மோட்டார் சைக்கிள்-வேன் மோதல்; தனியார் நிறுவன ஊழியர் பலி

திருமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள்-வேன் மோதல்; தனியார் நிறுவன ஊழியர் பலியானார். மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
மோட்டார் சைக்கிள்-வேன் மோதல்; தனியார் நிறுவன ஊழியர் பலி
Published on

திருமங்கலம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள பி.தொட்டியப்பட்டியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் முத்துக்குமார்(வயது24). பிளஸ்-2 முடித்துவிட்டு கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

இந்தநிலையில் பாப்புரெட்டிபட்டியில் நடக்கும் திருவிழாவுக்காக விடுமுறையில் ஊருக்கு வந்தார். நண்பர்களை பார்ப்பதற்காக மோட்டார் ைசக்கிளில் சென்றார். ஆவாரம் பட்டி விலக்கு அருகே சென்றபோது எதிர்திசையில் வந்த வேன் மீது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மோதியது.

இதில் முத்துக்குமார் தூக்கி வீசப்பட்டார். படுகாயமடைந்த அவரை அங்கிருந்த வர்கள் மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் பேரையூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனளிக்காமல் முத்துக்குமார் பரிதாபமாக இறந்தார். இது குறித்து பேரையூர் போலீஸ் நிலையத்தில் முருகன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com