என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபாடு
    X

    பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபாடு

    • வைகாசி திருவிழாவையொட்டி பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபாடு செய்தனர்.
    • அக்னி சட்டி எடுக்கும் நிகழ்ச்சி நடை பெற்றது.

    மேலூர்

    மேலூர் நகர் அண்ணா காலனியில் உள்ள பூவாடை தொட்டிச்சி காளியம்மன், சங்கிலி கருப்புசாமி, பங்களா முனியாண்டி, அக்கினி மதுரை வீரன் சுவாமி கோவிலின் 39 ஆம் ஆண்டு வைகாசி மாத திருவிழா நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் காப்பு கட்டி 15 நாட்கள் விரதம் இருந்து வந்தனர். மண் கட்டி தெப்பகுளத்தில் இருந்து நூற்றுக்கும் மேற் பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து, அலகு குத்தி கோவிலுக்கு ஊர்வலமாக வந்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.

    கோவிலில் சிறப்பு பால பிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து அம்ம னுக்கு பொங்கல் ஆராதனை சிறப்பாக நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து 50-க்கும் மேற்பட்டோர் பூங்குழி இறங்கி தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். அதன் பிறகு கிடா வெட்டி சாமியாட்டம் நடைபெற்றது. கரகம் எடுத்து, அக்னி சட்டி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை அண்ணா காலனி காட்டு நாயக்கர் விழா கமிட்டியினர் செய்தனர்.

    Next Story
    ×