search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பயிர்களை சேதப்படுத்தும் காட்டு பன்றிகள், குரங்குகள்
    X

    மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. 

    பயிர்களை சேதப்படுத்தும் காட்டு பன்றிகள், குரங்குகள்

    • காட்டு பன்றிகள், குரங்குகள் பயிர்களை சேதப்படுத்துகின்றன.
    • விவசாயி களின் கோரிக்கைகளுக்கு துறை சார்ந்த அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

    மதுரை

    மதுரை மேற்கு வட்டாட்சி யர் அலுவ லகத்தில் விவசா யிகள் குறைதீர் கூட்டம் தாசில்தார் நாகராஜன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் தாலுகா அலுவலக எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் விவசா யிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை முன் வைத்தனர்.

    சேதமடைந்துள்ள துவரிமான் கண்மாய் ஷட்டரை சரி செய்ய வேண்டும். கீழமாத்தூரில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்ற வேண்டும், கீழக் குயில்குடி தட்டானூர் பொட்டக்குளம் கண்மாயில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும், துவரிமான் பகுதியில் விளை நிலங்களுக்குள் புகுந்து காட்டு பன்றிகள் குரங்குகள் பயிர்களை சேதப்படுத்துகிறது.

    அதனை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை விவசாயிகள் முன்வைத்தனர். விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு துறை சார்ந்த அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

    கூட்டத்தில் துணை வட்டாட்சியர்கள், வருவாய் அலுவலர், வி.ஏ.ஓ.க்கள், பல்வேறு துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×