு உறுப்பினர் முத்தையன், இளைஞரணி அமைப்பாளர் சந்தன கருப்பு, தி.மு.க. நிர்வாகி முருகன், ஊராட்சி மன்ற தலைவர்கள் சத்யா, செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதேபோன்று அலங்காநல்லூர் பேரூர் கழகம் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நகர செயலாளர் ரகுபதி தலைமை வகித்தார். பேரூராட்சி தலைவர் ரேணுகாஈஸ்வரி கோவிந்தராஜ், துணைத் தலைவர் சுவாமிநாதன், பேரூர் இளைஞரணி செந்தில்நாதன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். அலங்காநல்லூர் மேற்கு ஒன்றியம் பெரியஇலந்தைகுளம் கிராமத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் பரந்தாமன் தலைமை தாங்கினார். இளைஞரணி மருது, பொறியாளர் அணி ராகுல் பிரசாத், மாணவரணி பிரதாப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் போடி காமராஜ், அலெக்சாண்டர் ஆகியோர் பேசினர்.
- திருமங்கலம் அருகே இளம்பெண் மாயமானார்.
- அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.
திருமங்கலம்
திருமங்கலம் அருகே உள்ள சிவரக்கோட்டை பாண்டியன் நகரை சேர்ந்தவர் நாகேந்திரன். இவரது மகள் காயத்ரி(21). விருதுநகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதாக கூறி சென்றார். பின்னர் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.
உறவிருக்கு நாகேந்திரன் ேபான் செய்தபோது காயத்ரி அங்கு வரவில்லை என்பது தெரியவந்தது. பல இடங்களில் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடிய வில்லை. இதைத்தொடர்ந்து கள்ளிக்குடி போலீஸ் நிலையத்தில் நாகேந்திரன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காயத்ரியை தேடி வருகின்றனர்.
- வைகாசி திருவிழாவையொட்டி பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபாடு செய்தனர்.
- அக்னி சட்டி எடுக்கும் நிகழ்ச்சி நடை பெற்றது.
மேலூர்
மேலூர் நகர் அண்ணா காலனியில் உள்ள பூவாடை தொட்டிச்சி காளியம்மன், சங்கிலி கருப்புசாமி, பங்களா முனியாண்டி, அக்கினி மதுரை வீரன் சுவாமி கோவிலின் 39 ஆம் ஆண்டு வைகாசி மாத திருவிழா நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் காப்பு கட்டி 15 நாட்கள் விரதம் இருந்து வந்தனர். மண் கட்டி தெப்பகுளத்தில் இருந்து நூற்றுக்கும் மேற் பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து, அலகு குத்தி கோவிலுக்கு ஊர்வலமாக வந்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.
கோவிலில் சிறப்பு பால பிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து அம்ம னுக்கு பொங்கல் ஆராதனை சிறப்பாக நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து 50-க்கும் மேற்பட்டோர் பூங்குழி இறங்கி தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். அதன் பிறகு கிடா வெட்டி சாமியாட்டம் நடைபெற்றது. கரகம் எடுத்து, அக்னி சட்டி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை அண்ணா காலனி காட்டு நாயக்கர் விழா கமிட்டியினர் செய்தனர்.
- திருமங்கலம் அருகே அங்கன்வாடி சிறுவர்களிடம் தங்க நகைகள் திருடப்பட்டதாக உதவியாளர் மீது புகார் தெரிவிக்கப்பட்டது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம்
திருமங்கலம் அருகே லாலாபுரத்தை சேர்ந்தவர் ஜெயராமன். ஆடு மேய்த்து வருகிறார். இவரது மனைவி வைஜெயந்தி. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது. அவர்கள் அங்குள்ள நடுநிலைப்பள்ளி வளாகத்தில் செயல்படும் அங்கன்வாடியில் படிக்கின்றனர். சம்பவத்தன்று அவர்களை பள்ளியில் இருந்து ஜெயராமன் வீட்டிற்கு அழைத்து வந்தார். அப்போது சிறுவனின் கழுத்தில் இருந்த 2 கிராம் தங்க தாயத்து காணாமல் போய் இருந்தது. வழியில் விழுந்திருக்கலாம் என நினைத்த ஜெயராமன் தேடிப்பார்க்க சென்றார்.
அப்போது அங்கிருந்தவர்களிடம் விசாரித்தபோது அதே அங்கன்வாடியில் படிக்கும் முத்துமலை லட்சுமி மகன் முத்துவேல், கண்மணி செல்வன் மகன் வருண்பிரகாஷ், சங்கரேஸ்வரியின் மகள் கவுசிகா ஆகியோரின் தாயத்தும் காணாமல் போய் இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சந்தேகமடைந்த அவர்கள் அங்கன்வாடி உதவியாளராக பணிபுரியும் பள்ளப்பசேரியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மனைவி தேவியிடம் விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். இதைத்தொடர்ந்து வில்லூர் ேபாலீஸ் நிலையத்தில் ஜெயராமன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விவசாயி வீட்டில் நகை-பணம் திருடப்பட்டது.
- ஒரு மோட்டார் சைக்கிளில் 3 பேர் பின்னால் வந்தனர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள நாகையாபுரத்தை சேர்ந்தவர் ஜெயசந்திரன்(65), விவசாயி. இவரது மனைவி கலாவதி. இவர்கள் சிப்பிரெட்டி பட்டியில் வசித்து வருகின்றனர். இவர்களது 2 மகள்களுக்கும் திருமணமாகி விட்டது. சம்பவத்தன்று இருவரும் வெளியூர் சென்றிருந்தனர்.
அப்போது அருகில் வசிப்பவர்கள் வீட்டின் முன்கதவு திறந்து கிடப்பதாக செல்போனில் ஜெயசந்திரனுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அவர் ஊருக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் முன்கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் சிதறி கிடந்தன. பீரோவில் இருந்த 5½ பவுன் நகைகள், ரூ.12 ஆயிரம் திருடப்பட்டிருந்தது. யாரோ மர்ம நபர்கள் வீடு புகுந்து பணம்-நகையை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து நாகையாபுரம் போலீஸ் நிலையத்தில் ஜெயசந்திரன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பணம்-செல்போன் பறிப்பு
திருமங்கலம் அருகே உள்ள காண்டை கிராமத்தை சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மகன் இளையராஜா (வயது27). கப்பலூர் தொழிற்பேட்டையில் உள்ள ஒரு மில்லில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத் தன்று இரவு பணிக்காக பஸ்சில் சென்றார். பஸ் நிறுத்தத்தில் இறங்கி மில்லிற்கு நடந்து சென்றார். அங்குள்ள வங்கியின் அருகே சென்றபோது ஒரு மோட்டார் சைக்கிளில் 3 பேர் பின்னால் வந்தனர்.
அவர்கள் திடீரென இளைய ராஜாவை வழிமறித்தனர்.
பின்னர் கத்தியை காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த ரூ.14 ஆயிரம் மற்றும் செல்போனை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர். இதுகுறித்து திருமங்கலம் டவுன் போலீஸ் நிலையத்தில் இளையராஜா புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள்-வேன் மோதல்; தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.
- மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள பி.தொட்டியப்பட்டியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் முத்துக்குமார்(வயது24). பிளஸ்-2 முடித்துவிட்டு கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இந்தநிலையில் பாப்புரெட்டிபட்டியில் நடக்கும் திருவிழாவுக்காக விடுமுறையில் ஊருக்கு வந்தார். நண்பர்களை பார்ப்பதற்காக மோட்டார் ைசக்கிளில் சென்றார். ஆவாரம் பட்டி விலக்கு அருகே சென்றபோது எதிர்திசையில் வந்த வேன் மீது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மோதியது.
இதில் முத்துக்குமார் தூக்கி வீசப்பட்டார். படுகாயமடைந்த அவரை அங்கிருந்த வர்கள் மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் பேரையூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனளிக்காமல் முத்துக்குமார் பரிதாபமாக இறந்தார். இது குறித்து பேரையூர் போலீஸ் நிலையத்தில் முருகன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மதுரை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு பகுதியில் தூய்மை பணியில் 200-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர்.
- குப்பைகளை சேகரிக்கும் பேட்டரி வாகன ஓட்டுநர்களும் கலந்து கொண்டனர்.
மதுரை:
மதுரை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு பகுதியில் தூய்மை பணியில் 200-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் தனியார் நிறுவனம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டு வேலை பார்த்து வருகின்றனர்.
இதனிடையே துப்புரவு பணியாளர்களுக்கு தனியார் நிறுவனம் நிர்ணயிக்கப்பட்ட மாத சம்பளம் ரூ.15 ஆயிரத்துக்கு பதிலாக ரூ. 10 ஆயிரத்து 500 மட்டுமே வழங்குவதாக கூறப்படுகிறது. மேலும் சம்பளத்தை வழங்க கால தாமதம் செய்கின்றனர் எனவும், மே மாதம் சம்பளம் தற்போது வரை வழங்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக துப்புரவு பணியாளர்கள் பலமுறை மாநகராட்சி அதிகாரியிடம் புகார் அளித்தனர். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதை கண்டித்தும், ஊதிய பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தியும் இன்று காலை பெண்கள் உட்பட 200-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் துப்புரவு பணிகளை புறக்கணித்து மதுரை மாநகராட்சியின் கிழக்கு மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதில் குப்பைகளை சேகரிக்கும் பேட்டரி வாகன ஓட்டுநர்களும் கலந்து கொண்டனர்.
தகவல் அறிந்த மதுரை கிழக்கு மண்டல உதவி ஆணையர் காளிமுத்தண்ணன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது ஊதிய பிரச்சினை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதனை ஏற்ற துப்புரவு பணியாளர்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினார். துப்புரவு ஊழியர்களின் இந்த போராட்டத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
முன்னதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், வார்டு முழுவதும் குப்பைகளை அகற்றி துப்புரவு பணிகளில் ஈடுபடும் எங்களுக்கு முறையாக சம்பளம் வழங்கப்படுவதில்லை.
5-ந்தேதிக்கு பதிலாக கால தாமதம் செய்து சம்பளம் வழங்கப்படுகிறது. இதனால் குடும்பம் நடத்தவே கஷ்டமாகவே உள்ளது. மேலும் பணியில் சேரும் போது கூறிய சம்பளத்திற்கு பதிலாக குறைவாக வழங்குகிறார்கள். எனவே இது தொடர்பாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
- பேராசிரியர் வீட்டில் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
- போலீசார் மர்ம நபர்களை தேடி வரு கின்றனர்.
மதுரை
மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருபவர் அருளப்பன்(வயது53). இவர் கல்லூரி காம்பவுண்டு வளாகத்தில் குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார்.
சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு அருளப்பன் குடும்பத்துடன் வெளியே சென்றிருந்தார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.
பின்னர் பீரோவில் இருந்த 8½ பவுன் நகை, ரூ.85 ஆயிரம் ரொக்கம் மற்றும் சில்வர் பொருட்களை திருடிக் கொண்டு தப்பினர்.
இந்த நிலையில் வீடு திரும்பிய அருளப்பன் கதவு உடைக்கப்பட்டு நகை-பணம் திருடு போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து தல்லாகுளம் போலீசில் புகார் செய்யப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தி தடயங்களை சேகரித் தனர். கொள்ளை தொடர் பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மர்ம நபர்களை தேடி வரு கின்றனர்.
- கத்தியை காட்டி வழிப்பறி செய்த வாலிபரை கைது செய்தனர்.
- எதற்காக கத்தியுடன் சுற்றித்திரிந்தார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை செல்லூர்அருள்தாஸ்புரத்தை சேர்ந்தவர் செல்லப்பாண்டி (வயது 55).இவர் செல்லூர் 50 அடி ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வாலிபர் ஒருவர் அவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி செல்லபாண்டியிடம் இருந்து ரூ. 1300- ஐ பறித்து சென்றார்.
இந்த சம்பவம் குறித்து செல்லப்பாண்டி செல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட செல்லூர் குலமங்கலம் மெயின் ரோடு அன்னை சத்யா நகரை சேர்ந்த ஜெயம் மகன் கழுவ நாதன் என்ற ரஞ்சித் குமாரை (27) கைது செய்தனர்.
சுப்பிரமணியபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் ரகுநாத் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது முத்துப்பட்டி பகுதியில் கத்தியுடன் பதுங்கியிருந்த சதீஷ்குமார்(32) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் எதற்காக கத்தியுடன் சுற்றித்திரிந்தார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






