என் மலர்tooltip icon

    மதுரை

    • தமுக்கம் மைதானத்தில் ஆட்டோ எக்ஸ்போ-2023 கண்காட்சி நாளை வரை நடக்கிறது
    • ஓர்க்ஷாப் டூல்ஸ் உள்ளிட்டவைகள் இடம் பெற்றுள்ளன.

    மதுரை

    தமிழ்நாடு ஆட்டோ மொபைல் மற்றும் அலைடு இன்டஸ்ட்ரீஸ் பெடரேஷன் மற்றும் தமிழ்நாடு மோட்டார் பார்ட்ஸ்டீலர்ஸ் அசோசியே சன் சார்பில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாநில அளவி லான ஆட்டோமொபைல்ஸ் கண்காட்சியை நடத்துகிறது.

    இந்த ஆண்டுக்கான கண் காட்சி மதுரை தமுக்கம் மைதானத்தில் நேற்று தொடங்கியது. கண்காட் சியை சுந்தரம் மோட்டார்ஸ் நிர்வாக இயக்குனர் சரத் விஜயராகவன் திறந்து வைத் தார்.

    இதில், மதுரை மோட் டார்ஸ் பார்ட்ஸ் வியாபாரி கள் சங்கத்தலைவர் சிதம்ப ரம், டி.ஏ.ஏ.ஐ.எப், தலைவர் ராஜேஸ்வரன், கண்காட்சி தலைவர் முருகேசன், செய லாளர் சிதம்பரம், துணை தலைவர் சதீஷ்குமார், பொருளாளர் சிதம்பர நாதன், டி.வி.எஸ். ஆட்டோ மொபைல்ஸ் சொலியூ ஷன்ஸ்மேலாண்மை இயக்கு னர் சீனிவாசராகவன், ரானோ ஆப்டர் மார்க்கெட் பிசினஸ் தலைவர் கிரி பிரசாத், ரூட் இன்டஸ்ட்ரீஸ் இந்தியா நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குனர் சரவணசுந்தரம், எம்.என். ஆட்டோ புராடெக்ட்சுந்தா ராஜன், கண்காட்சி ஒருங்கி ணைப்புகுழு உறுப்பினர் ரவி, லயன் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த கண்காட்சியானது இன்றும், நாளையும் நடக்கிறது. இதில் முன்னணி இருசக்கர வாகன கார் மற்றும் நிறுவனங்கள், உதிரி பாகங் கள் தயாரிக்கும் முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 140 அரங்குகள் அமைத்துள்ளன.

    குறிப்பாக வாகனங்களின் உதிரி பாகங்கள், உயர், டியூப், பேட்டரி. பேரிங் கேபிள்கள், ஓர்க்ஷாப் டூல்ஸ் உள்ளிட்டவைகள் இடம் பெற்றுள்ளன.

    இந்த கண்காட்சி மெக்கா னிக்குகள் மட்டுமின்றி வாக னங்கள் ஓட்டுனர்கள். வாகன உரிமையாளர்க ளுக்கும் பயனுள்ளதாக இருக்கும். பார்வையா ளர்களுக்கு ஒவ்வொரு மணி நேரத்திற்கு ஒருமுறை குலுக்கல் முறையில் பரிசு கள் வழங்கப்படுகின்றன. கண் காட்சியை இலவசமாக காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை பார்வையிட லாம் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

    • தேசிய ஜிம்னாஸ்டிக் போட்டிக்கு சி.இ.ஓ.ஏ. பள்ளி மாணவி தேர்வு செய்யப்பட்டார்.
    • இதற்கான தேர்வு மதுரையில் நடைபெற்றது.

    மதுரை

    இந்திய பள்ளிகள் விளை யாட்டு குழுமத்தின் சார்பில் (எஸ்.ஜி.எப்.ஐ.) சார்பில் தேசிய அளவிலான ஜிம் னாஸ்டிக் போட்டிகள் நடக் கிறது. இதற்கான தேர்வு மதுரையில் நடைபெற்றது. இதில் கோசாகுளம் சி.இ. ஓ.ஏ. பள்ளி மாணவி பவஸ்ரீ தனது திறமையை வெளிப்ப டுத்தி தேசிய போட்டிக்கு தமிழக அணிக்காக தேர்வு ஆனார்.

    இதன் மூலம் அவர் நவம்பர் 3-ந்தேதி டெல்லி யில் நடக்கும் தேசிய போட் டியில் பங்கேற்க உள்ளார். தேசிய போட்டிக்கு தேர் வான மாணவியை, சி.இ. ஓ.ஏ. கல்வி குழும நிறுவன தலைவர் ராசா கிளைமாக்சு, தலைவர் சாமி, துணைத்த லைவர் ஜெயச்சந்திர பாண்டி, அசோகராஜ், முதன்மை தலைவர் கவுரி, மற்றும் உடல் கல்வி இயக்கு னர் செல்ல முருகன் ஆகி யோர் பாராட்டி வாழ்த்தி னர்.

    • இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது என மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறினார்.
    • காங்கிரஸ் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    மதுரை

    நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள அவரது சிலைக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாநகர் மாவட்ட தலைவர் கார்த்தி கேயன், மாணிக்கம் தாகூர் எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டனர்.

    பின்னர் மாணிக்கம் தாகூர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வருகிற நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள இந்திய கூட்டணி வலுவாக உள்ளது. தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இணைத்து வைத்த இந்த இந்தியா கூட்டணி நிச்சய மாக வெற்றி பெறும். தமிழகத்தில் தி.மு.க .தலைமையில் இந்தியா கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும். பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தன்னை முதல்-அமைச்சர் என்று தெரிவிப்பதாக கூறப்ப டுகிறது. அவர் முதலில் அரவக்குறிச்சி தொகுதியில் வெற்றி பெற்று வரட்டும். அதன் பின்பு அது குறித்து பேசலாம்.

    அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி முறிவு என்பது ஒரு நாடகமாக உள்ளது. எடப்பாடி பழனிசாமி மத்திய பா.ஜ.க. அரசின் குறைகளை சுட்டிக் காட்டுவதில்லை. அதே போல் இந்த கூட்டணி முறிவு குறித்து பா.ஜ.க. தரப்பில் எந்த அறிவிப்பும் வரவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் காங்கி ரஸ் நிர்வாகிகள் செய்யது பாபு, கவுன்சிலர் தல்லா குளம் முருகன், துரையரசன், மலர்கண்ணன், பறக்கும் படை பாலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாமில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பங்கேற்றார்.
    • காதர்பாட்ஷா முத்துராம லிங்கம் எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்த ராஜலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பசும்பொன்

    கமுதி பள்ளியில் பொதுசுகாதாரத் துறையின் சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடந்தது. அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்து கொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.

    காதர்பாட்ஷா முத்துராம லிங்கம் எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்த ராஜலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முகாமில் மருத்துவ பரிசோதனை அரங்கம், இ.சி.ஜி. பிரிவு, எக்ஸ்ரே, ரத்த பரிசோதனை நிலையம், மருந்தகம் உள்ளிட்ட அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது.

    இந்த அரங்குகளை அமைச்சர் பார்வையிட்டார். பின்னர் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை அவர் வழங்கினார். இம்முகாமில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு சிறப்பு மருத்துவர்களால் பரிசோதனைகள் செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது.

    இதில் பொதுசுகா தாரத்துறைதுணை இயக்குநர் இந்திரா (பரமக்குடி), வட்டார மருத்துவ அலுவலர் ரமீஸ், கமுதி பேரூராட்சி தலைவர் அப்துல் வகாப் சகாராணி, தி.மு.க. மத்திய ஒன்றிய செயலாளர் சண்முகநாதன், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் தமிழ்செல்வி போஸ், துணைத்தலைவர் சித்ராதேவி அய்யனார், இல்லம்தேடிக் கல்வி ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, ஊராட்சி தலைவர்கள் காவடி முருகன்(ஆனையூர்), பழனி அழகர்சாமி (கீழராமநதி), நாகரத்தினம் (பாக்கு வெட்டி), தி.மு.க. மாவட்ட பிரதிநிதிகள் நாகமணி, முருகேசன், ஒன்றிய துணைச் செயலா ளர் நீதிராஜன், மருத்து வர்கள், செவிலியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திருமங்கலத்தில் நூதன முறையில் நகை- பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
    • திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திரு மங்கலம் அருகே ஆலம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் அழகுராஜா மகன் நல்லை யன் (வயது 34). இவர் ராஜபாளையத்தில் உள்ள மாட்டுப் பண்ணையில் வேலை பார்த்து வந்துள் ளார். இவருடைய மனைவி வைஜெயந்தி. இவர் ஆலம் பட்டி கிராமத்தில் பேப்பர் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    சம்பவத்தன்று கணவன், மனைவி இருவரும் வேலைக்கு சென்று விட்ட னர். வீட்டில் இளைய மகள் சத்தியா மட்டும் தனியாக இருந்துள்ளார். இதனை அறிந்த 35 வயது மதிக்கத்தக்க பெண் மர்ம ஆசாமி ஒருவர் சத்தியாவிடம் தான் உன்னுடைய உறவினர் என்று கூறி தன்னை காட்டிக் கொண்டார். பின்னர் வீட்டில் யாரும் இல்லாதனை அறிந்த அந்த மர்ம பெண் பாத்ரூம் செல்ல வேண்டும் என சத்தி யாவிடம் கூறியுள்ளார். சத்தியவும் வீட்டிற்குள் அந்தப் பெண்ணை பாத்ரூம் செல்ல அனும தித்துள்ளார்.

    மேலும் சத்யாவை சாப்பாடு பார்சல் வாங்கி வருமாறு அந்தப் பெண் கூறியுள்ளார். சத்யாவும் அருகில் உள்ள ஹோட்டலில் உணவு வாங்கி வாந்தார். அந்த மர்ம பெண் வீட்டின் வாசலில் நின்று கொண்டு உணவை வாங்கி கொண்டு சென்று விட்டார். பின்னர் வீட்டிற்குள் வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த 14 பவுன் நகை மற்றும் ரூ. 30 ஆயிரம் பணம் திருடு போனது கண்டு அதிர்ச்சி அடைந்த சத்தியா உடனே பெற்றோரி டம் கூறியுள்ளார்.

    இதுகுறித்து நல்லையன் கொடுத்த புகாரின் பேரில் திருமங்கலம் தாலுகா போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    • மாதாந்திர பராமரிப்புக்காக மின்தடை அறிவிப்பு ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
    • மேலூர் மின்வாரியம் பலமுறை மின் நிறுத்தம் அறிவிப்பு வெளியிடுவதும், வெளியிட்ட அன்று காலை அதனை ரத்து செய்வதும் வாடிக்கையாக உள்ளது.

    மேலூர்

    மேலூர் மின்வாரிய அலுவலகத்தில் இருந்து நேற்று மேலூர் மற்றும் தனியாமங்கலம் பகுதிகளுக்கு மாதாந்திர பராமரிப்புக்காக மின்தடை அறிவிப்பு ஏற்கனவே அறி விக்கப்பட்டிருந்தது. ஆனால் நேற்று காலை திடீரென மின் தடை அறிவிப்பை ரத்து செய்து விட்டனர். மின்சாரத்தை சார்ந்து தொழில் செய்பவர்கள் தங்கள் பணியா ளர்களுக்கு ஏற்கனவே விடுமுறை அறிவித்து விட்டனர்.

    இதனால் அவர்களுக்கு நேற்று வேலை பார்க்கும் நாளில் சம்பளம் இழப்பு ஆகிவிட்டது. மேலூர் மின்வா ரியம் பலமுறை மின் நிறுத்தம் அறிவிப்பு வெளியிடுவதும், வெளியிட்ட அன்று காலை அதனை ரத்து செய்வதும் வாடிக்கையாக உள்ளது. எனவே மின்வாரியம் முன்கூட் டியே திட்டமிட்டு மேலூர் பகுதியில் மின்சார வாரியம் மின் நிறுத்த அறிவிப்பை வெளியிட வேண்டும். அடிக்கடி அறிவிப்பை வெளியிடுவதும், மாற்றுவதும் வாடிக்கையாக உள்ளது. இதனால் தொழிலாளர்கள் பலர் அன்றைய நாளில் வேலைவாய்ப்பை இழக்கும் நிலை உருவாகி உள்ளதாகவும், வருங்காலங்களில் இதனை தீர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சமையல் செய்த 2 பெண்கள் உடலில் தீ பிடித்து சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
    • வில்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே உள்ள கே.சென்னம்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி தனலட்சுமி (வயது 32). இவர் கடந்த 24-ந் தேதி வீட்டுக்கு வெளியே அடுப்பில் மண் எண்ணெய் ஊற்றி சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மண்எஎண்ணெய் தனலட்சுமி அணிந்திருந்த நைட்டியில் விழுந்து எதிர் பாராத விதமாக தீப்பிடித்த தில் பலத்த காயமடைந்தார்.

    அவரை அக்கம் பக்கத்தி னர் மீட்டு சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர். இந்நிலையில் நேற்று தன லட்சுமி சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இச்சம்பவம் குறித்து கள்ளிக்குடி போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    மதுரை மாவட்டம் வில்லூர் போலீஸ் சரகம் எம். போத்த நதியைச் சேர்ந்தவர் நாராயணசாமி. இவரது மனைவி பாண்டித்தாய் (வயது 65). பிள்ளை களுக்கு திருமணம் ஆகி தனித்தனியாக வசித்து வரு கின்றனர்.

    பாண்டித்தாய் தனியாக குடியிருந்து வருகிறார் பாண்டித்தாய் வீட்டில் கரண்ட் இல்லாததால் மண் எண்ணெய் விளக்கு வைத்து அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தபோது திடீரென மண்எண்ணெய் விளக்கு தவறி கீழே விழுந்து தீப்பிடித்ததில் பாண்டி தாய்க்கு சேலையில் தீப் பிடித்து காயம் ஏற்பட்டது.

    உடனே அக்கம் பக்கத்தி னர் உடனடியாக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாண்டித்தாய் உயிர் இழந்தார்.

    இச்சம்பவம் குறித்து மகன் விஜயகுமார் கொடுத்த புகாரின் பேரில் வில்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 11 பவுன் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
    • சி.சி.டி.வி. கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து கொள்ளை யர்களை தேடி வருகிறார்கள்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த தும்பைப் பட்டி அருகேயுள்ள து.அம்ப லகாரன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோதிமணி என்ற பனையன் (வயது 61), விவசாயி. இவரது மகன்கள் வெளிநாடுகளில் வேலை பார்த்து விட்டு தற்போது சொந்த ஊரிலேயே வசித்து வருகிறார்கள்.

    பங்களா வீட்டில் ஒரு பகுதியை ஜோதிமணியும், மற்றொரு பகுதியை அவரது மகன்களும் பயன்படுத்தி வருகின்றனர். அனைவருக் கும் திருமணமாகி குடும்பத் துடன் அங்கு தங்கியுள்ளனர்.

    இந்தநிலையில் நேற்று இரவு விவசாய பணிகளை முடித்துக்கொண்டு வீடு திரும்பிய ஜோதிமணி சாப் பிட்டுவிட்டு, தனது பேரன், பேத்திகளுடன் காற்றுக்காக போர்டிகோ பகுதியில் கட்டிலில் படுத்திருந்தார். நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    பின்னர் அந்த கும்பல் தனி அறையில் இருந்த பீரோவையும் உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த 11 பவுன் நகை மற்றும் ரூ.பல லட்சம் ரொக்கப்ப ணம் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளை யடித்து விட்டு தப்பிச்சென்ற னர்.

    இன்று அதிகாலை தூங்கி எழுந்தபோதுதான் ஜோதி மணிக்கு கொள்ளையர்கள் புகுந்திருந்தது தெரியவந்தது. உடனடியாக இதுகுறித்து மேலூர் போலீசுக்கு அவர் தகவல் தெரிவித்தார். அதன் பேரில் விரைந்து வந்த டி.எஸ்.பி. ஆர்லியாஸ் ரெபோனி, இன்ஸ்பெக்டர் மன்னவன், குற்றப்பிரிவு ஏட்டு தினேஷ் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    மேலும் கொள்ளை சம்ப வம் நடந்த வீட்டிற்கு தடய வியல் நிபுணர்கள் வந்து கொள்ளையர்கள் விட்டுச் சென்ற தடயங்களை சேக ரித்தனர். அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து கொள்ளை யர்களை தேடி வருகிறார்கள்.

    • மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த ஜெயராமனை அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.
    • கொலையுண்ட ஜெயராமன் தனியார் பள்ளி வேனில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    மேலூர்:

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே அட்டப்பட்டி கிராமத்தில் பெரியார் நினைவு சமத்துவபுரம் அமைந்துள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த பகுதியைச் சேர்ந்தவர் பரமேஸ்வரி. கணவரை இழந்த அவர் தனியாக வசித்து வருகிறார்.

    இவருக்கு சொந்தமான ஒரு வீட்டை நெருங்கிய உறவினரான கீழையூரை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் பயன்படுத்தி வருகிறார். வெங்கடேசன் சென்னையில் மருந்துக்கடை வைத்துள்ளார். இதற்கிடையே மகளின் பிறந்த நாளை கொண்டாடுவதற்காக அவர் கீழையூர் வந்திருந்தார்.

    இந்த நிகழ்ச்சியில் கீழையூரைச் சேர்ந்த அவரது நண்பரான ஜெயராமன் (வயது 42) என்பவரும் கலந்து கொண்டார். பின்னர் ஜெயராமன் மட்டும் அட்டப்பட்டியில் உள்ள வெங்கடேசனின் சமத்துவபுரம் வீட்டிற்கு வந்தார். இரவு நீண்ட நேரம் ஆகிவிட்டதால் பரமேஸ்வரியின் வீட்டின் முன்பு கட்டிலை போட்டு தூங்கினார்.

    இன்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த ஜெயராமனை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது.

    காலையில் இதைப் பார்த்த அப்பகுதியினர் கொடுத்த தகவலின் பேரில் மேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆர்லியாஸ் ரெபோனி, இன்ஸ்பெக்டர் மன்னவன், கீழவளவு சப்-இன்ஸ்பெக்டர் வேல்ச்சாமி மற்றும் போலீசார் விரைந்து வந்து கொலையுண்ட ஜெயராமனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கள்ளக்காதல் மற்றும் பெண் விவகாரத்தில் இந்த கொலை சம்பவம் நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் கீழவளவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலையுண்ட ஜெயராமன் தனியார் பள்ளி வேனில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். தற்போது அவர் வேலைக்கு செல்லாமல் இருந்தார்.

    • தமிழகத்தில் அதிக உறுப்பினர்களை கொண்ட இயக்கம் அ.தி.மு.க. என்று ஆர்.பி.உதயகுமார் பெருமிதம் கொண்டார்.
    • தமிழகத்தில் உள்ள 12 ஆயிரத்து 646 ஊராட்சிகளில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் போதிய நிதி உதவிகள் இல்லாத கார ணத்தால் மக்கள் மிகப் பெரிய துன்பத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

    மதுரை

    மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் கள்ளிக்குடி வடக்கு ஒன்றியத்தில் உள்ள அரசம்பட்டி, வலையங்கு ளம், வீரபெருமாள்குளம் சின்ன உலகாணி, பெரிய உலகாணி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அ.தி.மு.க. பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதய குமார் தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல், மாவட்ட அவைத் தலைவர் .முருகன், மாவட்ட துணை செயலாளர் தமிழ்ச்செல் வன், மாவட்ட பொருளாளர் வக்கீல் திருப்பதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.வி.கருப்பையா, கே.மாணிக்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் ஆர்.பி.உதய குமார் பேசியதாவது:-

    மதுரை புறநகர் மேற்கு மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளில் 3லட்சத்திற்கு மேற்பட்ட கழக உறுப்பினர் களை சேர்த்து சாதனை படைத்துள்ளோம். இன்றைக்கு அ.தி.மு.க.வில் 2 கோடியே 88 உறுப்பினர்கள் உள்ளனர். தமிழகத்தில் அதிக உறுப்பினர்கள் கொண்ட இயக்கமாக இந்த இயக்கத்தை எடப்பாடி பழனிசாமி உருவாக்கி உள்ளார்.

    ஒவ்வொரு பூத்துகளில் பாசறையில் 50 நபர்களும், மகளிர் அணியில் 50 நபர்க ளையும் சேர்க்க வேண்டும். அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு பூத்துகளுக்கும் 19 நபர்கள் நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதில் கழகத்தில் 5 நபர்க ளும், மகளிர் அணி பாசறை அணியில் தலா 5 நபர்களும், தகவல் தொழில்நுட்ப பிரி வில் 2 நபர்களும் தேர்ந் தெடுக்கப்பட உள்ளனர்.

    கொரோனா காலத்தில் கூட 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை தடை படுத்தாமல் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக செயல்படுத்தி எங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்றினார் என மக்கள் கூறுகிறார்கள். ஆனால் தேர்தல் காலகட்டத்தில் தி.மு.க. கூறிய 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை 150 நாட்களாக உயர்த்துவோம் என்பதை செய்யவில்லை. மேலும் தமிழகத்தில் உள்ள 12 ஆயிரத்து 646 ஊராட்சிகளில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் போதிய நிதி உதவிகள் இல்லாத கார ணத்தால் மக்கள் மிகப் பெரிய துன்பத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • உரிய முத்திரை தீர்வை-கட்டணத்துடன் பத்திரம் பதிவு செய்வதை உறுதி செய்ய வேண்டும்.
    • பொதுமக்கள் அனைத்து கட்டணங்களையும் ஆன்லைன் மூலமாகவே செலுத்தலாம்.

    மதுரை

    மதுரை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மதுரை மாவட்ட சார்பதி வாளர்கள் ஆய்வு கூட்டம் நடந்தது. அமைச்சர் மூர்த்தி தலைமை தாங்கினார். கலெக்டர் சங்கீதா முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் அமைச்சர் மூர்த்தி பேசியதாவது:-

    மதுரை வருவாய் மாவட்டத்திற்கு உட்பட்ட மதுரை வடக்கு, மதுரை தெற்கு என இரு பதிவு மாவட்டங்கள் உள்ளன. இவற்றில் 26 சார் பதிவாளர் அலுவலகங்கள் செயல்படு கின்றன. நடப்பு 2023-24 நிதி ஆண்டில் மதுரை வடக்கு பதிவு மாவட்டத்திற்கு ரூ.478 கோடி, தெற்கு மாவட்டத்திற்கு ரூ.57 ஆயிரத்து 125 கோடி வருவாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    இதில் இந்த மாதம் வரை மதுரை வடக்கு மாவட்டத்தில் ரூ.139.29 கோடியும், தெற்கு மாவட்டத்தில் ரூ.14 ஆயரத்து 159 கோடியும் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. அலு வலர்கள் தங்களது இலக்கை பூர்த்தி செய்யும் வகையில் பணியாற்ற வேண்டும்.

    மேலும் தமிழ்நாட்டில் சார்பதிவாளர் அலுவல கங்கள் அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அனைத்து கட்டணங்களையும் ஆன்லைன் மூலமாகவே செலுத்தலாம்.

    சார் பதிவாளர்கள் அரசு நிர்ணயித்துள்ள வழிகாட்டி மதிப்பு அடிப்படையில் பதிவு தாரர்கள் சொத்து மதிப்பினை பதிவு ஆவணங்களில் தவறாமல் தெரிவித்து அதற்குரிய முத்திரை தீர்வை மற்றும் பதிவு கட்டணத்தை செலுத்தி ஆவணங்களை பதிவு செய்வதை உறுதி செய்ய வேண்டும். இதில் அரசு வழிகாட்டு நெறி முறைகளை பின்பற்றாமல் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தும் வகையில் செயல்படும் சார்பதி வாளர்கள் மீது பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கூட்டத்தில் பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், துணை பதிவுத்துறை தலைவர் ரவீந்திரநாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • செல்லூர் மேம்பாலத்தில் நாளை 1-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை போக்குவரத்து தடை செய்யப்படுகிறது.
    • திண்டுக்கல் சாலை வழியாக ஆரப்பாளையம் வரும் பஸ்கள், பாத்திமா கல்லூரி சந்திப்பில் திரும்பாமல் வலதுபுறம் சென்று குரு தியேட்டர் சந்திப்பில் இடது புறம் திரும்பி ஆரப்பாளையம் செல்லலாம்.

    மதுரை

    மதுரை போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப் பதாவது:-

    மதுரை செல்லூர் தத்தனேரி ெரயில்வே மேம்பாலத்தில் ஆரப்பாளை யம் செல்ல கட்டப்பட்டு வரும் புதிய பாலத்தை இணைக்கும் பணிகள் நடை பெறுவதால் செல்லூர் மேம்பாலத்தில் நாளை 1-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை போக்குவரத்து தடை செய்யப்படுகிறது.

    எனவே திண்டுக்கல் சாலை வழியாக ஆரப்பா ளையம் வரும் பஸ்கள், பாத்திமா கல்லூரி சந்திப்பில் திரும்பாமல் வலதுபுறம் சென்று குரு தியேட்டர் சந்திப்பில் இடது புறம் திரும்பி ஆரப்பாளை யம் செல்லலாம்.

    கோரிப்பாளையம் பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் ஏ.வி. பாலம், யானைக்கல் சந்திப்பு சிம்மக்கல் ரவுண்டாணா தமிழ்சங்கம் ரோடு வழியாக ஆரப்பாளையம் - செல்ல லாம்.

    மறுமார்க்கமாக தமிழ்சங்கம் ரோடு - சிம்மக்கல் ரவுண்டாணா யானைக்கல் சந்திப்பு புதுப்பாலம் சந்திப்பு வலது புறம் திரும்பி -கோரிப்பா ளையம் சந்திப்பை அடைய லாம்.

    திண்டுக்கல் சாலை வழியாக நகருக்குள் வரும் அத்தியாவசிய கனரக வாகனங்கள் (பால் வண்டி, ரேசன் பொருட்கள், பெட் ரோல் லாரிகள்) மட்டும் பாத்திமா கல்லூரி சந்திப்பு வலது - குரு தியேட்டர் சந்திப்பு காளவாசல் சந்திப்பு இடது, அரசரடி சந்திப்பை அடைந்து தமிழ் சங்கம் ரோடு வழியாகவும் அல்லது பாத்திமா கல்லூரி சந்திப்பு இடது கூடல்நகர் ெரயில்வே மேம்பாலம்- புதுநத்தம் சாலை ஆனையூர் அய்யர் பங்களா சந்திப்பு வழியாக வும் மற்றும் மூன்றுமாவடி சந்திப்பு அழகர்கோவில் சாலை வழியாகவும் கோரிப்பாளையம் செல்ல லாம்.

    திண்டுக்கல் சாலை வழியாக நகருக்குள் வரும் இருசக்கர வாகனங்கள், இலகுரக நான்கு சக்கர வாகனங்கள் செல்லூர் பாலம் வரும் வரை மாற்றம் ஏதும் இல்லை. செல்லூர் பாலத்தின் இடதுபுறம் தத்தனேரி வழியாக பாலம் ஸ்டேசன் ரோட்டை அடைந்து கோரிப்பாளையம் பகுதிக்கு செல்லலாம்.

    மறுமார்க்கமாக கோரிப்பாளையம் சந்திப்பி லிருந்து செல்பவர்கள் செல்லூர் பாலம் வரை மாற்றம் ஏதும் இல்லை. செல்லூர் பாலத்தின் இடதுபுறம் அடியில் சர்வீஸ் சாலையில் சென்று - சப்வே வழியாக தத்தனேரி சந்திப்பில் இடதுபுறம் திரும்பி வைகை வடகரை சாலையை அடைந்து அம்மா பாலம் சந்திப்பு வழியாக செல்லலாம்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    ×