என் மலர்
நீங்கள் தேடியது "ஜிம்னாஸ்டிக்"
- நாஜிகளிடம் இருந்து மறைந்திருந்தும் ரகசியமாகவும் பயிற்சியைத் தொடர்ந்தார்.
- 5 தங்கம் உட்பட 10 ஒலிம்பிக் பதக்கங்களை வென்றுள்ளார்.
ஹங்கேரி நாட்டை சேர்ந்த உலகின் மிக வயதான ஒலிம்பிக் சாம்பியன் ஆக்னஸ் கெலெட்டி காலமானார்.
103வது வயதான அவருக்கு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில் புடாபெஸ்டில் உள்ள மருத்துவமனையில் நேற்று [வியாழக்கிழமை] அவரது உயிர் பிரிந்தது.

1921 ஆம் ஆண்டு புடாபெஸ்டில் யூத குடும்பத்தில் பிறந்த இவருக்கு ஆக்னஸ் க்ளீன் என பெயர்சூட்டப்பட்டது. பின்னர் தனது குடும்பப்பெயரை ஹங்கேரிய மொழியில் கெலேட்டி என இவர் மாற்றிக்கொண்டார். ஜிம்னாஸ்டிக்கில் ஆர்வம் கொண்ட இவர், இரண்டாம் உலகப் போரின்போது யூதப் பின்னணி காரணமாக விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க ஹிட்லரின் நாஜி அரசால் தடை விதிக்கப்பட்டது.

இருப்பினும் நாஜிகளிடம் இருந்து மறைந்திருந்தும் ரகசியமாகவும் பயிற்சியைத் தொடர்ந்தார். துரதிர்ஷ்டவசமாக, அவரது தந்தை மற்றும் பல குடும்ப உறுப்பினர்கள் ஹிட்லரின் இன அழித்தொழிப்பு வதை முகாம்களையே மிகவும் பெரியதும் கொடுமையானதுமான ஆஷ்விட்ஸ் வதை முகாமில் கொல்லப்பட்டனர்.
அழித்தொழிப்பில் இருந்து தப்பிய கெலெட்டி போருக்குப் பிறகு ஹங்கேரியின் மிகவும் வெற்றிகரமான ஜிம்னாஸ்ட் வீராங்கனையாக மாறினார். ஹெல்சின்கியில் 1952, மெல்போர்னில் 1956 ஒலிம்பிக் போட்டிகள் முதலியவற்றில் கலந்துகொண்டு 5 தங்கம் உட்பட 10 ஒலிம்பிக் பதக்கங்களை வென்றுள்ளார்.

இஸ்ரேலில் குடியேறிய அவர் ராபர்ட் பீரோ என்பவரை சந்தித்து திருமணம் செய்து கொண்டார். இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்தார்.
கெலெட்டி ஒரு உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றினார். இஸ்ரேலிய தேசிய அணிக்கு பயிற்சியாளராகவும் இருந்தார். கடந்த 2015 இல் மீண்டும் ஹங்கேரிக்கு திரும்பிய அவர் வரும் 9ம் தேதி தனது 104வது பிறந்தநாளை கொண்டாட இருந்தது குறிப்பிடத்தக்கது.
- தேசிய ஜிம்னாஸ்டிக் போட்டிக்கு சி.இ.ஓ.ஏ. பள்ளி மாணவி தேர்வு செய்யப்பட்டார்.
- இதற்கான தேர்வு மதுரையில் நடைபெற்றது.
மதுரை
இந்திய பள்ளிகள் விளை யாட்டு குழுமத்தின் சார்பில் (எஸ்.ஜி.எப்.ஐ.) சார்பில் தேசிய அளவிலான ஜிம் னாஸ்டிக் போட்டிகள் நடக் கிறது. இதற்கான தேர்வு மதுரையில் நடைபெற்றது. இதில் கோசாகுளம் சி.இ. ஓ.ஏ. பள்ளி மாணவி பவஸ்ரீ தனது திறமையை வெளிப்ப டுத்தி தேசிய போட்டிக்கு தமிழக அணிக்காக தேர்வு ஆனார்.
இதன் மூலம் அவர் நவம்பர் 3-ந்தேதி டெல்லி யில் நடக்கும் தேசிய போட் டியில் பங்கேற்க உள்ளார். தேசிய போட்டிக்கு தேர் வான மாணவியை, சி.இ. ஓ.ஏ. கல்வி குழும நிறுவன தலைவர் ராசா கிளைமாக்சு, தலைவர் சாமி, துணைத்த லைவர் ஜெயச்சந்திர பாண்டி, அசோகராஜ், முதன்மை தலைவர் கவுரி, மற்றும் உடல் கல்வி இயக்கு னர் செல்ல முருகன் ஆகி யோர் பாராட்டி வாழ்த்தி னர்.
- சிறுவர்-சிறுமிகளின் பல்வேறு திறமைகளை வீடியோக்கள் மூலம் காண முடிகிறது.
- பயனர்கள் சிறுவனின் திறமையை பாராட்டுவதோடு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.
இளம் தலைமுறையினரின் திறமைகளை வெளி உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டுவதில் சமூக வலைதளங்களும் முக்கிய அங்கம் வகிக்கின்றன. இதில் சிறுவர்-சிறுமிகளின் பல்வேறு திறமைகளை வீடியோக்கள் மூலம் காண முடிகிறது. அந்த வகையில், இன்ஸ்டாகிராமில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் சிறுவனின் ஆபாரமான வில் வித்தை திறமை பயனர்களை வியக்க வைத்துள்ளது. ருத்ரபிரதாப் சிங் என்ற அந்த சிறுவன் உடலை வளைத்து கொண்டு காலால் வில்லை எடுக்கிறான். பின்னர் ஜிம்னாஸ்டிக் நிலையில் வில் மற்றும் அம்புகளை தூக்கி இலக்கை நோக்கி அம்பை வெற்றிகரமாக எய்வது போன்ற காட்சிகள் பயனர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது.
பதிவிடப்பட்ட சிறிது நேரத்திலேயே இந்த வீடியோ 1.68 லட்சத்திற்கும் அதிகமான விருப்பங்களை பெற்றுள்ளது. தொடர்ந்து வைரலாகி வரும் இந்த வீடியோவை பார்க்கும் பயனர்கள் சிறுவனின் திறமையை பாராட்டுவதோடு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.