search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "PATHAYATRA"

    • கூட்டணி அமைப்பது, மக்களிடம் பிரசாரம் செய்வது போன்றவற்றில் அனைத்து கட்சியினரும் ஈடுபட்டு உள்ளனர்.
    • திருச்சூரில் பிரதமர் மோடியால் தொடங்கப்பட்ட பிரசாரத்தின் தொடர்ச்சியே இந்த பாத யாத்திரை என்றார்.

    திருவனந்தபுரம்:

    பாராளுமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் வர உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் அதற்கான முன் பணிகளில் ஈடுபட்டு உள்ளன. கூட்டணி அமைப்பது, மக்களிடம் பிரசாரம் செய்வது போன்றவற்றில் அனைத்து கட்சியினரும் ஈடுபட்டு உள்ளனர்.

    கேரளாவில் பாரதிய ஜனதா கூட்டணியை வலுப்படுத்தும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி, கடந்த மாதம் அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது ரோடு ஷோ உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றார். இதனால் கேரளாவில் அப்போதே பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்கத் தொடங்கியது.

    இந்நிலையில் நேற்று தேசிய ஜனநாயக கூட்ட ணியின் கேரள பாதயாத்திரை தொடங்கியது. இந்த யாத்திரையை பாரதிய ஜனதாவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தொடங்கி வைப்பதாக இருந்தது. ஆனால் பீகாரில் நிலவும் அரசியல் சூழ்நிலையால் அவரது பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டது.

    இதனால், கோவா முதல்-மந்திரி பிரமோத் சாவந்த் பாதயாத்திரையை தொடங்கி வைத்தார். தேசிய ஜனநாயக கூட்டணியின் மாநில தலைவரும், மாநில பாரதிய ஜனதா தலைவ ருமான சுரேந்திரன் தலைமை தாங்கினார்.

    அப்போது அவர் பேசுகையில், மாநில அரசை விமர்சித்தும், மத்திய அரசின் சாதனைகளை வலியுறுத்தியும் பாத யாத்திரை நடக்கிறது. திருச்சூரில் பிரதமர் மோடியால் தொடங்கப்பட்ட பிரசாரத்தின் தொடர்ச்சியே இந்த பாத யாத்திரை என்றார்.

    தளிபடவு மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய மந்திரி முரளீதரன் கலந்து கொண்டு பேசினார். அப்போது மோடிக்கு உத்தரவாதம் புதிய கேரளா என்று முழக்கமிட்டார்.

    20 பாராளுமன்ற தொகுதிகள் வழியாக செல்லும் இந்த பாதயாத்திரை பிப்ரவரி 27-ந் தேதி பாலக்காட்டில் முடிவடைகிறது. வருகிற 12-ந் தேதி திருவனந்தபுரத்தில் நடை பெறும் பாதயாத்திரையை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தொடங்கி வைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நேற்று காசர்கோட்டில் தொடங்கிய பாதயாத்திரை மேல்பரம்பில் நிறைவடைந்தது. இந்த யாத்திரையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் மாநில கன்வீனர் துஷார் வெள்ளப்பள்ளி, துணைத் தலைவர் கிருஷ்ணதாஸ், தேசிய வாத கேரள காங்கிரஸ் மாநில தலைவர் குருவில்லா மேத்யூஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    • உலக நலன் வேண்டி அறுபடை வீடுகளுக்கு செல்லும் பாதயாத்திரை குழுவினர்.
    • 1,157 கிலோ மீட்டர் 67 நாட்கள் திட்டமிட்டு இந்த பாதயாத்திரை பயணத்தை தொடர்ந்து நடத்தி வருகிறோம்.

    திருப்பரங்குன்றம்

    உலக நலன் வேண்டியும், விவசாயம் செழிக்க மழை வேண்டியும் உலக மக்கள் சுபிட்சமாக வாழ வலைய பட்டி சித்தர் பச்சை காவடி ஐயா தலைமையில் 26 பேர் நடை பயண பாதயாத்திரை குழு திருப்பரங்குன்றத்திற்கு வந்தது.

    இவர்கள் கடந்த 7-ந் தேதி சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் இருந்து பாதயாத்திரையாக புறப்பட்டு 11-ந் தேதி முருகனின் ஆறாம் படை வீடான மதுரையில் உள்ள பழமுதிர் சோலைக்கு வந்தனர். தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்டு நேற்று இரவு திருப்பரங் குன்றத்திற்கு வந்து தங்கிய அவர்கள் இன்று காலையில் திருப் பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு தரிசனம் செய்தனர்.

    இதுகுறித்து வலையபட்டி சித்தர் பச்சை காவடி ஐயா நிருபர்களிடம் கூறியதாவது:- எனது 16 வயதில் அய்யப்பன் கோவி லில் தொடங்கிய இந்த பாத யாத்திரை தற்போது வரை நடைபெற்று வரு கிறது. இதுவரை 12 முறை ராமேஸ்வரம் - காசி பாதயாத்திரை சென்றும், 16 முறை திருப்பதி மற்றும் அய்யப்பன் கோவிலுக்கும் நடந்தே சென்று சாமி தரி சனம் செய்தேன்.

    தற்போது உலக நலன் வேண்டி, அனைத்து உயிர் களும் இன்புற்று வாழ வேண்டியும் அறுபடை வீடு களுக்கு பாதயாத்திரை பயணத்தை கடந்த 2016-ம் ஆண்டு தொடங்கினோம். அதன்படி முதலில் பழமுதிர் சோலை தொடர்ந்து திருப் பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலைக்கு சென்று திருத்தணியில் எங்களது நடைப் பயணத்தை நிறைவு செய் வோம். சுமார் 1,157 கிலோ மீட்டர் 67 நாட்கள் திட்ட மிட்டு இந்த பாதயாத்திரை பயணத்தை தொடர்ந்து நடத்தி வருகிறோம். இடை யில் கொரோனா காரண மாக 2 ஆண்டுகள் செல்ல முடியவில்லை.

    தற்போது 6-வது ஆண்டாக இந்த ஆன்மீக யாத்திரையை நிறைவு செய் யும் விதமாக கடந்த 7-ம் தேதி பயணத்தை தொடங்கி னோம். தினமும் இரவு ஒரு மணி அளவில் நடக்க ஆரம் பித்து காலை 9 மணி வரை நடை பயணம் செல்வோம். பின்பு நாங்கள் திட்டமிட்ட இடத்தில் தங்கி பஜனை பாடிவிட்டு தொடர்ந்து அடுத்த இடத்திற்கு செல் வோம். முருகனின் அருளால் இந்த பயணம் சிறப்பாக அமையும் என நம்புகிறோம்

    இவ்வாறு அவர் கூறி னார்.

    • அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி., கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொள்ள உள்ளார்.
    • இந்த நடைபயணத்தில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொள்வது தொடர்பாக நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகி கள் ஆலோசனை கூட்டம் பாளை மகாராஜா நகரில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்றது.

    நெல்லை:

    அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி., கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொள்ள உள்ளார்.

    இந்த நடைபயணத்தில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொள்வது தொடர்பாக நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகி கள் ஆலோசனை கூட்டம் பாளை மகாராஜா நகரில் உள்ள காங்கிரஸ் அலு வலகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு காங்கிரஸ் மாநில பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசியதாவது:-

    ராகுல்காந்தி எம்.பி. வருகிற 8-ந் தேதி காலை, கன்னியாகுமரியில் இருந்து தனது நடைபயணத்தை தொடங்குகிறார். செப்டம்பர் 8 முதல் 10-ம் தேதி வரை, 3 நாட்கள் தமிழகத்தில் நடைபயணம் மேற்கொள்கிறார்.

    தொடர்ந்து 150 நாட்கள் நடைபயணம் மேற்கொண்டு, சுமார் 3500 கி.மீ. தூரத்தை கடந்து காஷ்மீரை சென்றடை கிறார்.

    இந்த நடை பயணத்தில் நெல்லை மாவட்டத்தில் இருந்து திரளான தொண்டர்கள் கலந்து கொள்ள வேண்டும்.

    பா.ஜனதா ஆட்சியில் மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுகிறார்கள். மக்களுக்கான திட்டங்கள் எதுவும் செயல்படுத்தபட வில்லை.

    காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரும். கட்சியின் வளர்ச்சிக்காக அனைவரும் பாடுபட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் நெல்லை கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட நாங்குநேரி, ராதாபுரம் மற்றும் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    முன்னாள் மாவட்டத் தலைவர் தமிழ்ச்செல்வன், மாநில விவசாய பிரிவு செயலாளர் விவேக் முருகன், ஓ.பி.சி. பிரிவு மாநில துணைத் தலைவர் வக்கீல் காமராஜ், அம்பை முன்னாள் வட்டாரத் தலைவர் சங்கர நாராய ணன்,வள்ளியூர் வட்டார தலைவர் அல்போன்ஸ் ராஜா,மாவட்ட விவசாய பிரிவு தலைவர் ரமேஷ், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் வி.பி.துரை, இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் போத்திராஜ் வினோத், மாநில மகிளா காங்கிரஸ் பொது மற்றும் இணைச் செயலாளர்கள் குளோரிந்தால் கமலா மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள், வட்டார தலைவர்கள், நகராட்சித் தலைவர், பேரூராட்சி தலைவர்கள்,பஞ்சாயத்து தலைவர்கள் கிராம காங்கிரஸ் கமிட்டி தலை வர்கள்,வார்டு தலைவர்கள் மகளிரணி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

    • வலங்கைமான் மகா மாரியம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு, கும்பகோணம் ரோடு, கடைத்தெரு , தொழுவூர் , ஆலங்குடி வழியாக சென்று நீடாமங்கலம் கடைத்தெருவில் முடிவடைந்தது.
    • பாதயாத்திரை திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் எஸ்.எம்.பி.துரைவேலன் தலைமையில் நடைபெற்றது.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில், 75-வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு பாதயாத்திரை நடைபெற்றது.முன்னதாக வலங்கைமான் மகா மாரியம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு, கும்பகோணம் ரோடு, கடைத்தெரு , தொழுவூர் , ஆலங்குடி வழியாக சென்று நீடாமங்கலம் கடைத்தெருவில் முடிவடைந்தது .

    இந்த பாதயாத்திரை திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் எஸ் .எம் .பி. துரைவேலன் தலைமையில் வலங்கைமான் நகர காங்கிரஸ் தலைவர் ராஜி, வட்டார தலைவர் ராமலிங்கம், மாவட்ட செயலாளர் அன்பு வீரமணி ,காங்கிரஸ் தொழிற்சங்க பிரிவு மாவட்ட தலைவர் குலாம் மைதீன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது .

    மேலும் இந்த பாதயாத்திரையில் நாகை நாடாளுமன்ற தொகுதி மனித உரிமை கழக தலைவர் அன்பழகன், மன்னார்குடி வட்டார தலைவர் கனகவேல், மன்னார்குடி வட்டார ஒருங்கிணைப்பாளர் நெடுவை ராஜதுரை, குடவாசல் வட்டாரத் தலைவர் முனியய்யா, நகர தலைவர் செந்தில் , மன்னார்குடி விவசாய அணி தலைவர் கலியபெருமாள், கர்நாடக மாநில காங்கிரஸ் நிர்வாகி பாலசுப்பிரமணியன் ,மாநில மாணவரணி பொதுச்செயலாளர் புவனேஸ்வரன் , நன்னிலம் சட்டமன்றத் தொகுதி ஒருங்கிணைப்பாளர் ரஹீம் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

    • காங்கிரசார் பாதயாத்திரை சென்றனர்
    • நிர்வாகிகள், கட்சியினர் கலந்து கொண்டனர்.

    கரூர்:

    மத்திய அரசை கண்டித்து குளித்தலையில் காங்கிரஸ் சார்பில் பாதயாத்திரை நடைபயணம் நடைபெற்றது. மக்கள் விரோத, விலைவாசி உயர்வுக்கு காரணமான மத்திய அரசை கண்டித்து கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் குளித்தலை வட்டாரத்தலைவர் ஆறுமுகம் தலைமையில் சத்யாகிரக நடைபயணம் குளித்தலை சுங்கவாயிலில் தொடங்கி, பேருந்து நிலையம் வழியாக பெரியபாலம் சென்று நிறைவடைந்தது. நிர்வாகிகள், கட்சியினர் கலந்து கொண்டனர்.

    ×