கை, கால்கள் கட்டப்பட்டு மூதாட்டி கொடூரக்கொலை?

மதுரை அருகே கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மூதாட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். மர்ம நபர்கள் கொடூரமாக கொலை செய்து முட்புதரில் வீசிச்சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
பிணமாக கிடக்கும் மூதாட்டி.
பிணமாக கிடக்கும் மூதாட்டி.
Published on

மதுரை

மதுரை அருகே நாகமலை புதுக்கோட்டையை அடுத்த காலாங்கரையில் உள்ள முட்புதரில் இன்று காலை 55 வயது மதிக்கத்தக்க பெண் இறந்து கிடந்தார். இதைப்பார்த்த அந்தப்பகுதி மக்கள் உடனே நாகமலை புதுக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரி வித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது அந்த பெண்ணின் கை, கால்கள் கட்டப்பட்டிருந்தது. உடலில் பல்வேறு பாகங்களில் ரத்தக்காயங்கள் இருந்தன. எனவே மர்ம நபர்கள் அந்த பெண்ணை கொடூரமாக கொலை செய்து விட்டு முட்புதரில் வீசிச்சென்றி ருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். தொடர்ந்து அந்த பெண்ணின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோத னைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது கண்டறியப்பட்டால் அவரை கொலை செய்து வீசி சென்றவர்கள் யார்? என்பது தெரியவரும். ஆகவே பிணமாக கிடந்த பெண்ணை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com