search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அறுபடை வீடுகளுக்கு செல்லும் பாதயாத்திரை குழு
    X

    அறுபடை வீடுகளுக்கு செல்லும் பாதயாத்திரை குழு

    • உலக நலன் வேண்டி அறுபடை வீடுகளுக்கு செல்லும் பாதயாத்திரை குழுவினர்.
    • 1,157 கிலோ மீட்டர் 67 நாட்கள் திட்டமிட்டு இந்த பாதயாத்திரை பயணத்தை தொடர்ந்து நடத்தி வருகிறோம்.

    திருப்பரங்குன்றம்

    உலக நலன் வேண்டியும், விவசாயம் செழிக்க மழை வேண்டியும் உலக மக்கள் சுபிட்சமாக வாழ வலைய பட்டி சித்தர் பச்சை காவடி ஐயா தலைமையில் 26 பேர் நடை பயண பாதயாத்திரை குழு திருப்பரங்குன்றத்திற்கு வந்தது.

    இவர்கள் கடந்த 7-ந் தேதி சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் இருந்து பாதயாத்திரையாக புறப்பட்டு 11-ந் தேதி முருகனின் ஆறாம் படை வீடான மதுரையில் உள்ள பழமுதிர் சோலைக்கு வந்தனர். தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்டு நேற்று இரவு திருப்பரங் குன்றத்திற்கு வந்து தங்கிய அவர்கள் இன்று காலையில் திருப் பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு தரிசனம் செய்தனர்.

    இதுகுறித்து வலையபட்டி சித்தர் பச்சை காவடி ஐயா நிருபர்களிடம் கூறியதாவது:- எனது 16 வயதில் அய்யப்பன் கோவி லில் தொடங்கிய இந்த பாத யாத்திரை தற்போது வரை நடைபெற்று வரு கிறது. இதுவரை 12 முறை ராமேஸ்வரம் - காசி பாதயாத்திரை சென்றும், 16 முறை திருப்பதி மற்றும் அய்யப்பன் கோவிலுக்கும் நடந்தே சென்று சாமி தரி சனம் செய்தேன்.

    தற்போது உலக நலன் வேண்டி, அனைத்து உயிர் களும் இன்புற்று வாழ வேண்டியும் அறுபடை வீடு களுக்கு பாதயாத்திரை பயணத்தை கடந்த 2016-ம் ஆண்டு தொடங்கினோம். அதன்படி முதலில் பழமுதிர் சோலை தொடர்ந்து திருப் பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலைக்கு சென்று திருத்தணியில் எங்களது நடைப் பயணத்தை நிறைவு செய் வோம். சுமார் 1,157 கிலோ மீட்டர் 67 நாட்கள் திட்ட மிட்டு இந்த பாதயாத்திரை பயணத்தை தொடர்ந்து நடத்தி வருகிறோம். இடை யில் கொரோனா காரண மாக 2 ஆண்டுகள் செல்ல முடியவில்லை.

    தற்போது 6-வது ஆண்டாக இந்த ஆன்மீக யாத்திரையை நிறைவு செய் யும் விதமாக கடந்த 7-ம் தேதி பயணத்தை தொடங்கி னோம். தினமும் இரவு ஒரு மணி அளவில் நடக்க ஆரம் பித்து காலை 9 மணி வரை நடை பயணம் செல்வோம். பின்பு நாங்கள் திட்டமிட்ட இடத்தில் தங்கி பஜனை பாடிவிட்டு தொடர்ந்து அடுத்த இடத்திற்கு செல் வோம். முருகனின் அருளால் இந்த பயணம் சிறப்பாக அமையும் என நம்புகிறோம்

    இவ்வாறு அவர் கூறி னார்.

    Next Story
    ×