என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரமோத் சாவந்த்"

    • கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகியவை வரும் 2026-ல் தேர்தலைச் சந்திக்க உள்ளன.
    • இந்தியா ஒரு வல்லரசு என்பதை முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உலகிற்கு காட்டினார்.

    பனாஜி:

    நாடு முழுவதும் பா.ஜ.க. நிறுவன தின கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், அதன் ஒரு பகுதியாக கோவாவின் பனாஜியில் அடல் ஸ்ம்ருதி என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதல் மந்திரி பிரமோத் சாவந்த் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

    கேரளா மற்றும் தமிழ்நாட்டில் வரும் 10 ஆண்டுகளில் பா.ஜ.க. ஆட்சிக்கு வரும். இரு தென் மாநிலங்களும் 2026-ல் தேர்தலைச் சந்திக்க உள்ளன.

    அடல் பிஹாரி வாஜ்பாய் மற்றும் எல்.கே.அத்வானியின் காலத்தில் தொடங்கிய பணிகள் இப்போது பலனளிக்கின்றன. இந்தியா ஒரு வல்லரசு என்பதை முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உலகிற்கு காட்டினார். பொக்ரானில் அணு ஆயுத சோதனைகளை நடத்தினார். சோதனைகளை நடத்தும் திறன் நம்மிடம் உள்ளது என்பதை உலகிற்கு காட்டினார்.

    நாட்டில் மொபைல் போன் புரட்சியில் வாஜ்பாய் முக்கிய பங்கு வகித்தார். நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் இந்தக் கருத்தை அவர் கொண்டு சென்றார் என தெரிவித்தார்.

    • கூட்டணி அமைப்பது, மக்களிடம் பிரசாரம் செய்வது போன்றவற்றில் அனைத்து கட்சியினரும் ஈடுபட்டு உள்ளனர்.
    • திருச்சூரில் பிரதமர் மோடியால் தொடங்கப்பட்ட பிரசாரத்தின் தொடர்ச்சியே இந்த பாத யாத்திரை என்றார்.

    திருவனந்தபுரம்:

    பாராளுமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் வர உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் அதற்கான முன் பணிகளில் ஈடுபட்டு உள்ளன. கூட்டணி அமைப்பது, மக்களிடம் பிரசாரம் செய்வது போன்றவற்றில் அனைத்து கட்சியினரும் ஈடுபட்டு உள்ளனர்.

    கேரளாவில் பாரதிய ஜனதா கூட்டணியை வலுப்படுத்தும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி, கடந்த மாதம் அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது ரோடு ஷோ உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றார். இதனால் கேரளாவில் அப்போதே பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்கத் தொடங்கியது.

    இந்நிலையில் நேற்று தேசிய ஜனநாயக கூட்ட ணியின் கேரள பாதயாத்திரை தொடங்கியது. இந்த யாத்திரையை பாரதிய ஜனதாவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தொடங்கி வைப்பதாக இருந்தது. ஆனால் பீகாரில் நிலவும் அரசியல் சூழ்நிலையால் அவரது பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டது.

    இதனால், கோவா முதல்-மந்திரி பிரமோத் சாவந்த் பாதயாத்திரையை தொடங்கி வைத்தார். தேசிய ஜனநாயக கூட்டணியின் மாநில தலைவரும், மாநில பாரதிய ஜனதா தலைவ ருமான சுரேந்திரன் தலைமை தாங்கினார்.

    அப்போது அவர் பேசுகையில், மாநில அரசை விமர்சித்தும், மத்திய அரசின் சாதனைகளை வலியுறுத்தியும் பாத யாத்திரை நடக்கிறது. திருச்சூரில் பிரதமர் மோடியால் தொடங்கப்பட்ட பிரசாரத்தின் தொடர்ச்சியே இந்த பாத யாத்திரை என்றார்.

    தளிபடவு மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய மந்திரி முரளீதரன் கலந்து கொண்டு பேசினார். அப்போது மோடிக்கு உத்தரவாதம் புதிய கேரளா என்று முழக்கமிட்டார்.

    20 பாராளுமன்ற தொகுதிகள் வழியாக செல்லும் இந்த பாதயாத்திரை பிப்ரவரி 27-ந் தேதி பாலக்காட்டில் முடிவடைகிறது. வருகிற 12-ந் தேதி திருவனந்தபுரத்தில் நடை பெறும் பாதயாத்திரையை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தொடங்கி வைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நேற்று காசர்கோட்டில் தொடங்கிய பாதயாத்திரை மேல்பரம்பில் நிறைவடைந்தது. இந்த யாத்திரையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் மாநில கன்வீனர் துஷார் வெள்ளப்பள்ளி, துணைத் தலைவர் கிருஷ்ணதாஸ், தேசிய வாத கேரள காங்கிரஸ் மாநில தலைவர் குருவில்லா மேத்யூஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    ×