என் மலர்
உள்ளூர் செய்திகள்

கார் விபத்தில் அரசு ஊழியர் பலி
- கார் விபத்தில் அரசு ஊழியர் பலியானார்.
- தடுப்பில் மோதி கார் தலைக்குப்புற உருண்டு கவிழ்ந்தது.
வாடிப்பட்டி
கோவை மாவட்டம் சூலூர் சேர்ந்தவர் மோகன சுந்தரம் (வயது73). இவர் மாவட்ட வருவாய் அலுவலரின் நேர்முக உதவியாளராக பணி செய்து ஓய்வு பெற்றவர். மதுரைக்கு வந்திருந்த மோகனசுந்தரம் இன்று மதியம் தனது சகோதரி காரில் சுகஜோதி யுடன் (70) ஊருக்கு புறப்பட் டார்.
வாடிப்பட்டி அருகே கட்டக்குளம் பிரிவு 4 வழிச்சாலையில் வந்தபோது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அதே வேகத்தில் சாலையோர தடுப்பில் மோதி கார் தலைக்குப்புற உருண்டு கவிழ்ந்தது.
இதில் படுகாயமடைந்த மோகனசுந்தரம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காயங்களுடன் உயிருக்கு போராடிய சுகஜோதியை அங்கிருந்த வர்கள் மீட்டு வாடிப்பட்டி அரசுமருத்துவமனையில் சேர்த்தனர்.
விபத்து குறித்து வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்திய பிரியா, சப் இன்ஸ்பெக்டர் மாயாண்டி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.






